Thursday, 3 September 2020

தேசியம் முகவுரை.

மொழி மட்டும் ஒரு இனத்தின் அடையாளம் அல்ல அந்த மொழியின் இலக்கிய வரலாற்று ஆவனங்களுடன் அந்த மொழி போற்றிய கலை கலாச்சார பண்பாட்டின் தொடர்ச்சியின் அடையாளமாக விளங்குகின்ற நாட்டின் தேசிய இனத்தை தேசியம்  வரையறை செய்கின்றது.

தாயின் தேசியமும்  தந்தையின் தேசியமும் ஒரே தேசியமாக இருந்தால்தான் அவர் அந்த தேசியத்தின் இனத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தப்படுவாா். 


தந்தை ஒரு தேசியத்தாலும், தாய் பிறிதொரு தேசியத்தால் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தால், தாய் தன் தேசியத்தால்
 குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குடும்பம் தந்தையின் தேசியத்தை சேராமல் தாயின் தேசியத்தை சேர்ந்ததாகவே அடையாளப்படுத்தப்படும்.

ஒரு குழந்தையின் தந்தை வேற்று தேசியத்தால் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தால்,  தாய்  வேற்று தேசியத்தால் அடையாளப்படுத்தப்பட்டு  இருந்தும், தாயும் தந்தையும் தங்கள் தங்கள் தேசியத்தை துறந்து இருந்தால் அந்த குழந்தை தன்தேசிய சிறப்பியல்புகளை இழந்த கலப்பின தேசியமாகவே   அடையாளப்படுத்தப்படுத்தப்பட்ட தேசியத்தால் அடையாளப்படுத்தப்படும்.

 ஆண் ஒரு தேசியத்தையும் அவரை திருமணம் செய்த  வேற்று தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் அந்த ஆணின் தேசியத்தில் குழந்தைகளை வளர்த்தால் அவர்கள் அந்த தேசிய இனத்தைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர்.

வேறு தேசியத்தை கொண்டவர்கள் பிறிதொரு தேசிய நாட்டில் அந்த தேசியத்தின் அடையாளக் கூற்றினை கொண்ட  மொழியைக் கற்றுக் கொண்டு அந்த தேசியத்தினை கொண்ட நாட்டில் வசித்து வந்தாலூம் அல்லது அந்த நாட்டின் வதிவிடத்தை பெற்று இருந்தாலும் தன் பூர்வீக தேசியத்தை தொடர்ச்சியாக பின்பற்றி வந்தால் அவர் தன்னுடைய பூர்வீக தேசியத்தால் அடையாளப்படுத்தபடுவர்.  

ஒரு தேசியத்தின் பல்வேறு வகையான அடையாளக் கூறுகளை  தொடர்ந்து கால காலமாக  நிலப்பகுதிகளை கொண்டு உள்ள நாடு இருக்குமானால்  அந்த நாட்டுக்குள் வாழுகின்ற மக்களும், அந்த நாடும் அந்த தேசியத்தின் மூலமாகவே அடையாளப்படுத்தப்படும்.

தாயும்,தந்தையும் தமிழ்தேசியத்தின் அடையாளக் கூறுகளை கொண்டு இருந்தும் அவர்களின் சந்ததியினர் தங்களை தமிழின அழிப்பு செய்து 
கிறிஸ்தவ தேசியமாகவோ, இஸ்ஸாமிய தேசியமாகவோ ஏற்று  அவர்கள் தங்களைஅரேபிய ஏபிரகாமிய தேசியத்தால்  அடையாளப்படுத்தி   இருந்தால் அவர்கள் தமிழ்தேசியத்தின் அடையாளத்தில் என்று அடையாளப்படுத்த முடியாதவர்களாகவே இருப்பர்.







No comments:

Post a Comment