Tuesday, 6 April 2021

பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களின் சிங்கள இனவெறி.

மே மாதம் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் படுகொலை. சர்வதேச கிறிஸ்தவ நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசு முள்ளி வாய்க்காலில் இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை தமிழீழ விடுதலை புலி பயங்கரவாதிகள் என்று கூறி கொலை செய்த பொழுது அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் அல்ல பயங்கரவாதிகளே என்றும் நீதி விசாரனைகள் அவசியம் அற்றது என்றும் 2009 ம் ஆண்டு கருத்தை தெரிவித்தவர் இலங்கைக்கான வற்றிக்கானின் தூதுவரும் தூதுவரும் இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித்.

ஈஸ்டர் தின குண்டுதாக்குதல்.  இலங்கையில் ஏப்ரல் 21, 2019 உயிர்ப்பு ஞாயிறு ஈஸ்டர் தினத்தில் அன்று கிறிஸ்தவ CHURCH களை இலக்கு வைத்து இஸ்லாமியர்களாள் நடத்தப்பட்ட பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல் தொடர்பாக இலங்கைக்கான வற்றிக்கானின் தூதுவரும் தூதுவரும்  இலங்கையின் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித் இலங்கையின் இந்து பெளத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது பல்வேறு குற்றச்சாட்டு தாக்குதல்களை தொடுத்திருந்தாா்.

சர்வதேச கத்தோலிக்க நாடுகளிடம் உதவி கோரல். அத்துடன் கத்தோலிக்க மதத்திற்கு எதிராக இயங்கி கொண்டு இருக்கின்ற இலங்கையின் பெளத்த அரசிற்கு எதிராகவும் மற்றும் தீவிரவாத பெளத்த பீடங்கள், இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும்கத்தோலிக்க மதத்தையும் கத்தோலிக்க மக்களையும் காப்பாற்றுமாறு சர்வதேச கத்தோலிக்க அரசுகளையும் அமைப்புக்களையும் நாடியிருந்தாா்.

பெளத்த பீடங்களின் கண்டனங்கள்.                                                                     கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் இந்த நடவடிக்கையானது பெளத்த பீடங்கள் மத்தியில் இருந்து பலத்த கண்டனங்கள் எழுந்ததை நீங்கள் அறிந்த விடையம் ஆகும்.

பேராயர் மெல்கம் ரஞ்சித் அவர்களின்  இன மொழி மத வெறி.          இலங்கை அரசு முள்ளி வாய்க்காலில்  இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை  தமிழீழ விடுதலை புலி பயங்கரவாதிகள்  என்று கூறி கொலை செய்த பொழுது  அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் அல்ல  பயங்கரவாதிகளே என்று கூறி  தமிழ்மக்களுக்கு எதிராக தனது சிங்கள மொழி வெறியையும், சைவசமயத்திற்கு எதிராக கத்தோலிக்க மதவெறியையும், தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளுக்கு எதிராக கத்தோலிக்க கலாச்சார பண்பாடுகளையும் காட்டியவர் பேராயர் மெல்கம் ரஞ்சித்.



https://www.tamilwin.com/politics/01/272522?ref=home-latest

No comments:

Post a Comment