இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில், சம காலத்தில் கல்வி கற்று, செல்வநாயகமும் பண்டாரநாயக்காவும் தங்களது தாய்த் திருநாடான இலங்கைக்கு மீண்டிருந்தார்கள்.இவர்கள் இருவரும் தங்கள் தாய் நாடு வனமாக இருப்பதை எண்ணி மனம் உடைந்து போனார்கள்.
சிறிது காலத்தின் பின், இருவரின் கடின உழைப்பின் ஊடாக, ஒருவரும் எண்ணிப் பார்க்க முடியாதவாறு இலங்கையை நந்தவனமாக மாற்றியமைத்தார்கள். இன்று அந்நாட்டு மக்கள் உயர் தர வாழ்க்கைச் சுகங்களை அனுபவிக்க அவர்களின் கடினமான உழைப்பே வழிகோலியது.
சீனாவை எவ்வாறு வல்லரசாக மாற்றி மாசேதுங் சீனர்களின் தந்தை ஆனாரோ, அதேபோன்று செல்வநாயகமும் பண்டாரநாயக்காவும் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றி இலங்கையர்களின் நிலையான தந்தையானார்கள்.
ஆங்கிலத்தில் பேசி ஆங்கிலாக சிரித்தும் ஆங்கில உடுப்பும் போட்டுக் கொண்டு ஆங்கில மதத்தில் கைகுலுக்கி வாழ்ந்த பெரியோா்கள் இவர்களை நாம் என்றும் மறத்தல் கூடாது.
No comments:
Post a Comment