மணிமேகலையில் இராமாயணம்.
கம்பராமாயணத்திற்கு 6-7 நூற்றாண்டுகள் முற்பட்ட பௌத்த காவியமான மணிமேகலையில் ராமாயணச் செய்திகள் சான்றுகளாகவே அளிக்கப் பட்டிருக்கின்றன.
திராவிட இயக்கம் சார்ந்த சில தமிழ் ஆர்வலர்களாலும் மதிக்கப் படும் பேராசிரியர் *ஜியார்ஜ் ஹார்ட்* ராம காதையை ஆரிய-திராவிட நோக்கில் பார்த்தது என்பது ஒரு குறுகிய காலத்திற்கு தமிழ்ச் சமுதாயத்தில் உண்டான, துரதிர்ஷ்டவசமான போக்கு.
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம் அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப் பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
முழுப்பாடல்கள் உள்ளது விளக்கத்துடன்.
http://www.tamilvu.org/slet/l3200/l3200son.jsp?subid=3659
சைவத் திருமுறைகளில் இராமாயணம்.
"செங்கண்மால் சிலைபிடித்துச் சேனை யோடுஞ் சேதுபந் தனஞ்செய்து சென்று புக்குப் பொங்குபோர் பலசெய்து புகலால் வென்ற போரரக்கன் நெடுமுடிகள் பொடியாய் வீழ”
திருஇராமேச்சுரம் என்று வழங்கும் ராமேஸ்வரம் திருத்தலத்தில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் பாடிய பதிகங்களில் சில பாடல்கள்.
"பலவுநாள் தீமை செய்து பார்தன் மேல் குழுமி வந்து
கொலைவிலார் கொடியராய அரக்கரைக் கொன்று வீழ்த்த
சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தலையினால் வணங்குவார்கள் தாழ்வராம் தவம் அதாமே
[சிலையினான் - வில்லை உடைய இராமன்]
வன்கண்ணர் வாளரக்கர் வாழ்வினை ஒன்றறியார்
புன்கண்ணர் ஆகிநின்று போர்கள் செய்தாரை மாட்டிச்
செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தைத்
தங்கணால் எய்த வல்லார் தாழ்வராம் தலைவன் பாலே"
(திருநாவுக்கரசர் தேவாரம், திருவிராமேச்சுரப் பதிகம்)
தேவியை வவ்விய தென்னிலங்கை யரையன் திறல் வாட்டி
ஏவியல் வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச் சுரத்தாரை
தேவியை வவ்விய - சீதையைக் கவர்ந்து சென்ற]
(திருஞானசம்பந்தர் தேவாரம், 3ம் திருமுறை, 101-10)
இராவணன் கயிலாய மலையைப் பெயர்க்கையில், சிவபிரான் தம் கால் விரலால் அதை அழுத்தியதைக் கூறுகையில்,
“அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்றிலீர் எம்பெருமானிரே”
திருப்புகழில் ராமாயணம் .
“எந்தை வருக ரகுநா யகவருக மைந்த வருக மகனே யினிவருக என்கண் வருக எனதா ருயிர்வருக ...... அபிராம இங்கு வருக அரசே வருகமுலை யுண்க வருக மலர்சூ டிடவருக என்று பா¢வி னொடுகோ சலைபுகல ...... வருமாயன்”
(“தொந்தி சரிய” என்று தொடங்கும் திருச்செந்தூர் திருப்புகழ்)
“சமத்தி னாற்புகழ் சனகியை நலிவுசெய் திருட்டு ராக்கத னுடலது துணிசெய்து சயத்த யோத்தியில் வருபவ னரிதிரு ...... மருமகப் பரிவோனே”
(‘பழிப்பர் வாழ்த்துவர்’ எனத் தொடங்கும் மதுரைத் திருப்புகழ்)
No comments:
Post a Comment