Thursday, 30 April 2020

சிவ ,சிவன் ,சேனை ஆகிய மூன்றும் சிவனுடனும் , தமிழுடனும் , தமிழர்களோடும் தொடர்புடையது.

சிவ -

"சிவ' என்ற வார்த்தை எப்படி ஏற்பட்டது ஆரம்ப எழுத்தான "சி' என்ற எழுத்தைப் பார்த்தால் ச்+இ+அ என்று ஆகிறது.  இதில் இயங்கும் எழுத்து "ச'கரமும் "இ'கரமும் ஆகும். "ச'கரம் "சரண்' என்னும் புகலிடத்தைக் குறிக்கும் சொல்.  "இ'கரம் "இவன்' என்பதைக் குறிக்கும் சொல்.  'சிவனிடம்தான் நீ சரணடைய வேண்டும்' என்பதை "சி' என்ற எழுத்து உணர்த்துகிறது.  அதே போன்று "வ' என்ற எழுத்து உயிரைக் குறிப்பது.  எனவே உயிர்கள் சிவபெருமானை சரண் அடைந்தால், எல்லா துன்பங்களும் நீங்கி அவன் அருள் பெறலாம் என்பதே "சிவ' என்பதின் அர்த்தம் ஆகும்

தமிழ் எழுத்துமொழியில் ஒவ்வொரு மூலத்தனியொலியும் குறிப்பிட்ட ‘தன்மை‘ (nature) அடிப்படையிலான ஒரு விவரிப்பினைச் செய்கிறது... இதை ஆராய்ந்தறிந்த நிலையில், அவற்றைச் ‘சிவன்‘ என்ற சொல்லில் பிரயோகிப்பதன் மூலம்தான் ‘சிவன்‘ என்ற சொல்லின் பொருட்களைச் சரியாக அறியமுடியும்.

சிவன்---

‘சிவன்‘ என்பது: 'சிவ் + அன்‘ ஆகும்...அதாவது: 'சிவ்' தன்மையானவன், அல்லது 'சிவ்'மயமானவன்... 'சிவ்' என்பது: ‘ச் + இ + உ' ஆகும். ஆகவே, அது: 'மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை' யாகும்."மேன்மை நிறைவு உயிர்ப்புத் தன்மை" யை: அன்பு, அருள், அறிவு, அறம், ஒளி, புனிதம், செம்மை, இனிமை, அழகு,எனப் பலவற்றின் அடையாளங்களாக முடியும்.


 'சிவன்' என்பதன் பொருள்:   மங்கலம் தருபவர், சிவந்தவன், அன்புமயமானவன், அருள்மயமானவன், அறிவன், அறவோன், புனிதமானவன், செம்மையானவன், ஒளிமயமானவன், இனிமையானவன், அழகன் ,எனவெல்லாம் வரும்.

சேனை--

ச்+ஏ = ஏற்பட்ட சே யும் , ன்+ஐ = னை ஏற்பட்ட சேனை என்ற பெயர்ச்  சொல்லுக்கு அடிச்சொல்  சேர்தல்,  கூடுதல் என்பதே ஆகும்.சேனை என்பது பலர் சேர்ந்த கூட்டம் ,சேனை என்பது உறவினர் நட்பினரையும் குறிக்கும் ,சேனை என்பது படையையும் ஆயுதத்தையும் குறிக்கும் ,சேனை என்பது நண்பர்கள் என்றும் பொருள்படும் இவ்வாறு பலவகையான விளக்கங்களை கொடுக்க முடியும்.

சிவ ,சிவன் ,சேனை ஆகிய மூன்றும் சிவனுடனும் , தமிழுடனும் , தமிழர்களோடும் தொடர்புடையது என்பதனை பல சங்க இலக்கியங்களின் ஊடாக நிருபிக்க முடியும் ஆகவே சிவ சேனை தமிழர்களையே அடையாளப்படுத்தும்.சிவனடியாா்கள் யாவரும் சிவனின் சேனைகளே.
https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_97.html
அருளகம்



.




No comments:

Post a Comment