Wednesday, 15 April 2020

சிறிமாவோவின் அரசியல் வரலாறு பாகம்--1

சிறிமாவோ( ரத்வத்தை) டயஸ் பண்டாரநாயக்கா (Sirimavo Ratwatte Dias Bandaranaike) 

இலங்கையின் பிரதம மந்திரியாக மூன்று முறை, 1960-1965, 1970-1977 மற்றும் 1994-2000 ஆகிய காலப்பகுதிகளில் பதவியில் இருந்தவர். இவரே உலகிலேயே முதலாவது பெண் பிரதமருமாவார். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தவர்.

தனது கணவர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா கொல்லப்பட்டபின்னர் கட்சியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஜூலை 21, 1960 இல் முதன் முறையாக பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 1970 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்து கட்சியை வழி நடாத்தினார். 1970 பொதுத்தேர்தலில் இடதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து பெரும் வெற்றி பெற்று இரண்டாம் முறை மீண்டும் பிரதமரானார். 1977 இல் நடந்த தேர்தலில் கட்சி படு தோல்வி அடைந்தது. 1980 இல் அன்றைய ஜே. ஆர். ஜெயவர்த்தனாவின் ஆட்சியினால் ஊழல் குற்றச்சாட்டுகளில் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு குடியுரிமை பறிக்கப்பட்டு ஏழு வருடங்களுக்கு அரச பதவிகளை ஏற்கத் தடை செய்யப்பட்டார்.

1960 இல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றியீட்டிப் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது இந்தப் பதவிக்காலத்தில் "சிறி" யின் தமிழ் அகராதியின் விளக்கத்திற்கு ஏற்ப பொருள் படக்கூடியவாறு சிங்களத்தில் சிங்கள “சிறி” யினை வாகன எண் பதிவில் கட்டாயமாக்கினாா் இந்த தமிழ் சொல்லுக்கு எதிராக  எதிர்த்துப் போராடியவர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ்  செல்வநாயகம் அவர்கள்.

1970 களில் ஆட்சிக்கட்டிலுக்கு சிறிமா வந்தார் ஸ்ரீமாவோஅம்மையார் அமைத்தஅரசாங்கத்தில் கல்வி  அமைச்சராக இருந்த கலாநிதி அல்ஹஜ் பதியூதின்மஹ்மூத்  இனரீதியில் சிங்கள மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக உள்நுழைக்கும் நோக்கில் சிறிமா கல்வியில் தரப்படுத்தல் எனும் திட்டத்தைக் 1971  கொண்டு வந்து
 தமிழ்மாணவர்கள் மீது திணித்த தரப்படுத்தலாகும்.சிறிமாவோ பண்டரநாயக்காவின் ஆட்சயில் இருந்த இஸ்ஸாமிய அமைச்சரினால் சிறிமாவோ பண்டரநாயக்காவுக்கு அரசியல் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதாகும் .

சிறிமாவோ பண்டரநாயக்கா தரப்படுத்தலை எதிா்தால் சிங்கள மக்கள் மத்தியில் சிறிமாவோ பண்டரநாயக்கா தமிழர்களுக்கு சாா்பாகவும் , சிங்கள மக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றாா் என்று காட்டி ஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைக்க முடியும்.

 சிறிமாவோ பண்டரநாயக்கா தரப்படுத்தலை ஆதரித்தால் தமிழர்களின் போராட்டங்களை தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மேற்கொள்வாா் இதன் ஊடாக சிறிமாவோ பண்டரநாயக்காவை வீழ்த முடியும் என்று திட்டம் போட்டனர் இதனை நன்கு அறிந்து இருந்த சிறிமாவோ பண்டரநாயக்கா தரப்படுத்தல் முறையை சட்டமாக்கி அமுல்படுத்தினாா்.

திருகோணமலையிலே பல்கலைக் கழகத்தை நிறுவ முற்பட்டாா்   தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும் என்று கூறி எதிா்த்தாா். 

வன்னியில் பல்கலைக்கழகத்தை நிறுவ முற்பட்டாா் தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும் என்று கூறி எதிா்த்தாா்.

யாழ் பல்கலைக்கழகத்தை திறக்க முற்பட்ட பொழுது யாழ் பாணத்தில் சிங்கள குடியேற்றங்கள் நடைபெறும் என்று கூறி தற்போதைய யாழ் பல்கலைக்கழகத்தை திறக்க விடாமல் எதிா்தவர் தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்.

எப்பொழுது எல்லாம் பெளத்த சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவிக்கு வருகின்றாரோ அப்பொழுது எல்லாம் தமிழர் தேசம் எங்கும் போராட்டம் வெடிக்கும் , எப்பொழு எல்லாம் கிறிஸ்தவ சிங்கள தலைவர்ள் பதவிக்கு வந்தாா்கள அப்பொழுது எல்லாம் தேன் நிலவுடன் கூடிய ஒப்பந்தங்கள் உருவாகும்.--

சிங்கள கிறிஸ்தவ பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா கிறிஸ்தவ அரச இயந்திரத்தினதும்  அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை தன்னியல்பிலேயே தானியங்கியாகத் தொடர்ந்து மேற்கொள்ளவல்லது. சிங்கள கிறிஸ்தவ பேரினவாதம் எப்போதும் தனது பேரின வெறியில் பரிணாம வளர்ச்சி கண்டே வந்துள்ளது.கிறிஸ்தவ மேற்குலகின் போக்கிரித்தனத்தால் உருவான நல்லிணக்கப் போர்வையைப் போர்த்திச் சிங்கள கிறிஸ்தவ பேரின வெறியிலிருந்து வெளிக்கிளம்பும் பிணவாடையை மறைத்துவிட முடியாது.

 தமிழரசு கட்சி தமிழ் மக்களிற்கு ஒளிமயமான வாழ்க்கையை உருவாக்க அரசியலமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து சாதித்துக் காட்டப் போவதாகச் சொல்லுவது அரசியற் போக்கிரித்தனத்தின் உச்சமே என்பதில் மறுபேச்சுக்கிடமில்லை.

No comments:

Post a Comment