Friday, 10 April 2020

தேசியம்

மொழி, மொழி சார்ந்த பண்பாடு, அந்தப் பண்பாடில் திளைக்கும் மக்கள், தொடர்ச்சியான வரையறுக்கக்கூடிய எல்லைக் கோடுகள் கொண்ட ஒரே நிலப்பகுதிக்குள் வாழ்வோர் தமக்கென ஆட்சியையும் கொண்டு இருப்பாராயின் அதுவே தேசியம்  (Nation-State, Nationalism).

தமிழ்தேசியம்.
ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தமிழ். இறைவன் அருளிய தமிழை தம்முள் உள்ள சக்கரங்கள் 51அச்சரங்களாக உற்பத்தி செய்வதை கண்ட மக்கள் அந்த தமிழ் மொழியை பேசியதன் காரணமாக தமிழர்களானாா்கள். இறைவனை தம்முள் கண்டவர்களின் பரம்பரையில் வந்தவர்களே தமிழர்கள்.தெய்வங்களும் தமிழ்தேசியத்தை அடையாளப்படுத்தும். ஆகவே சிவனே தமிழ்தேசியத்தின் அடையாளம் ஆகும்.

தமிழ் போற்றிய ‘மாயோன் மேய காடுறை உலகமும்சேயோன் மேய மைவரை உலகமும்வேந்தன் மேய தீம்புனல் உலகமும்வருணன் மேய பெருமணல் உலகமும்முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்சொல்லிய முறையான் சொல்லவும் படுமே’ தெய்வங்களும் தமிழ்தேசியத்தை அடையாளப்படுத்தும்.

உமை உமையொருபாகனின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களும் தமிழ்தேசியத்தின் அடையாளம் ஆகும்.தமிழர் தேசத்தில் இறைவனினதும் தெய்வங்களின் அடையாளங்களை கொண்ட தேசம் சிவபூமி ஆகும். சிவபூமி தமிழ்தேசியத்தின் அடையாளம் ஆகும். ஆகவே சைவமும் தமிழும் கலந்ததே தமிழ்தேசியம்.

கிறிஸ்தவ தேசியம்.

அரேபிய ஏபிரகாமிய கிறிஸ்தவ கலாச்சார பண்பாடுகள். கிறிஸ்தவ நாடுகளின் கலாச்சார பண்பாடுகள். கிறிஸ்தவ அல்லாத நாடுகளின் வாழுகின்ற கிறிஸ்தவர்களின் கலாச்சார பண்பாடுகள்.  அனைத்தும் கலந்தே கிறிஸ்தவ தேசியம் ஆகும்.

இஸ்ஸாமிய தேசியம்.
அரேபிய ஏபிரகாமிய முகமதியா்களினதும், அரேபிய முகமதியா்களின் கலாச்சார பண்பாடுகள் அனைத்தும் கலந்தே இஸ்லாமிய தேசியம் ஆகும்.

பெரியர் தேசியம்.

ஈரோடுட்டில் பிறந்த வரும்  தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடைய  வெங்கட்ட இராமசாமி நாயக்கர் உருவாக்கியதே திராவிட தேசியம் ஆகும்.

அன்னிய கம்யூனீச சோசலீச ,லெனினிய ,மாவோயிச தேசியம்.
கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங் போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட அன்னிய ஆக்கிரமிப்பு தேசியம் ஆகும்.

No comments:

Post a Comment