- சங்க காலத் தமிழர் வரலாற்றைத் தெளிவுற அறிய இலக்கியங்களும் கல்வெட்டுகளும் அகழ்வாய்வுச் சான்றுகளும் நன்கு உதவுகின்றன.தமிழர் சமய வரலாறு விநாயகர்,சேயோன் (முருகன்), மாயோன் (திருமால்), வேந்தன் (இந்திரன்), வருணன்,கொற்றவை முக்கண்ணன்(சிவபெருமான்), பலராமன், உமை கதிரவன் எனப் பல்வேறு முதன்மைத் தெய்வங்களைச் சிலப்பதிகாரம் சுட்டிக் காட்டுகின்றது. அத்துடன் தமிழர் வழிபட்ட தெய்வங்களைச் சங்க இலக்கியங்கள் பல பாக்களால் அறிமுகப்படுத்துகின்றன.
சைவத் திருமுறைகளை நிலைநாட்ட நம்பியாண்டார் நம்பிக்கு அருளியவர் தமிழர்களின் தெய்வம் விநாயகர் பொல்லாப் பிள்ளையார்.
முதல் சங்க காலத்தில் வாழ்ந்த சிவஞானி நக்கீரன் திருமுருகாற்றுப்படையில் "முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே ஒருகை முகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்" என்று குறிப்பிடுகின்றாா்.
முதல் சங்க காலத்தில் வாழ்ந்த தமிழ் மூதாட்டியும் உலகத்தின் முதல் பெண்ணறிஞ்ருமான ஔவையை கொண்டு விநாயகர் அகவல் பாட வைத்தார். இறவாப் புகழை அளித்தார்.
"வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு".
"தமிழர்களின் தெய்வம் .வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு".
புத்த பகவானால் உருவாக்கப்பட்ட பெளத்த மதத்திலும் கணபதி வழிபாடு மிக சிறப்பாக இருக்கிறது. புத்த மதத்தை போலவே கடவுள் இல்லை என்று சொல்லும் ஜைன மதத்திலும் கணபதி வழிபாடு இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது.
No comments:
Post a Comment