Friday, 4 September 2020

திதி, திவசம் குறித்து சாஸ்திரம் சொல்வது என்ன?

 "திவசம் வேறு, தர்ப்பணம் வேறு. தர்ப்பணம் என்பது ஒவ்வொரு நாளும் எல்லோரும் செய்ய வேண்டிய புண்ணிய காரியம். சூரியன், வருணன், அக்கினி என எல்லா தேவர்களுக்கும் நீர்நிலைகளில் நின்று ஜலத்தை அள்ளி விட்டு செய்வதே தர்ப்பணம்.

தர்ப்பணம் என்றால் 'திருப்தி செய்வது' என்று பொருள். நீரை அவர்களுக்கு அளித்து அருளைப் பெறுவது. ஆனால், அமாவாசை மற்றும் இறந்தவர்களின் திதி அன்று மட்டும் எள்ளும், நீரும் கலந்து இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம். இந்த இரு நாட்களில் மட்டுமே இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும். அதிலும் இதை ரத்த சம்பந்தம் கொண்டவர்கள் மட்டுமே செய்யவேண்டும்.

திவசமோ, தர்ப்பணமோ திதியைப் பார்த்து மட்டுமே செய்தல் வேண்டும்.திவசம் என்றால் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில்  (பஞ்சமி என்றால் அந்த மாத பஞ்சமி) பிராமணரை அழைத்து செய்யப்படும் ஒரு விரிவான சடங்கு. வசதியில்லாதவர்கள் அந்தத் திதியில் நீர்நிலைகளுக்குச் சென்று எள்ளும் நீரும் தெளித்து தர்ப்பணம் கொடுக்கலாம். அமாவாசை மற்றும் இறந்து போன திதியில் மட்டுமே

ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் திவசம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை திவசம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. ஆன்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடைய உறவினர்கள் செய்யும் இந்த 16 திவசங்கள் அவர்களை திருப்திப்படுத்தி, அவர்கள் ஜன்மசாபல்யம் அடையச் செய்து விடுகிறது. திவசங்கள் கட்டாயமாக இறந்தவரது குடும்பத்தாரால்தான் செய்யப்பட வேண்டும். இறந்து போனவர்களின் 10-ம் நாள், 16-நாள் காரியங்கள், மற்றும் மாதாமாதம் ஒரு திவசம், 27-ம் நாள் ஒரு திவசம், 12-ம் மாதத்துக்கு முன்பு ஒன்று என மொத்தமாக 16 முறை திவசங்கள் செய்வது இறந்து போனவரின் ஆன்மாவை குளிரச்செய்து விடும்.

No comments:

Post a Comment