தமிழ்த் தேசியம் சிங்கள இனவாதம் என தமிழ்மக்களுக்கு பூச்சாண்டி காட்டிய தமிழரசுக்கட்சி சைவதமிழர்களையும் ,சிங்களபெளத்த மக்களை பகைவார்களாக்கி மோதவிட்டது தமிழரசு கட்சி.
தமிழ்தேசி அடையாளக்கூறுகளை ஏற்காத தமிழரசு கட்சி தமிழ் தேசியம் பேசியது எதற்காக? தமிழரசு கட்சி தமிழ் தேசியத்தைக் கட்டிக்காக்க என்ன செய்தது? தெய்வீக தமிழ் போற்றிய தெய்வீக பண்பாடுகளை காப்பாற்ற என்ன செய்தாா்கள் ?
உயிர் தமிழுக்கு என்று பொங்கு பொங்கு என்று பொங்கிய இவர்கள் தமிழுக்காக என்ன செய்தார்கள்?தமிழ் தேசியத்தை வலுப்படுத்த என்ன செய்தார்கள்?என் திட்டங்கள் இருந்தன? யாழ்ப்பாணத்தில் மேடைபோட்டு இனவாதம் பேசி சைவ இஞைஞ்ஞர்களை யுத்த களத்திற்கு அனுப்பி பலியிட்டதை தவிர என்ன செய்தார்கள்.?
பெரும்பான்மைத் தமிழர்கள் தென்னிலங்கையிலேயே வாழ்ந்தனர்.அந்த தமிழர்கள் தொடர்பாக என்றாவது தமிழரசு கட்சி சிந்தித்ததா? வடக்கு கிழக்குக்கு வெளியே புத்தளம் மாவட்டம் இருந்தது.இங்கே தமிழர்களே புத்தளம்,சிலாபம் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.இவர்களைப் பற்றி என்றாவது சிந்தித்தார்களா?அம்பாறை கந்தளாய் திட்டங்களால் தமிழர் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள்.அன்றைய காலங்களில் காணி அதிகாரம் அரச அதிபர்,பிரிவுக் காரியாதிகாரி,மாவட்டக் காணி அதிகாரிகளிடமே இருந்தது.இந்தக் குடியேற்றங்களில் தமிழர்களுக்கும் பங்குகள் கிடைத்தன.அன்றைய காலங்களில் கிழக்குத் தமிழர்கள் போதியளவு நிலவளங்களோடு வாழ்ந்தார்கள்.இதனால் இந்தக் குடியேற்றங்களில் அக்கறை கொள்ளவில்லை.இங்கே குடியேற்ற தகுதியான மக்களை தமிழ்அரசியல்வாதிகள் தேடவில்லை.இன்னமும் அம்பாறை திருகோணமலையில் நகர சுத்தி தொழிலாளர்களுக்கு காணிகள் இல்லை.இன்றளவும் இந்த மக்கள் பற்றிய கரிசனை இல்லை.தவறுகள் யாருடையது?அன்றைய கல்லோயா கந்தளாய் தொடங்கி இன்றுவரை சிங்கள அரசியல்வாதிகள் நிலமற்ற ஏழைகளுக்கே காணிகளை வழங்குகிறார்கள்.அன்று வடக்கு யாழ்ப்பாணத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களில் பலர் காணிகள் இல்லை.வறுமையானவர்களாகவே வாழ்ந்தார்கள்.இவர்களை இந்தப் பகுதிகளில் குடியேற்றி இருந்தால் இன்று பூர்வீக நிலவளம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.இன்றைய யாழ்பாண மக்கள் நெருக்கடி குறைந்திருக்கும்.
1972 வரை யாழ் குடாநாட்டுக்கு வெளியே தமிழர்களுக்கு நல்ல பாடசாலைகள் இல்லை.நல்ல ஆசிரியர்கள் இல்லை.நல்ல கல்விபெற யாழ்ப்பாணமே வரவேண்டி இருந்தது.இதற்காக தமிழ் அரசியல் தலைவர்கள் செய்தது என்ன?நல்ல வைத்தியர்,வைத்தியசாலை கூட இல்லை.இதற்கெல்லாம் இனவாதமா காரணம்? அரசாங்கமா பொறுப்பு?
No comments:
Post a Comment