Tuesday, 22 September 2020

பைபில் (BIBLE) கூறியநாள் தமிழர்களின் பிறந்தநாள் அல்ல.


ஒருவரின் பிறந்தநாள் என்பது சாதாரண நாள் அல்ல.ஒவ்வொருவரின் வாழ்விலும்  அது ஒரு மகத்தான நாள். இந்த உலகிற்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்ட நாள்.பிறப்பு நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு முறையில்  மங்களகரமான  காரியங்களைத் துவங்குவதற்கு முன்பு நாள், நட்சத்திரம் எல்லாம் பார்த்து தான் செய்கிறோம். 

தமிழர்களின் பண்டிகைகள் அனைத்தும்,விநாயகர் சதுர்த்தி, முருகனுக்குரிய வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மகா சிவராத்திரி  இவை அனைத்தும் தமிழ் மாதங்களின் அடிப்படையில் அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாட்களில் தான் கொண்டாடப்படுகிறது.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு முறையில் இறந்தவர்கள் எந்த மாதம் எந்த திதியில் இறந்தார்களோ, அந்த மாதம் அந்தத் திதியில்தான் நாம்   பிதிா்கடன்  கடமைகளை செய்கின்றோம். அதுதான் மரபு ஆகும். 

 குழந்தை பிறந்தவுடன் சோதிடர்களைக் கொண்டு குறிப்பை எழுதி கொள்வதும்,  நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே குழந்தைக்கு பெயர் சூட்டுவதும் செய்யப்படுகின்றது.எனவே நம் பிறந்தநாளையும் தமிழ் மாதங்களை அடிப்படையாக வைத்து அந்தந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று தான் கொண்டாடவேண்டும்.
 
அதேபோன்றுதான் உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் (ஜென்ம நட்சத்திரப்படி)   கொண்டே கொண்டாடவேண்டும். அதுவே தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு மரபுமுறை ஆகும்.

நீங்கள் மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும். 

நீங்கள் பிறந்தது ஐப்பசி மாதம் சுவாதி நட்சத்திரம் என்று வைத்துக்கொள்வோம், என்றைக்கு ஐப்பசி மாதத்தில் சுவாதி நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் கொண்டாடவேண்டும்.

 ஜென்ம நட்சத்திரத்தை அடிப்படையாக கொண்டே கார்த்திகை ரோகிணியில் பிறந்தார். சித்திரைப் பூரத்தில் பிறந்தார் என்று எமது முன்னோா்கள் கூறுவதுடன் கொண்டாடுவதும் வழமையாகும். 
சில நாட்களில் நட்சத்திரங்கள் இரண்டு நாளில் வரும். முந்தைய தினம் கொஞ்சம், அடுத்த நாள் கொஞ்சம் என்று. அப்படி வரும்போது எந்த நாளில் கொண்டாடுவது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படலாம். 18 மணிநேரத்திற்கு அதிகமாக எந்த நாளில் உங்கள் நட்சத்திரம் இருக்கிறதோ அன்று தான் உங்கள் பிறந்த நாளை கொண்டாடவேண்டும். 

தினசரி காலண்டரில் இது குறித்த விபரம் இருக்கும். பார்த்தால் உங்களுக்கு புரியும். (நட்சத்திரங்களின் சஞ்சாரம் நாழிகைகளின் அடிப்படையை வைத்தே தரப்பட்டிருக்கும். ஒரு மணிநேரம் = 2.5 நாழிகை. ஒரு நாளுக்கு 60 நாழிகை).

நாங்கள் பிறந்தநாளை இந்த மாதத்தில்  இந்த நட்சத்திரத்தில் எனக் கணிப்போம். அந்த ஆண்டின் பெயரை வைத்துக் கொள்வோம் இயற்கை அறிவு  அறிவியல் அறிவு  வானியல் அறிவு  என அறிவு சார்ந்த கணிப்பு  சைவத் தமிழரின் கணிப்பு. இதுவே எங்களுக்குப் பத்தாயிரம் ஆண்டுகளாக முன்னோர் தந்த அடித்தளம்.

ஆங்கில தேதிகளை விட, தமிழ் மாதங்களின் நட்சத்திரங்களின் அடிப்படையில் வரும் பிறந்த நாளே துல்லியமாக இருக்கும். ஏனெனில், பூமி சுற்றும் வேகம் மற்றும் அது சூரியனை சுற்றி வர எடுத்த்துக்கொள்ளும் காலமும், 365 நாட்களும் ஒரே சீராக இருக்காது. சற்று முன்னர் பின்னர் இருக்கும். அறிவியிலில் இதை ‘ஒழுங்கற்ற ஒழுங்கு’ என்று கூறுகிறார்கள்.

ஆங்கில தேதிகள் அந்த துல்லியத்தை தருவதில்லை. ஆனால் வானசாஸ்திரமும் விஞ்ஞானமும் வளராத அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் சூட்சும அறிவைக் கொண்டுவைத்து கணித்த இந்த நாள், நட்சத்திர கணக்குகள் மேலே கூறிய பூமியின் சுழற்சி அந்தந்த மாதத்தில் அந்தந்த நாட்களில் எப்படி இருக்கும் எப்படி வித்தியாசப்படும் என்பதை கணக்கிட்டே கணித்துள்ளனர். எனவே தமிழ் மாதத்தில் உங்கள் பிறந்த நாளை அந்த நட்சத்திரத்திற்குரிய நாளன்று கொண்டாடும் வழக்கத்தின் ஊடாகவே அதிக நன்மைகள் பெறக்கூடியாத இருக்கும்.

ஒரு சில தருணங்களில் ஒரே மாதத்தின் துவக்கத்திலும், இறுதியிலுமாக ஒரே நட்சத்திரமானது இரண்டு முறை இடம்பிடிக்கும். அம்மாதிரியான சமயங்களில் இரண்டாவதாக வருகின்ற நட்சத்திர நாள் அன்று பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும். மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் மாசி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திர நாளன்றுதான் உங்கள் பிறந்த தினத்தைக் கொண்டாட வேண்டும் அதுவே நமது மரபு.

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன?
காலையில்  எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும். வீட்டில் மங்கலகரமான குத்துவிளக்கு ஏற்றி வைத்து, இறைவழிபாடு செய்து பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.குல தெய்வத்தின் கோவிலுக்கு சென்று பிறந்த நாள்  தீபம் ஏற்றி  இறைவனை வழிபட்டு, புணிதமான பிறந்த நாளை  கொண்டாடுவது  தமிழ்தேசியத்தின் தெய்வீக பண்பாடு.

கிறித்தவர்கள் கூறிய நாள்  தமிழர்களுக்கு பிறந்த நாளா?                  தமிழர்களின் மரபை இந்த மரபைக் குலைத்து  ஒருவர் எந்த ஆண்டு பிறந்தார்  எனக் கிறித்தவக் கண்ணோட்டத்தில்  இந்தக் கணிப்பு  கிறித்துவின் பிறப்பு தளமாகக் கொண்ட காலக்கணிப்பு மக்காவிலிருந்து மதினாவுக்கு பயணித்ததை அடித்தளமாகக் கொண்ட காலக்கணிப்பு  அறிவியல் அன்று.  அறிவியல் கணிப்புக்கு இறப்பு.  வானியல் கணிப்புக்கு இறப்பு.  இயற்கை அறிவுக்கு இறப்பு.   தமிழ் மரபின் சைவ மரபின் அறிவியல் அடித்தளத்திற்கு இறப்பு  கிறித்தவர்கள் கூறிய நாள் சைவர்களுக்குப் பிறந்த நாளா?  

 கேக்கை வைத்து அதன்மேல் சுடர்விடும் மெழுகுவர்த்திகளை அடுக்கி, பின் அவற்றை ஊதி அணைப்பது 

புணிதமான பிறந்தநாளன்று மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து  அதை ஊதி அனைத்து  அமங்கல காரியம் செய்வது இந்த மெழுகுவர்த்திகள்  அணைந்தது போல தன் வாழ்க்கையும் அணைந்து போகட்டும் என்பதற்கே.

 கேக் மீது குழைந்தையின் பெயரை எழுதி வைத்து குழைந்தையை வெட்டுவது அதைவெட்டி துர்மரணவீடாக மாற்றி கொண்டாடுவது
கொலை செய்து அழிப்பதையே அதாவது நான் சாகின்றேன் என்பதை குறிப்பதாகும்.

புணிதமான பிறந்தநாளன்று விருந்து கொடுப்பதற்காக செல்லப் பிரானிகளை கொலை செய்து மரணவீடாக கொண்டாடி அதனை உணவாக பரிமாறியும், மதுபாணங்களை பரிமாறி இரவு நடனவீடாக மாற்றி அமைத்தும் நிறைவில் சண்டைகள் பிடித்து காவல் துரையினரை அழைத்து முடித்து வைப்பது தமிழ்தேசியத்தின் பண்பாடுகள் அல்ல கிறிஸ்தவ தேசியத்தின் பண்பாடுகள் ஆகும்.

தமிழர்களின் தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டு முறமையிலான பிறந்தநாளை  மரணவீடாக மாற்றி கொண்டாடுபவர்கள் தமிழின அழிப்பாளர்களாகிய கிறிஸ்தவ சிந்தனைவாதிகள்,  எம்மதம் சம்மதவாதிகள், அன்னிய அடிமைதன சிந்தனைவாதிகளான மாா்க்கீச லெனிய சோசலீஸ்டுகள் ஆகும்.  ஆகும்.
 
பைபில் (BIBLE)   கூறியநாள் தமிழர்களின் பிறந்தநாள் அல்ல. ஆகவே உங்களின் பிறந்த நாளை நீங்கள் பிறந்த நட்சத்திரத்தைக் (ஜென்ம நட்சத்திரப்படி)   கொண்டே கொண்டாடவேண்டும். அதுவே நற்பலன்களை கொடுக்கும்.

No comments:

Post a Comment