Saturday, 3 April 2021

Jesus சிவபூமி தேசத்தின் காணியை அபகரிக்கச் சொன்னாரா?

 கத்தோலிக்க அட்டூலியம்  .

புத்தர்  தமிழர்களின் தேசத்தை அபகரிக்கிறார்.  தமிழர்களை கொலை செய்கின்றாா். சைவ ஆலயங்களை ஆக்கிரமிக்கின்றாா். என்று ஓலம் இடுகிறார் அரேபிய இஸ்லாமிய தேசிய உடை  கலாச்சார பண்பாடுகளை கொண்ட ஐரோப்பிய ஆபிரிக்க கலப்பின கத்தோலிக்க அருள் நங்கை. (கீழே உள்ள படம் பார்க்க. )

நான் அவரைப் பார்த்து கேட்கிறேன். Jesus  (இயேசு)  சிவபூமி தேசத்தின்  காணியை அபகரிக்கச் சொன்னாரா?

கேரதீவு அருள்மிகு அய்யனார் திருக்கோயில். அருகே அரசு காணி. சாவகச்சேரிப் பிரதேச செயலகக் காணிப் பயன்பாட்டு குழு  அந்தக் காணியைப் பிரதேச சபைக்கு ஒதுக்கியது.

சுற்றுலா வளர்ச்சித் திட்டத்தின் நோக்கம் கொண்டு அந்தக் காணியைத் தொழில் முனைவோர் கேட்டனர். பிரதேச சபைக்கு ஒதுக்கிய காணியை உங்களுக்கு ஒதுக்குவதற்குச் சட்டம் இடம் தரவில்லை. அதை மாற்றுவதற்குக் கொழும்புக்கு எழுத வேண்டும் என்று பிரதேச செயலகத்தில் காணி அலுவலர் உடுவில் மல்வம் ஊரைச் சேர்ந்தவர் கத்தோலிக்கர் திரு சசிகுமார் கூறினார். .

எந்தக் காணியைச் சுற்றுலாத் திட்டத்திற்கு கொடுக்க மறுத்தாரோ அதே காணியைக் கத்தோலிக்க ஆயருக்கு மாற்றிக் கொடுத்துள்ளார். 

யாழ்ப்பாணத்தில் பல்வேறு சபைகளில் ஆயர்கள் இருக்கிறார்கள். அந்தக் குழப்பத்தைத் தவிர்க்க உரோமன் கத்தோலிக்க ஆயருக்கு சொந்தமான இடம் எனப் பெயர்ப் பலகையை யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆயர் அந்தக் காணியில் அமைக்கிறார்.

புத்தர்கள் காணியை அபகரிக்கிறார்கள் என்கிறீர்களே. அருள் நங்கையே! உங்களைக் கேட்கிறேன். தட்டியைப் பிடித்துக் கொண்டு தெருவில் ஓலம் இடுகிறீர்களே. அடாத்தாக யாழ்ப்பாணம் கத்தோலிக்க ஆயர் அருள்மிகு அய்யனார் கோவிலுக்கு அருகில் உள்ள காணியைத் தனது காணி எனப் பெயர்ப் பலகை இட்டுள்ளாரே! ஆக்கிரமிப்பாளர் கத்தோலிக்கரா? புத்தரா?

புத்தர் காணியை ஆக்கிரமிக்கச் சொன்னாரா? என ஊர்வலத்தில் தட்டி பிடிக்கிறீர்கள். இயேசு பிரான் காணியை ஆக்கிரமிக்க சொன்னாரா?

அருள்மிகு அய்யனார் திருக்கோயிலின் தூய்மையையும் புனிதத்தையும் கெடுக்க, அதைச் சாத்தான் கோயில் என்று திருப்பித் திருப்பிப் பக்கத்துக் காணியிலிருந்து ஒலிபெருக்கி மூலம் சொல்வதற்கு முயல்கின்ற, கத்தோலிக்க ஆயரின் நடவடிக்கைகளைத் துணிவோடு சந்திக்க, சவால்களைச் சந்திக்க சைவ இளைஞர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். 

தமிழரிடையே பிளவு உண்டாக்கும் நோக்குடன், தமிழர்களைச் சமய ரீதியாகப் பிளக்கும் நோக்குடன் ஆக்கிரமிப்பாளர் ஆன யாழ்ப்பாணம் உரோமன் கத்தோலிக்க ஆயர் தனது முன்னெடுப்புகளைக் கைவிடுவாராக.

உடுவில் மல்வம் கத்தோலிக்கர் திரு சசிகுமார் மீது பொது ஊழியர் சட்டமீறல் நடவடிக்கை வருமா?

சாவகச்சேரி பிரதேச செயலகத்தில் காணி அலுவலராக அவர் தொடர்ந்தால் அரச காணிகள் கத்தோலிக்கருக்குச் சட்டத்தை மீறிக் கையளிக்க வாய்ப்புகள் பெருகும் என்பதால் அவரை உடனடியாக இடமாற்றுவார்களாக.

 தமிழர்களே நாளை உங்களின் ஆலயத்திற்குள் கத்தோலிக்கர்கள் சிலுவையை நாட்டுவாா்கள். கத்தோலிக்கர்கள் வன்னிதேர்தல் மாவட்டத்தில் 2011 ம் ஆண்டில் இருந்து 30 க்கும் அதிகமான சைவ ஆலயங்களை உடைத்து எறிந்து உள்ளாா்கள் .  இவர்களே உண்மையான தமிழின அழிப்பாளர்கள். என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

கத்தோலிக்கம் மேற்கொண்ட சைவ கோயில் அழிப்புகள். வரலாறு.பாகம்--01 

https://jaffnaviews.blogspot.com/2021/02/blog-post_8.html

No comments:

Post a Comment