சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பம் தமிழக பண்டாரம் மற்றும் நாயக்கர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். இவர்களின் மூதாதையர்கள் இந்து மதத்தவர்கள். தமிழகத்திற்குள் ஊடுருவிய கொலை வெறி, கொள்ளை மற்றும் கட்டாய மத மாற்றத்தை நிகழ்த்திய முஸ்லீம் முகலாயப் படைகளை எதிர்த்துப் போராடியவர்கள். இதை அறிந்த பௌத்த துறவிகளால் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்கள். இப்படியாக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்களே சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பம். இவர்களே பின்னாளில் இலங்கையின் அரச குடும்பமானார்கள்.
ஐரோப்பிய படையெடுப்புகளால் படிப்படியாக இலங்கை இராட்சியங்கள் ஐரோப்பியர்களின் கையில் விழும் நிலைக்கு உள்ளானது. இவ்வாறு சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பமும் ஐரோப்பியர்களின் கைகளில் அகப்பட்டதை தொடர்ந்து கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றப்பட்டு மேற்கத்தேய அடிமைகளானார்கள்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பத்திற்கு கிறிஸ்தவ மதச் சான்றிதழ்களும் கிறிஸ்தவ ஆங்கிலேயப் பெயர்களும் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறே சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தந்தையார் பெயர் பார்ன்சு (Barnes), தாயார் பெயர் ரோசலின் ஹில்டா (Rosalind Hilda) ஆக வேற்று மத மொழிப் பெயர்கள் வழங்கப்பட்டிருந்தது. இப்படியாக ஆங்கிலேய ஆட்சியின் தூண்களாக இருந்து, அடிமைகள் போன்று சேவகம் புரிந்து வந்தவர்கள்தான் சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின், இறுதியில் கிறிஸ்தவர்களான இலங்கையின் முதல் பிரதமர் டான் ஸ்டீபன் சேனாநாயக்கா, பிரதமர் சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா, இலங்கையின் ஜனாதிபதி ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா, பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்ற பல கிறிஸ்தவ அடிமைக் குடும்பங்கள் இலங்கையின் சாதாரண அப்பாவி பௌத்த மக்களால் தாக்கப்பட்டார்கள். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான ஆளும்வர்க்கத்தை சேர்ந்த பலர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய இந்துக்கள்.
இவர்கள் இறுதிவரை உறுதியான மதப்பற்றுடன் காணப்பட்ட பௌத்தர்களால் தாக்கப்பட்டதற்கு ஓர் காரணம் இருக்கிறது. அதாவது, பௌத்தர்கள் இவர்களால் இழிவாக நடத்தப்பட்டது மட்டுமல்லாமல் இவர்களது வளங்களையும் உழைப்புகளையும் அன்னியர்களுக்கும் கடத்திக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
பௌத்தர்களுக்கும் சிங்கள கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து சிங்கள கிறிஸ்தவ ஆளும் சமூகம் தங்களை பௌத்தர்களாகவோ அல்லது பௌத்தர்கள் போன்றோ பாசாங்கு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இதில் சிறிமாவோ பண்டாரநாயக்கா குடும்பமும் அடங்கும்.
பௌத்த மீள் எழுச்சி காலத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிறந்ததன் விழைவாக, அவர் கிறிஸ்தவ ஆங்கில மொழிக் கல்லூரியில், கிறிஸ்தவ துறவிப் பெண்ணின் மேற்பார்வையில் கல்வி கற்றாலும் அவரை பௌத்த பெண்ணாக வெளியில் காட்ட வேண்டிய தேவை இவரின் பெற்றோருக்கு இருந்தது. ஆகையால், இவரை சிங்கள மக்கள் பௌத்தராகவே பார்த்தார்கள். இவரின் கணவர் பௌத்த துறவியால் கொலை செய்யும் வரை கிறிஸ்தவராகவே வாழ்ந்தார்.
பௌத்தர்களும் சைவர்களும் காலகாலமாய் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதை அவதானித்த கிறிஸ்தவ மிசனறிகள் திட்டமிட்டு செய்யப்பட்ட சதியே தமிழ் சிங்கள முரண்பாடு ஆகும். இவர்களால் உருவாக்கப்பட்ட யுத்தத்தின் மூலம் சிந்திய சைவ பௌத்த மக்களின் குருதியில் இன்றும் இலங்கைத் தீவு மிதந்த வண்ணம் உள்ளது. இந்த கொலை வெறி நாடகத்தில் சிறிமாவோ பண்டாரநாயக்காவும் முக்கிய பாத்திரத்தை வகித்தது மட்டுமல்லாது இன்றும் இரத்தம் தோய்ந்த கையுடன் ஆவியாய் வலம் வருகின்றார்.
கிறிஸ்தவத்தின் மறைமுகப் படையான கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து ஆட்சியை பிடித்த இவர், சிங்களத்திற்கும் தாய் மொழியாக விளங்கும் உலக மொழிகளுக்கெல்லாம் மூத்த மொழியான தமிழை வேர் அறுப்பதில் பெரும் பங்காற்றினார். தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களின் வாய்களில் சிங்கள மொழியை வலிந்து திணித்து இந்து மத இன அழிப்புப் போன்று தமிழ் மொழி இன அழிப்பில் ஈடுபட்டார். இதிலுள்ள வேடிக்கை யாதெனில் இவர்களுக்கே சிங்களம் சரிவரத் தெரியாது.
சிறிமாவோ பண்டாரநாயக்கா, தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை நிறுவி துப்பாக்கிகளும் வழங்கியிருந்தார். இதன் மூலம் தமிழ் மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். தமிழ் மக்களையும் சிங்கள மக்களையும் ஓர் புரிந்துணர்வுடன் இணைந்து வாழ வைப்பதற்கு பதிலாக அச்ச உணர்வை ஏற்படுத்தும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுவி, இன முரண்பாட்டை மேலும் வீரியமடையச் செய்தார்.
இவரின் ஆட்சிக் காலத்தில் எங்கும் போராட்டங்களும் ஹர்த்தால்களும் இடம் பெற்ற வண்ணமிருந்தன. மக்கள் விடுதலை முன்னணி (JVP) மார்க்சியம் – லெனினிசம் என்னும் கொள்கையை முன்னிறுத்தி புரட்சியில் ஈடுபட்டார்கள். இக் கொள்கையானது கடவுள் மறுப்பு சமத்துவக் கொள்கையாகும். இத் தத்துவத்தை மிகவும் அழகாகப் பயன்படுத்துவதில் கிறிஸ்தவ மதம்பரப்பும் மிசனறிகள் வல்லவர்களாக திகழ்ந்து வருகிறார்கள்.
மார்க்சிய – லெனினிச கொள்கை ஒருவரின் மத நம்பிக்கையை இலகுவில் அழித்து விடும். இதில் இணைபவர்கள் சிறிது காலத்தில் மனச் சிதைவடைந்து மூளைத் தடுமாற்றம் அடைவார்கள், அப்போது கிறிஸ்தவ மிசனறிகள் அவர்களை அணுகி மதம் மாற்றுவதில் ஈடுபடுவார்கள், முன்னாள் JVP போராளிகள் மற்றும் புலிகள் மத்தியில் இடம்பெறும் மதமாற்றம் இதற்கு ஓர் சிறந்த எடுத்துக் காட்டாகும். மற்றும் ஓர் எடுத்துக் காட்டு, கோயிலுக்குள் மாட்டை வெட்டி உண்ண வேண்டும் என்பதும் தங்கள் தனி நாட்டுக் கொள்கையில் ஒன்று என்று கூறி வந்த மார்க்சிய – லெனினிச ஆயுதக் குழுவான EPRLF இன் வன்னி மாவட்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அண்ணாமலை நடேசு சிவசக்தி ஆனந்தன் மதம் மாறி, ஓர் கிறிஸ்தவ போதகராக நடப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.
இதனாலேயே, மதமாற்றும் மெதடிஸ் திருச்சபையின் துணைத்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முக்கிய பொறுப்பில் உள்ளவருமான மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் மக்கள் விடுதலை முன்னணி (JVP) யுடன் இணைந்து தீர்வு பெற்றுத் தருவதாக தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார். கிறிஸ்தவ இஸ்லாமிய மதப் போதகர்களால் மதத்ததின் பெயரால் இனவழிப்பு செய்வதைத் தவிர, வேறு எந்தப் புல்லையும் பிடுங்கியதாக வரலாறில்லை.
சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்திலேயே கிறிஸ்தவரான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா) அரசியலமைப்பு நிர்ணய சபையை பகிஷ்கரித்ததோடு ஒரு தனிநாட்டு கோரிக்கை பிரேரணையை முன் வைத்தார். தமிழ் இளைஞர்களையும் ஆயுதம் தூக்குவதற்கு ஊக்கப்படுத்தியிருந்தார். இவ்வாறு கிறிஸ்தவ மிசனறிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் இறுதியில் வெற்றியடையவில்லை. ஆனால், கிறிஸ்தவ இஸ்லாமியர்களின் மாற்றம் மட்டும் இலங்கையில் ஊதி பெருகியுள்ளது.
பல்கலைக்கழக அனுமதி தொடர்பான தரப்படுத்தல் முறை சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தமிழ் மாணவர்கள் எண்ணிக்கை வெட்டிக் குறைக்கப்பட்டது. தமிழர் தவிர்ந்த முஸ்லீம் சிங்கள மாணவர்கள் குறைந்த புள்ளிகளுடன் பல்கலைக்கழகம் நுளையும் வாய்ப்பை அள்ளி வழங்கியிருந்தது. இதில் தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்கள் என்ற நிலைக்கு அப்பால் ஓரு நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான கல்வி வளம் வெட்டிச் சாய்க்கப்பட்டது என்பதே ஒரு வேதனையான விடயம். இலங்கையின் கல்வியை சரித்து வீழ்த்தியதில் முஸ்லீம் அமைச்சர் ஒருவர் கடுமையாக செயல்பட்டிருந்தார். இவருக்கு பின்னால் பல முஸ்லீம் சபைகளும் செயல்ப்பட்டிருந்தன.
கிறிஸ்தவமும் இஸ்லாமும் ஒருவருக்கு ஒருவர் பகைமதங்கள். ஆனால், பௌத்தத்தையும் சைவத்தையும் அழிப்பதில் என்றும் இல்லாதவாறு இலங்கையில் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது. இதை எதிர் கொள்ளுவதற்கு, பௌத்த இந்து எழுச்சி காலத்தின் கட்டாயமாய் உள்ளது.
அருளகம்
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_18.html
No comments:
Post a Comment