Sunday, 18 April 2021

தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகள் மூடப்படுவது ஏன்?

தமிழர் ஒருவர் ஒருவர் இறந்து விட்டால் அவருடைய ஆன்மா சாந்தி அடைவதற்காக செய்யப் பெறும் கிரியைகள் சைவநெறி சாா்ந்தவையாகவே இருக்கின்றன.

 அவரை உடனே குளிப்பாட்டி, விபூதி அணிவித்து, சந்தண பொட்டும் வைத்து தெற்குத் திசை நோக்கி தலைப் பகுதி இருக்குமாறு கட்டிலை வைத்து, குத்து விளக்கேற்றி வைப்பார்கள். அத்துடன், இறந்தவரின் உடல் வைக்கப்பெற்றுள்ள இடத்தில் கட்டிலுக்கு மேலே வெள்ளை கட்டி சைவநெறிகளின் அடிப்படையில் சகல கிரிகைகளும் நடை பெறுகின்ற பொழுது தெருவில் சவ ஊர்வலம் போகும் போது கோவில் கதவுகளை மூடிவிடுகிறார்களே ஏன் ? 

 முதலாவது காரணி.                                                                                       கோவில் என்பது பொதுமக்கள், குளித்து தூய்மையுடன் கூடும் இடம். கிருமிகள் பரவ வாய்ப்புகள் அதிகம். எனவே கோயில் மூடப்பட்டால் பொதுமக்கள் கூடமாட்டாா்கள் அதனால் கிருமிகள் பரவுவதை தடுக்க முடியும்.

இரண்டாவதுகாரணி.                                                                             கிராமத்தில் மரணவீடு நடக்கும் பொழுது அந்த கிராமத்து மக்கள் மரணவீட்டில் கலந்து கொண்டு அஞ்சலி செய்யவேண்டும் என்பதற்காகவே ஆலயங்கள் சாத்தப்படுகின்றன.

No comments:

Post a Comment