வற்றாப்பளை நந்திக் கடல் ஓரத்தில் கண்ணகி அம்மன் கோயில் அருவி ஆற்றின் கரை ஓரத்தில், மருதமடுவில் கண்ணகி அம்மன் கோயில், இரண்டையும் கட்டுவித்தவன் கயவாகு மன்னன்.
கயவாகு வேந்தன் கண்டெடுத்த பெருவிழா அநுராதபுரத்தில் ஆடியில் முழுநிலா நாளில் எடுத்த ஆடி பெருவிழா பத்தினிப் பெருவிழா நடத்தியவன்.
அன்று தொடக்கம் இன்றுவரை கலையாமல் குலையாமல் பெருவிழாவாகப் பெரகராவாகத் தொடர்கிறது
தமிழ் பெண்ணைப் போற்றிப் பாராட்டித் நாம் தமிழர் என்று தொங்குகின்ற கூக்கிறல் போடுகின்ற கிறிஸ்தவர்களோ , இஸ்ஸாமியர்களோ தமிழ் பண்பாடுகளை போற்றி தமிழ் பணபாட்டு முறை வழி நின்று விழா எடுப்பதில்லை.
நாங்கள் திராவிடர்கள் தெலுங்கரோ கன்னடரோ ,மலையாளிகளோ, கொங்கரோ ,கங்கரோ, வடநாட்டவர் ,எவருமோ திராவிட பெண்ணுக்கு விழா எடுப்பதில்லை.
தமிழ் பெண் தெயவமான கண்ணகிக்கு கயவாகு மன்னன் வழி நின்று பெளத்த சிங்கள மக்களே விழா எடுக்கிறார்கள்..தமிழர் அல்லாத ஒரே ஒரு இனம் சிங்கள மொழி - புத்த சமய மக்களினம் கண்ணகியைப் போற்றுகின்றார்கள் பாராட்டு விழா எடுக்கின்றார்கள் ஆண்டுதோறும் பத்தினி விழாக் கொண்டாடுகின்றார்கள் ஊர்கள் தோறும் பத்தினித் தெய்வத்திற்குக் கோயில் வைத்திருக்கிறார்கள்.
கயவாகு கட்டிய கண்ணகி அம்மன் கோயில், மருதமடுவில் 1700 ஆண்டுகளாகத் தொடர்ந்து வழிபாட்டில் இருந்தது. இப்பிரதேசத்தில் உள்ள ஊர்களையும் வழிபாட்டிடங்களையும் விளக்கமாகப் பதிந்த கத்தோலிக்கரான சைமன் காசிச் செட்டி, மருதமடுவில் கிருத்தவ தேவாலாயம் இருந்ததைப் பதியவில்லை. (Ceylon Gazetteer, Simon Casie Chetty).
இலங்கைக்குப் பயணித்துப் பார்த்த இடங்களைப் திபி. 1838இல் பதிந்த யேம்சு கோர்டினர் மடுத் தேவாலயம் பற்றி எதுவும் கூறவில்லை. (A Description of Ceylon by Rev. James Cordinor)
1700 ஆண்டுகள் தொடர்ச்சியாக மருதமடுவில் கண்ணகி அம்மன் கோயில் இருந்தது. கயவாகு கட்டிய கோயில் அங்கு இருந்ததை, திபி. 1930இல் ஆங்கிலேயர் ஆர். இடபிள்யூ. இலேவரசர், தான் எழுதிய வடமத்திய மாகாணக் கையேடு நூலில் பதிந்துள்ளார் (Manual of the North Central Province, page 111 by R. W. Levers).
கத்தோலிக்கர் திபி. 1922இல் அக்கோயிலை இடித்தனர். சைவர் மனத்தைப் புண்ணாக்கினர். வட மத்திய மாகாணமெங்கும் வாழ்ந்த புத்தர் பத்தினித் தெய்வம் என வழிபட்ட கோயில். புத்தரின் மனத்தையும் கத்தோலிக்கர் புண்ணாக்கினர்.
சிலையா மருதமடுவில் கத்தோலிக்க தேவாயத்துக்கு அடிக்கல் நாட்டிய ஆண்டு திபி. 1922. விளக்கமாக இச் செய்தியை எழுதியவர் யே. பி. உலூயிசர் (Manual of the Vanni districts (Vavuniya and Mullaittivu) of the Northern Province, Ceylon by J. P. Lewis).
மன்னார் மடு கண்ணகி அமமன் ஆலயத்தை இடித்து அதன் மேல் இன்றைய மடு Church கட்டிய போர்த்துக்கீசரின் திருட்டு வம்சா வழியினரின் இன்றைய சந்ததியினர் தமிழர்களின் "ஆடி பெருவிழாவை " மடுமாத ஆடி விழாவாக கொண்டாடுகின்றாா்கள்.
கயவாகு மன்னனின் மன்னார் மடு கண்ணகி அமமன் ஆலயம் அதே இடத்தில் பெளத்த பீடங்களின் உதவியுடன் , பெளத்த சிங்கள மக்களையும் இனைத்து தமிழர்களையும் , பெளத்த சிங்கள மக்களை தொடர்ச்சியாக முரன் பாட்டுக்குள் வைத்துக் கொண்டு மோதவைக்கும் அந்த அன்னிய ஆக்கிரமிப்பு சிலுவையை பிடிங்கி எறிந்து மீண்டும் உருவாக்கப் படல் வேண்டும்.
மன்னாரின் மருதமடு சிவபூமி. மன்னார் சிவபூமி.
'மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூடுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே'
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_79.html
No comments:
Post a Comment