மனம் வலிமையானது
மனம் ஒடுங்குதல் தவம்
ஒடுங்கிய மனம் நடுங்குவர் தெவ்வர்
தவமும் தவமுடையார்க்கு ஆகும்
சனிக்கிழமை முழுவதும் தவம்
இலங்கை முழுவதும் தவம்
விளம்பரம் பார்த்து ஏங்குவர்
தவத்தில் நாம் இல்லையே
வாழைச்சேனையில் தவமிருக்கவா
உடுப்பிட்டியில் தவமிருக்கவா
மல்லாவியில் தவமிருக்கவா
காரைதீவில் தவமிருக்கவா
தவம் இருந்த ஒவ்வொருவரும்
தம்மை ஈந்து தவம் இருந்தனர்
உண்ண மறந்து தவம் இருந்தனர்
உறங்க மறந்து தவம் இருந்தனர்
உள்ளம் பெரும் கோயில்
சிவனின் பெரும் கோயில்
சிவனார் உறையும் கோயில்
சிவனார் உறைந்த உள்ளங்கள்
சிவனைச் சீர்பெற நோக்கினர்
சிவனின் திருவடி நோக்கினர்
சிவனின் திருவருள் வேண்டினர்
சிவபூமி காக்க வேண்டினர்
சிவனின் அருளை வேட்டதால்
சிவனார் கடைக்கண் பார்த்தனர்
சிவனார் ஊர்ந்தவர் பார்த்தனர்
சிவபூமியாக மீட்போம் என்றனர்
தவத்துக்கு வலிமை உண்டு
தவம் அவம் போகாது
தவத்தோர் கேட்டதைத் தருவார்
தவத்தோர் உள்ளம்வாழ் சிவனார்
பத்தாயிரம் சுவரொட்டிகள் ஒட்டினோம்
பல இலட்சம் சைவர் பார்த்தனர்
சைவர்கள் உள்ளங்கள் கிளர்ந்தன
சிவனாரை நோக்கி மலர்ந்தன
பன்னிரண்டு மாவட்டங்களில் தவம்
பதினெட்டுத் திருக்கோயில்களில் தவம்
கண்ணிரண்டும் உடையோர் காண்க
கருத்தொருமித்தோர் குரலைக் கேட்க
அரசியல் அமைப்பில் சைவம்
அரசியல் அமைப்பில் பாதுகாப்பு
அரசியல் அமைப்பில் மாடுகள்
அரசியல் அமைப்பு சிவமாயமாகும்
No comments:
Post a Comment