Monday, 14 September 2020

ஓம் முருகா. முருகனே திரு ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்தாா் என்பது அருணகிரிநாதர் கூற்று

தமிழ்தேசியமே முருகனாக அவதாரம் எடுத்தது என்பது வரலாறு.  முருகனின் சகல அடையாளக் கூறுகளே தமிழ்தேசியம் ஆகும்.  அதேபோன்று முருகனே திரு ஞானசம்பந்தராக அவதாரம் எடுத்தாா் என்பது அருணகிரிநாதர் கூற்று.  திருத்தணிகை வேலா உன் திருவடியில் அணுக அருள்வாயாக.

தனதனத் தனதனத் தனதனத் தனதனத்                                                                  தனதனத் தனதனத் ...... தனதான

கிறிமொழிக் கிருதரைப் பொறிவழிச் செறிஞரைக்                                       கெடுபிறப் பறவிழிக் ...... கிறபார்வைக்

கெடுமடக் குருடரைத் திருடரைச் சமயதர்க்                                                  கிகள்தமைச் செறிதலுற் ...... றறிவேதும்

அறிதலற் றயர்தலுற் றவிழ்தலற் றருகலுற்                                                          றறவுநெக் கழிகருக் ...... கடலூடே

அமிழ்தலற் றெழுதலுற் றுணர்நலத் துயர்தலுற்                                          றடியிணைக் கணுகிடப் ...... பெறுவேனோ

பொறியுடைச் செழியன்வெப் பொழிதரப் பறிதலைப்                              பொறியிலச் சமணரத் ...... தனைபேரும்

பொடிபடச் சிவமணப் பொடிபரப் பியதிருப்                                                       புகலியிற் கவுணியப் ...... புலவோனே

தறிவளைத் துறநகைப் பொறியெழப் புரமெரித்                                              தவர்திருப் புதல்வநற் ...... சுனைமேவுந்

  தனிமணக் குவளைநித் தமுமலர்த் தருசெருத்                                            தணியினிற் சரவணப் ...... பெருமாளே.

பொழிப்புரை

 அறிவுடைய பாண்டியனுடைய சுரநோய் நீங்கவும், தலை மயிரைப் பறிக்கும் அறிவிலிகளாகிய அந்தச் சமணர்கள் எல்லோரும் கழுவில் ஏறியழியவும் சிவமணங்கமழும் திருநீற்றின் நெறியை எங்கும் பரவச் செய்த-சீகாழியில் வந்த கவுணியப் புலவர் பெருமானே!

அழிவு உண்டாகும்படி புன்சிரிப்பினால் நெருப்புப் பொறியை உண்டாக்கி முப்புரத்தை எரித்த சிவபெருமானுடைய திருக்குமாரரே!

சிறந்த சுனையில் உள்ள ஒப்பற்ற நறுமணம் வீசும் குவளை நாள்தோறும் மலரைத் தருகின்ற திருத்தணியில்  மேவும்  சரவண! பெருமிதம் உடையவரே!

பொய்மொழி  பேசும் செருக்கு உள்ளவர்களை, ஐம்பொறிகளின் வழியே செல்லுபவர்களை, கெட்ட இப்பிறப்பு நற்பிறப்பு ஆகாமல் தொலையும்படி விழிக்கின்ற பார்வையை உடைய அறிவில்லாத கெட்ட குருடர்களை, திருடர்களை, சமயவாதிகளை அடியேன் நெருங்கிச் சேர்ந்து, அறிவு சற்றும் இல்லாதவனாகி, தளர்ச்சி அடைந்து, உள்ளம் அன்பினால் நெகிழ்தல் இன்றி குறைபாடு அடைந்து, மிகவும் கெட்டு, அழிவு தரும் பிறவிக் கடலுள்ளே அமிழ்ந்து போகாமல் நீங்கி, மேலோங்கி, நல்லுணர்வு பெறும் நல்வழியில் மேம்பாடு அடைந்து உமது இரு சரணங்களை அடியேன் அணுகப் பெறுவேனோ?


சைவத் தமிழ்தேசியமே முருக அவதாரம்

சிவனின் நெற்றி கண்ணில் இருந்து  பொறிகளாக வெளிப்பட்ட  தமிழ் தேசியம்  பொய்கை நதியில் பட்டதும்  தமிழ்தேசியம் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக  அவதரித்த நன்னாள் வைகாசி விசாக  ஆகும்.

அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகை பெண்களிடம் வளர்ந்து வர. பின் ஒருநாள் அந்த ஆறு குழந்தைகளுக்கும் தாயான பார்வதி தேவி அந்த ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைக்கையில், பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும் முருகன் தோன்றினார் என்கிறது கந்த புராணம்.

முருகனின் நெற்றியில் இருக்கின்ற திருநீறும் பொட்டும், முருகனின்  கலாச்சார பண்பாட்டு உடைகளும் தமிழர்களுடையதே இவைகள் அனைத்தும் பார்வைக்கு தமிழன் என்று சொல்லும்.

தமிழின் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் தன்னுடைய கண்களாகவும், தமிழில் வல்லினம், மெல்லினம், இடையினம் விளங்கும் எழுத்துக்கள் ஆறும் முகங்களாகவும், தனி நிலை எனப்படும் ஆயுதமே ஒப்புயர்வற்றுத் திகழும் வேலாகவும் கொண்டு தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு.

 முருகனின் பெயர்கள் அனைத்தும்தமிழ் தெய்வம் என்றே அடையாளப்படுத்தும்  அதேவேளை தமிழ்தேசியத்தின் அடையாளத்தின் குறியீடாகும்.  முருகா என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன். குமரன், குகன் ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய், என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார்.

முருகா என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும் இனிமையான வாழ்வு அமையும். ‘மு’ என்பது திருமாலையும் ‘ரு’ என்பது சிவபெருமானின் அம்சத்தையும் ‘க’ என்பது பிரம்மனையும் குறிக்கும். முருகனின் தமிழ் பெயர்கள் யாவும் தமிழன் என்று அடைாளப்படுத்தும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளில் முக்கியமான கூறு ஆகும்.

தமிழ் தேசியத்தின் அவதாரமான ஆறுமுகன் பன்னிரு கரங்களோடும் ஆறு முகத்தோடும்  தோன்றினார்.ஆறு முகனின் தெய்வீக அடையாளங்கள் யாவும் தமிழ் தேசியத்தின் அடையாளக் கூறுகளே ஆகும்.

ஓம் முருகா.


No comments:

Post a Comment