Saturday, 26 September 2020

தமிழ்தேசியம் பாகம் ----10 .

சிவன் சித்தராக எழுந்தருளி அருளிய பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.உடலை இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப்பயன்படுகின்றன. ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனதே நம் உடல். இந்த தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.  சைவத்தின் ஆறு சுவை உணவு தமிழர்கள் வேறு பிற இனங்கள் வேறு என  பிரித்து இனங்காட்டும்.

முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

அறுசுவையின் பயன்கள் என்னென்ன?                                                                                (1) துவர்ப்பு சுவை இரத்தத்தைப் பெருக்குகின்றது.  (2) இனிப்பு சுவை தசையை வளர்க்கின்றது.  (3)புளிப்பு சுவை கொழுப்பினை அதிகரிக்கின்றது.  (4) கார்ப்பு சுவை எலும்புகளை வளர்க்கின்றது.  (5) கசப்பானது நரம்புகளை பலப்படுத்துகின்றது.  (6)  உவர்ப்பு சுவை உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது

இனிப்பு சுவை:--                                                                                                                    இனிப்பு சுவையை சாப்பிடும்போது அவை சுவை மொட்டுக்களால் மண் பிராணசக்தியாக மாற்றி உடல் முழுவதும் அனுப்புகின்றன. மண் பிராணசக்தி மூலமாக இயங்கும் உறுப்புகள் இரப்பை, மண்ணீரல், உதடுகள் ஆகியவையாகும். பழவகைகள், உருளை, காரட், கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை, கரும்பு போன்றவற்றில் இனிப்பு சுவை அதிகமாக உள்ளது.

உவர்ப்பு (உப்பு ) சுவை:-                                                                                                                    உவர்ப்பு சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுக்கள் அதை நீர்ப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் அனுப்பும்.கிரைத்தண்டு, வாழைத்தண்டு, முல்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை அதிகமாய் இருக்கின்றது.

புளிப்பு சுவை:-                                                                                                                        புளிப்பு சுவை நாக்கில் பட்டால் நாக்கில் உள்ள சுவை மொட்டுகள் அந்தச் சுவையை ஆகாயம் எனும் பிராண சக்தியாக மாற்றி உடல் முழுவதும்  அனுப்பும். இந்த சக்திக்கு கல்லீரல், கண்கள், பித்தப்பை இவை மூன்றும் வேலை செய்யும். புளிச்ச கீரை, இட்லி, எலுமிச்சை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், நார்த்தங்காய் போன்றவற்றில் புளிப்புச் சுவை அதிகம் உள்ளது.  புளிப்பு சுவை அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி,மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்ட உணவுகள்.

கசப்பு மற்றும்                                                                                                                கசப்புக்கும், நெருப்புப் பிராணனுக்கும், இதயம், இதயத்தின் மேலுறை, சிறுகுடல், உடல் வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு, நாக்கு ஆகிய  உறுப்புகளுக்கும், மகிழ்ச்சிக்கும் தொடர்புண்டு.கத்தரிக்காய், சுண்டக்காய், பாகற்காய் ஆகியவற்றில் கசப்பை நீங்கள் சுவைக்கலாம்

துவர்ப்பு சுவை:--                                                                                                            பாகற்காய், கத்தரிக்காய், வெந்தயம், எள்ளு, பூண்டு, ஒமம் போன்றவை கசப்பு சுவையும், வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் ஆகியவை துவர்ப்பு சுவையும் மிகுந்து காணப்படும்.

கார்ப்பு( கார) சுவை:-                                                                                                                 கார சுவை நமது நாக்கில் பட்டதும் அவை காற்றுப் பிராணனாக மாற்றி உடல் முழுவதும் பரவச் செய்கிறது. காற்றுப் பிராணன் மூலமாக வேலை  செய்யும் உறுப்புகள் நுரையீரல், பெருங்குடல், இதன் வெளி உறுப்பு மூக்கு. இதன் உணர்ச்சி துக்கம். மூக்குக்கும் நுரையீரலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. அதேபோல் நுரையீரலுக்கும், பெருங்குடலுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் போன்ற பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையைக் கொண்டதும் கீரைகள், இலைகள், காய்கறிகள், பழவகைகள், முளையிட்ட தானிய வகைகள் ஆகியவற்றை மருந்தாகக் கொண்டதே இயற்கை உணவு மருத்தும். உணவே மருந்து. நோய் அற்ற வாழ்வு குறைவற்ற செல்வம். 

மனித கூட்டத்திடையே  நாவுக்கு சுவையாக ஆறு சுவைகளையும் அளவுடன் பயன்படுத்தி சைவ ஆலயங்களில் அன்னதானமாகவும் வழங்கி வளமுடன் வாழ்ந்து மகிழ்ந்தவர்கள் தமிழர்கள்  தமிழர்களின் ஆறு சுவை உணவு சைவத்துடனும் தமிழுடனும் இரண்டறக் கலந்து தமிழ்தேசியத்தின் அங்கமாக காணப்படுகின்றது.




No comments:

Post a Comment