1904 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் திகதி மாத்தறையில் அவர் பிறந்தார்.1997ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி காலமானார்.
கலாநிதி அல்ஹஜ் பதியூதின்மஹ்மூத் இலங்கை முஸ்லிம் லீக் அமைப்பின் செயலாளராக 1927 இல் இருந்து அதனை கட்டியெழுப்புவதிலும் இலங்கையில் முகமதியினரை வளர்பதிலும் பாதுகாப்பதிலும் ,முஸ்லிம் சமூகத்தின் கல்வி மற்றும் அரசியல் பொருளாதாரத்தை வளம்படுத்துவதில் அயராது பாடுட்டு உழைத்த காரணத்தால் பதியுதீன் மஹ்மூத் இலங்கை முகமதியர்களினால் போற்றப்படுகிறார்.
தனது இளம் பராயத்தை மாத்தறையிலும் வெலிகமவிலும் கழித்த இவர், ஆரம்பக் கல்வியை வெலிகமை, மாத்தறை ஆகிய இடங்களில் கற்று பின்னர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியில் கற்றார். தனது உயர் கல்வியை இந்தியாவில் அலிகார் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.
அலிகாரிலிருந்து பட்டதாரியாக நாடு திரும்பிய 1939 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி அகில இலங்கை முஸ்லிம் அரசியல் கல்வி மாநாட்டை கொழும்பில் கூட்டினார்.
"ஒரு சமூகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அதன் பங்கை நிறைவேற்ற வேண்டுமானால் அந்த சமூகத்திற்கு உரிய அரசியல் உரிமைகள் வழங்கப்படுவது அவசியமாகும்” என்று அங்கு அவர் வலியுறுத்தினார்.
“ நாட்டின் அரசியலிலும் நாம் முக்கியத்துவம் பெறுவது அவசியமானதாகும். அதற்காக விசேட முக்கியத்துவம் அரசியலமைப்பில் எமக்கு கிடைத்தே ஆக வேண்டும். அப்போதுதான் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்தில் எமது பங்கை உரிய முறையில் நிறைவேற்றி வைக்க முடியும்” என்றார் அவர்.
1960களில் கல்வி ஒளிபரப்பு அமைச்சரானார். இலங்கை வானொலியில் முஸ்லிம் பிரிவை உருவாக்கி, முஸ்லிம் நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார்.
முஸ்லிம் சமூகத்தின் அங்கீகாரத்துடன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த கிழக்கு மாகாணத்தில் தேர்தலில் களம் இறங்கினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஏனைய சிலருடன் அமரர் பண்டாரநாயக்கா ஆரம்பித்த போது அவருக்கு பக்கபலமாக நின்று முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டார். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அவர் எதிர்த்தார். இலங்கை அரசியலில் சனத்தொகை அடிப்படையிலேயே பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தார்.
1970 களில் ஆட்சிக்கட்டிலுக்கு சிறிமா வந்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சியில் டொக்டர் பதியுதீன் மஹ்மூத் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட டொக்டர் பதியுதீன் முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காக முழு அளவில் பாடுபட்டார். முஸ்லிம்களுக்காக தனியான முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்கினார்.
அமைத்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த கலாநிதி அல்ஹஜ் பதியூதின் மஹ்மூத் சிறிமாவோ பண்டரநாயக்காவுக்கு அரசியல் அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இனரீதியில் சிங்கள மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு அதிகமாக உள்நுழைக்கும் நோக்கில் கல்வியில் தரப்படுத்தல் எனும் திட்டத்தைக் 1971 கொண்டு வந்து தமிழர்களின் கல்வி வளத்தை அழிப்பதில் ஈடுபட்ட இஸ்லாமியர்.
சிறிமாவோ பண்டரநாயக்கா தரப்படுத்தலை எதிா்தால் சிங்கள மக்கள் மத்தியில் சிறிமாவோ பண்டரநாயக்கா தமிழர்களுக்கு சாா்பாகவும் , சிங்கள மக்களுக்கு எதிராகவும் செயல்படுகின்றாா் என்று காட்டி ஐக்கிய தேசிய கட்சியை வெல்ல வைக்க முடியும்.
சிறிமாவோ பண்டரநாயக்கா தரப்படுத்தலை ஆதரித்தால் தமிழர்களின் போராட்டங்களை தமிழரசு கட்சி நிறுவனர் கிறிஸ்தவ சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் மேற்கொள்வாா் இதன் ஊடாக சிறிமாவோ பண்டரநாயக்காவை வீழ்த முடியும் என்று திட்டம் போட்டனர். இதனை நன்கு அறிந்து இருந்த சிறிமாவோ பண்டரநாயக்கா தரப்படுத்தல் முறையை சட்டமாக்கி அமுல்படுத்தினாா்.அதேநேரம் யாழ்பாண பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி தமிழர்களின் கல்விவளத்தில் சிறிது மாற்றங்களை உருவாக்கினாா்.
No comments:
Post a Comment