Tuesday, 7 April 2020
இலங்கை அரசியல் பாகம் ---2
இலங்கை சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரும் இலங்கையின் நான்காவது பிரதமருமாகிய சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா பிறப்பால் ஒரு கிறிஸ்தவர். இருந்த போதிலும், அரசியல் தேவைகளுக்காக, தன்னை கடும் போக்கு சிங்கள பௌத்தராக அடையாளப்படுத்தி வந்தார். இதுவும் பெரிய அளவில் எடுபடாததால் சிங்களம் மட்டுமே இலங்கையின் அரச கரும மொழி என்னும் சட்டத்தை கொண்டு வந்த இவர், ஆரம்பத்தில் சிங்கள மகா சபையை உருவாக்கியிருந்தார். இச் சபையானது ஐக்கிய தேசியக் கட்சியின் சகோதர அமைப்பாக பல காலம் செயல்ப்பட்டது.
இவரின் இச் செயல் அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற நிலையில் அப்பாவி சிங்கள மக்களை தமிழ் விரோத இனவாதிகளாக மாற்றியது. பிரித்தானியாவில் கல்வி கற்ற இவர் அப்பாவி தமிழ் சிங்கள மக்களின் இரத்தங்கள் இலங்கை பூராகவும் ஓடுவதற்கு அடித்தளமிட்ட கிறிஸ்தவ தலைவர்களில் முக்கியமான ஒருவர். பௌத்த சிங்களவர்களுக்கு எவ்வாறு ஒரு கிறிஸ்தவ இனவாதி கிடைக்கப்பெற்றது போன்றே சைவத் தமிழர்களுக்கும் கிடைக்கப்பெற்றவர் தான் பிரித்தானியாவில் கல்வி கற்ற தந்தை செல்வா என்று அழைக்கப்பட்டவரான சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம்.
இந்து தெய்வங்களை கால காலமாக வழிபட்டு வந்த தமிழ் சிங்கள மக்களுக்காக பிரிவினை ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்ட இவ் இருவரும் கிறிஸ்தவர்கள். இவ் ஒப்பந்தம் இலங்கையில் மதம் பரப்புவதற்காகவும், வளங்களை சூறையாடுவதற்காகவும், இலங்கையை கிடுக்கிப்பிடியில் வைத்திருப்பதற்காகவும் பதுங்கியிருந்த கிறிஸ்தவ மிசனறிகளால் இயக்கப்பட்டதை அறிய சாமானிய மக்களுக்கு வாய்ப்பு இல்லை. இதைப் புரிந்து கொள்ளாத சிங்கள தமிழ் மக்கள் இன்றும் பண்டா செல்வா ஒப்பந்தம் என்று பெரிதாக கதைத்துக் கொள்கிறார்கள்.
செல்வநாயகம் (செல்வா), அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் மலையக மக்களுக்கு துரோகம் செய்து விட்டதாக கூறி அதிலிருந்து வெளியேறி இலங்கைத் தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். ஆனால், இவர் பண்டாரநாயக்காவிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மலையக மக்கள் பற்றி வாயே திறக்கவில்லை. இதை அமிர்தலிங்கம் அவர்கள் சுட்டிக்காட்டியிததை தொடர்ந்து இறுதியில் மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற விடையத்தை மீளாய்வு செய்வது என்று சேர்க்கப்பட்டது .
பிரதமர் சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா 1956, 1958 ஆம் ஆண்டுகளில் சிங்கள தமிழ் இனக்கலவரங்களை ஆரம்பித்து வைத்து இலங்கையை அழுகிய பூசணிக்காயாய் உருவாக்கியுள்ளார். இந்த அழுகிய பூசணிக்காயில் இன்றும் இந்து பௌத்தம் உயிர் வாழ்வதை தாங்கிக் கொள்ளாத இலங்கையின் கிறிஸ்வ தலைமைப் போதகர் எம். ஏ. சுமந்திரன் என அழைக்கப்படும் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் வலிந்து இலங்கை அரசியலில் புகுந்துள்ளார்.
எம். ஏ. சுமந்திரனின் மதஅரசியல் அமைதி வடிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், மிகப் பயங்கரமான விளைவுகளை சலசலப்புகள் ஏதுமில்லாது அரங்கேற்றி வருகிறது.
அருளகம்
https://jaffnaviews.blogspot.com/2020/04/2.html
No comments:
Post a Comment