முதல் தீர்த்தங்கரர் ஆதிநாதர் எனப்படும் ரிபவேதர் சமண மதத்தை உருவாக்கியவர்.சமண 24 தீர்த்தங்கரர்களின் பெயர்கள் ஒழுங்கு வரிசையில் ரிசபதேவர் ( ஆதிநாதர்) - அஜிதநாதர் - அபிநந்தநாதர் -சுமதிநாதர் - பத்மபிரபா - சுபர்சுவநாதர் - சந்திரபிரபா - புஷ்பதந்தர் -சீதளநாதர் - சிரேயன்சுவநாதர் - வசுபூஜ்ஜியர் - விமலநாதர் - அனந்தநாதர் - தருமநாதர் - சாந்திநாதர் - குந்துநாதர் - அரநாதர் - மல்லிநாதர் - முனீஸ்வரநாதர் - நமிநாதர் நேமிநாதர் - பார்சுவநாதர் - மகாவீரர் இவர்களின் பெயர்களில் இருந்து இவர்கள் தமிழர்கள் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
மகாவீரர் சமண மதத்தை உருவாக்கியவர்அல்ல அவர் சமணத்தை மீள்கட்டியெழுப்பியவர். வர்த்தமான மகாவீரர்.இந்திய மாநிலம் பீகாரில் ஜமுயி மாவட்டத்தில் இருந்த லச்சுவார் என்ற முன்னாள் அரசாட்சியின் சத்திரியகுண்டா என்றவிடத்தில் மகாவீரர் சித்தார்த்தன் என்னும் அரசனுக்கும் திரிசாலா என்ற அரசிக்கும் பிறந்தவர் மகாவீரர் (கி.மு. 599 - கி.மு. 527) தனது சமயக் கருத்துக்களை பிராக்கிருதம் மொழியில் பரப்பினார் . சமண மதம் கிமு 3 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் மீதும் தமிழ் மீதும் திணிக்கப்பட்டது.
சமணர்கள் மகேந்ரவர்ம பல்லவனிடம் திருநாவுக்கரசரை அழிக்குமாறு கோாினாா்கள் சமணர்களின் வேண்டுதலை ஏன்றுக் கொண்டு திருநாவுக்கரசரை சுண்ணாம்பு காளவாயில் இடுங்கள் என்று கட்டளையிட்டார்."மாசில் வீணையும் மாலை மதியமும்" பதியத்தை பாடி மரணத்தை வென்றாா்.
சமணர்கள் மகேந்ரவர்ம பல்லவனிடம் திருநாவுக்கரசரை நஞ்சு கொடுத்து கொள்ள வேண்டும் என்று கூறிய பொழுது நஞ்சு கலந்த பாற்ச் சோற்றைக் கொடுத்தனர். சிவனை நினைத்து நாவரசர் அந்த நஞ்சுணவை உண்டு எந்த கெடுதியும் இன்றி மரணத்தை வென்றாா் .
சமணர்கள் பல்லவ அரசனிடம் சென்று இனிமேலும் அவர் இறக்கவில்லை என்றால் எங்கள் உயிரும், உங்கள் அரசும் கெடும் என்று கூறினர். அதனை கேட்ட பல்லவ அரசன், நவரசறை மத யானையின் முன் விடுமாறு பணித்தான். அங்ஙனமே பணியாளர்கள் செய்தனர். மதயானை பிளிறிக்கொண்டு வந்தது. நாவரசர் அஞ்சாமல் “ கண்ண வெண் சந்தனச் சாந்தும் “ என்று திருபதிகத்தைப் பாடினார். உடனே மதம் கொண்ட யானை நவரசரை வலம் வந்து வணங்கியது. அங்கு கூடியிருந்த சமணர்களையும், பாகர்களையும்தூக்கி அடித்து கொன்றது. தப்பியவர்கள் அஞ்சி ஓடினார்கள். தப்பி ஓடிய சமணர்கள் மன்னனிடம் சென்று அழுது புலம்பினர்.
மகேந்ரவர்ம பல்லவனிடம் சென்று அழுது புலம்பின சமணர்களிடம் “ இனி என்ன செய்யலாம் “ என்று கேட்டான்.அதற்கு சமணர்கள் சிலர், கல்லுடன் கட்டி கடலில் விடலாம் என்று கூறினர்.அரசனும் அதற்கு உடன்பட்டு ஏவலாலர்களை அழைத்து தருமசெனரைக் கல்லுடன் கட்டி கடலில் தள்ளுங்கள் என்று ஆணையிட்டான். ஏவலாளர்களும் அரசன் ஆணைப்படி தருமசேனரை கல்லுடன் கட்டி கடலில் தள்ளினர். சிவனை நினைத்து “சொற்றுணை வேதியன் சோதி வானவன் " நாவரசர் பாடியவுடன், அவரை கட்டிய கல் தேப்பமாகியது. கட்டியிருந்த கயிறுகள் அறுந்து விலகியது. கல்லாகிய தெப்பத்தில் நாவரசர் மிதந்த வண்ணம் கடலூர் திருப்பாதிரிபுலியூருக்கு அருகில் வந்து கரையேறினார். திருநாவுக்கரசர் சமணர் துன்புறுத்தலினின்று இறைவன் அருளால் மரணத்தை வென்று விடுதலை பெற்றாா்.
சமணர்களின் அராஜகத்தை அறுப்பதற்காக முருகப் பெருமானை சம்பந்தராக அனுப்பி வைத்தார் சிவன். இதனைநன்கு தெரிந்து கொண்ட மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு நாயனாருக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அருளும்படி வேண்டினர்.கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவ சமய நாயன்மாரான திருஞானசம்பந்தர் சமணர்களை வாதத்தில் வென்று அழிப்பதற்கு ஆலவாய் அண்ணல் திருவருள் புரியவேண்டும் என்று நினைத்து “காட்டுமாவது உரித்து” எனத் தொடங்கும் பத்து பாடல்கள் மூலமாக மதுரை நகரில் சமணர்களுடன் வாதிட்டு அவர்களை வென்று சமணர்களை மக்களை ஏமாற்றிப் பிழைத்த 8000 சமண சமய குருமாரை கழுவிலேறினாா்.சமணம் தமிழர்களை அழிக்க முற்பட்ட பொழுதே அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment