Sunday, 13 September 2020

தமிழர்கள் என்றால் யார்? அவர்களை எப்படி இனம் காணலாம்?

தமிழ் பரம்பரையில் வந்ததன் காரணமாக தமிழனாகி விட முடியாது.          தமிழ் பேசுவதால் மட்டும் ஒருவர் தமிழனாகி விடமுடியாது.              தமிழர்களின் நாடுகளில் பிறப்பதால் மட்டும் தமிழனாகி விட முடியாது.    தமிழ் வாழையடிவாழையாக  வருவதனால் மட்டும் தமிழனாகி விட முடியாது. 

மனித கூட்டத்திடையே நம்முடைய நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும்,  தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு உடைகளும் (குளிர் நாடுகளின் கால நிலைகளுக்கு ஏற்ப உடைகள் வேறுபட்டாலும்) பண்டிகை போன்ற காலங்களிலும், ஆலயங்களுக்கு செல்லும் பொழுது  அணியும் தமிழ்தேசியத்தின்  கலாச்சார பண்பாட்டு உடைகள்  தமிழன் என்று அடையாளப்படுத்தும், இவையே பார்வைக்கு தமிழன் என்று சொல்லும்.

ஒருபெண்ணைப் பார்த்தால் தமிழ் பெண்ணைப் போல இருக்கிறதே என்கிறோம். காரணம் என்ன?  உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்தப் பெண் தமிழ் பெண்ணாக இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்தப் பெண்ணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவள் தமிழ் பெண்தான் என உறுதி செய்கிறோம். 

அதேபோன்று ஒரு ஆணைப் பாா்த்தால் தமிழன் போல் இருக்கும் காரணம் உடை, தோற்றம், சாயல் இவற்றை வைத்து அந்த ஆண் தமிழனாக     இருக்கலாம் என ஊகிக்கிறோம். அந்த ஆணின் பெயர் நல்ல தமிழ்ப் பெயராக இருந்தால் அவர் தமிழர் என உறுதி செய்கிறோம். 

ஆனால், யாரும் நம்மை பார்க்காமலேயே, யாரென்று புரிந்து கொள்வது ஒன்று இருக்கின்றது என்றால் அது நாம் தமிழ்த் தேசியத்தின் குறியீட்டு அடையாளங்களின் ஊடாக நமக்கு வைத்துக் கொள்ளும் தமிழ் பெயரே தமிழன் என்று அடையாளப்படுத்தும்.

தமிழர்களது தமிழ் பெயர் அவர்களது தமிழ்தேசியத்தின் அடையாளக் குறியீடாகும்.  அன்னிய அடிமைவாத சிந்தனைகளின் வெளிப்பாடாக தமிழ்ப் பெயர்களைப் புறக்கணித்து விட்டு கிறிஸ்தவ இஸ்லாமிய பெயர்களை  சூட்டுவது தமிழன் என்று என்றும் அடையாளப்படுத்தமாட்டாது.  இந்த செயல் தமிழின அழிப்பாகும்.தமிழ்த் தேசியத்தை சிதைத்து அழிப்பதும் ஆகும். 

தமிழன் என்று அடையாளப்படுத்துகின்ற பெயர்களை தங்களின் எதிா்கால சந்ததிகளுக்கு சூட்டமறுப்பவர்கள் அன்னிய இறக்குமதி மதங்களின் அடியாள் படைகள் அதாவது தமிழ் இன அழிப்பாளர்களே ஆகும்.

சிவன் அருளிய சைவ வாழ்வியல் நெறிகளையும், சிவன் அருளிய தமிழும் கலந்த தமிழ் தேசியத்தை ஏற்றுக் கொண்டு வாழையடிவாழையாக வருகின்றவனே  தமிழன் ஆவான். ஆகவே உங்களின் எதிா்கால சந்ததிகள் தமிழர்களா அல்லது கிறிஸ்தவ இஸ்ஸாமிய தேசியத்திற்கு உரியவர்களா என்று தமிழ் அகராதிகள் மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

ஓர் பெயரைக் கேட்டவுடனேயே அந்தப் பெயரின் மொழி, மதம், இனம், கலாச்சாரம், பண்பாடுகள், அவர்களின் நாடுகளையும் அறிந்து கொள்ள முடியும். அத்துடன் அவர்களின் தேசியத்தையும் அறிந்து அடையாளம் காணமுடியும்.

https://www.youtube.com/watch?v=MjPxawDQDd4&ab_channel=VijayMusical

No comments:

Post a Comment