Thursday, 2 April 2020

இலங்கை சுதந்திரக் கட்சி.

சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (Solomon West Ridgeway Dias Bandaranaike)   பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார்.

பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது வம்சாவளிகள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், கண்டி இராச்சியத்தில் ஆலயம் ஒன்றின் பூசகராகப் பணியாற்றிய நீலப்பெருமாள் பாண்டாரம் என அழைக்கப்படுபவரிடம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

பின்னர் தங்கள் பெயரை பண்டாரநாயக்க என சிங்கள வடிவில் மாற்றியது, பின்னர் போர்த்துக்கேயக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இடம்பெயர்ந்து டயஸ் என்ற பெயரை ஏற்றுக்கொண்டது. அவர்கள் போர்த்துகீசியம், டச்சு மற்றும் பிரித்தானிய மொழிபெயர்ப்பாளர்களாகப் பணியாற்றினர்.

சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். 

பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்து கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார். இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர்.

சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார்.இலங்கையின் முதல் பிரதமரான ரோமன் கத்தோலிக்கரான டான் ஸ்டீபன் சேனாநாயக்கா மதரீதியாக முரன் பட்டுக் கொண்டு 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார். 

இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தவரும் இலங்கையின் நான்காவது பிரதமருமான சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா பிறப்பால்  ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டியவர்  தமிழர்களுக்கு எதிரான  "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" சட்ட மூலத்தை கொண்டு வந்து நிறை வேற்றியவர் தமிழர்களுக்கு எதிரான பல படுகொலைகளையும் செய்தவர் ஆவாா்.

1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார்.தமிழ்மக்களுக்கும் பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கினாா்.   இதன் ஊடாக தன் மத ஆதிக்கத்திற்காக மொழியை பயன் படுத்தி கொண்டாா்.

ஜூன் 5, 1956 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிராக காலி முகத்திடலில் சத்தியாக்கிரக முறையில் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை குழப்பும் விதத்தில் சிங்கள கிறிஸ்தவ வன்முறைக் குழுக்களால் தாக்கப்பட்டனர். இந்த வன்முறையை தடுக்கப் பார்த்துக் கொண்டிருந்த காவற்துறையினர் எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த வன்முறை  கொழும்பிலும் பின்னர் பிற இடங்களிலும் பரவியதன் விளைவாக  600 மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர் இந்த வன்முறைக்கு பெளத்த சிங்கள மக்களை ஏவிவிடடவர்கள் சிங்கள கிறிஸ்தவர்கள். 

கல்லோயா படுகொலைகள்.

  இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல் ஆகும்  1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது.  1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது.  சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர். 700 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கல்லோயா திட்டத்தின் ஊடாக50 புதிய ஊர்கள் நிறுவப்பட்டிருந்தன. இவற்றில் தமிழர்கள், சிங்களவர்கள், இசுலாமியர்கள், மற்றும் சில வேடர்களும் குடியேற்றப்பட்டனர். இவர்களில் 50% சிங்களவர்களாக இருந்தனர்.

சிங்களம் மட்டும் சட்டம்.

சிங்களம் மட்டும் சட்டம் (Sinhala Only Act) அல்லது அதிகாரபூர்வமாக 1956 ம் ஆண்டின் 33ம் இலக்க அரசகரும மொழிகள் சட்டம் (Official Language Act) என்பது எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்தால் 1956 ஆம் ஆண்டு சூன் 5 ஆம் நாள் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட "சிங்களம் மட்டுமே இலங்கையின் அரசகரும மொழி" என்ற சட்டத்தைக் குறிக்கும். இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையின் ஆட்சிமொழியான ஆங்கில மொழி அகற்றப்பட்டு 70% பெரும்பான்மை சிங்களவர்கள் பேசும் சிங்கள மொழி ஆட்சி மொழியாக்கப்பட்டது.  இச்சட்டமூலத்தின் காரணமாக அரசுப்பணியில் உள்ள தமிழர்களும் சிங்களம் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டார்கள்.இதனை கொண்டு வந்தவர் பெளத்த போர்வைக்குள் பதுங்கி இருந்த சொலமன் வெஸ்ட் ரிட்ச்வே டயஸ் பண்டாரநாயக்கா என்ற கிறிஸ்தவர்.

 ஜூலை 26, 1957 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம்  "பண்டா செல்வா " ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்டது இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் பண்டா செல்வா ஒப்பந்தத்தின் ஒரு பிரதியைக் கிழித்தெறிந்து ஒப்பந்தம் செத்துவிட்டது எனப் பிரகடனம் செய்தார்எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா .

தமிழர் படுகொலைகள் 1958 மே 22 முதல் மே 27 வரை இடம்பெற்ற இவ்வழிப்பில்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 500 வரையென அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 26, 1959 தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன.

1972 ஸ்ரீலங்கா-சமசமாஜ-கம்யூனிஸ்ட் அரசியலமைப்பு,பெளத்த மதம் அரச மதமாக பிரகடனம் .

1972 அரசியலமைப்புச் சட்டத்தினுள் பெளத்த மதம் அரச மதமாக பிரகடனம் செய்யப்பட்டது. 1972 அரசியலமைப்புச் சட்டத்தின் இரண்டாவது சரத்து, "இலங்கை மக்கள் குடியரசு பெளத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கும் அதே சமயம் அதன் பிரகாரம் பெளத்த மதத்தினைப் பாதுகாப்பதும் வளர்ப்பதும் அரசின் பொறுப்பாகும்" என்றது.

பெளத்த மதத்தை கோலோச்ச செய்யும் இந்த நடவடிக்கையானது முக்கியமாக அன்று பெரும்பான்மையாக இந்து சமயத்தினை பின்பற்றும் தமிழ் மக்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட்டது என்பதை ஆளும் வர்க்கம் அங்கீரித்து ஒப்புக்கொண்டது.

இதனை இரண்டு விடயங்கள் சுட்டிக்காட்டின: 1. கத்தோலிக்க, கிறிஸ்தவ மத ஸ்தாபனங்களின் அங்கீகாரம் அதற்குக் கிடைத்தமை. 2. யூ.என்.பி. சிறப்பாக அந்த சரத்துக்கு ஆதரவு வழங்கியமை.

இலங்கை சுதந்திரக் கட்சி பெளத்த போா்வைக்குள் பதுங்கி இருந்து கொண்டு தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் முரன்பாடுகளை உருவாக்கி கிறிஸ்தவதேசியத்தை வளர்க்கும் சத்தியாகவே செயல்பட்டு வந்து உள்ளதை அவதானிக்க கூடியதாகவே உள்ளது.
அருளகம்



 




.


No comments:

Post a Comment