Sunday, 25 July 2021

தமிழர்களே அஞ்சலி செய்யுங்கள்.

ஒரு நாமம் – ஒரு பெயரும், ஓர் உருவம் – ஒரு வடிவமும், ஒன்றும் இல்லாத இறைவனை தம்முள் கண்ட மக்களுக்கு இறைவன் அருளியது தெய்வீகம்  நிறைந்த இலக்கணம் கொண்ட இயல் (இயற்தமிழ்), இசை (இசைத்தமிழ்), நாடகம் (நாடகத்தமிழ்) ஆகிய மூன்றும் கொண்ட தெய்வீக தமிழ்.  தெய்வீக தமிழை அருளிய  இறைவனை நிராகரித்தும், தமிழை அருளிய இறைவன் தமிழுக்கு அருளிய தமிழ்தேசியத்தின் கொடியான இடபக் கொடியை நிராகரித்தும், இறைவன் அருளிய தமிழ்போற்றிய தமிழின் தெய்வங்களை நிராகரித்தும் மாபெரும் தமிழின அழிப்பை நடாத்தியவர்கள் ஈழபோராட்ட குழுக்கள்.

ஈழபோராட்ட குழுக்கள். சங்க இலக்கியங்கள்   பேசிய  சைவ திருக்குறள் பேசிய  தமிழர்களின் அரசியல் நெறிகள்,   தமிழர்களின் வாழ்வியல் நெறிகள், தமிழர் (பொருளாதாரம்) பொருளியல் நெறிகள், மனித உரிமைகளுக்கான நெறிகள், சமத்துவ நெறிகள், மேன்மை கொள் சைவ நீதியின் நெறிகள் போன்ற அனைத்து நெறிகளையும்  நிராகரித்து சைவத்தையும் தமிழையும் எமக்கு தந்தவர்களை விட உலகில் எந்த முற்போக்கு சிந்தனையாளர்களும் இருக்க முடியாது என்பதனையும் நிராகரித்தும் தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற சதிநோக்குடன் சோசலீச தமிழீழ கோட்பாட்டை நிறுவி கால்மாக்சு ,கால்மாக்ஸ் , பிடல் கஸ்ரோவை , விளாதிமிர் இலீச் (லெனின்) மாசேதுங், அரேபிய யூத Jesus, அரேபிய முகமது  போன்ற அன்னியர்களை தெய்வங்களாகவும் , கம்யூநிஸ்ட் சோசலீசம் ,லெனினியம் ,மாவோயிசம் பைபில் குரான் சித்தாத்தங்களை வேதநூலாக கொண்ட ஆக்கிரமிப்பு மதங்களை நிறுவி தமிழின அழிப்புகளை செய்து முடித்தாா்கள்.

சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் ,உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் கொலை வெறிகளை நடாத்தி இரத்த ஆற்றை ஓடவைத்து உங்களின் குடும்பங்களுக்குள் பகையை மூட்டி காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று நடாத்தி முடித்தவர்கள்.

உங்களின் பல கோடி பெறுமதியான அசையா சொத்துக்களை அழித்தாா்கள் அத்துடன் உங்களின் பல கோடி பெறுமதியான அசையும் சொத்துக்களை கொள்ளையடித்தாா்கள். உங்களின் புணிதமான ஆலயவாசலில் கொலைகள் செய்தாா்கள், உங்களின் புணிதமான ஆலயத்தில் கொள்ளையும் நடாத்தி உங்களை கொலை செய்யாமல் காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொள்ளையடிப்போம் சொத்துக்களை நாசம் செய்வோம் என்று கூறி உங்களை பிச்சை எடுக்க வைத்தாா்கள்.

 தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாட்டுடன் வாழ்ந்து இறந்தவர்களுக்கு தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின்  நினைவுத் தினத்தில் நினைவு தூபியில்  காலில் செருப்புகள் இன்றி  தமிழ்தேசியத்தின் மரபுவழித் கலாச்சார பண்பாடுகளின் அடிப்படையில்  நெற்றியில் திருநீற்றுடனும் பொட்டுடனும் நின்று விளக்கில் தீபம் ஏற்றி அதைக் கொண்டு குத்துவிளக்கு  ஏற்றி அவர்களை நினைவு கூர்ந்து பூவினால் அஞ்சலி செய்தல் வேண்டும்.

தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை சிதைத்து அழித்து அதன் ஊடாக தமிழின அழிப்பை செய்து முடிக்க வேண்டும் என்பதற்காக மெழுகுதிாியை திணித்து தமிழ்தேசியத்தின் கலாச்சார பண்பாடுகளை அழித்துக் கொண்டு இருக்கின்றாா்கள்.

தமிழினத்தை பலவகையாக அழித்தவர்களுக்கு தமிழினத்தை அழித்துக் கொண்டு இருப்பவர்கள் நடாத்துக்கின்ற அஞ்சலி நிகழ்வுளுக்கு செல்வது சிவகுற்றம். சிவகுற்றம் செய்யும் நீங்கள் இறந்த பிற்பாடு உங்களின் உடலும் ஆன்மாவும் சிவகுற்றம் புரிந்தவர்கள் என்று சைவ நெறிகள் கூறுகின்றன.

பல வகையாக சிவகுற்றம் புரிந்தவர்கள் இறந்த பிற்பாடு அவர்களது ஆன்மா சிவபதம்  (மோட்சம்) அடைய அவர்களின் இறந்த உடலுக்கு சைவ நெறி வழியை கடைப்பிடித்து  திருவாசகம் ஓதி எல்லாவிதமான சைவகிாியைகள்   செய்தாலும் சிவகுற்றம் காரணமாக என்றுமே  இறந்தவர்களினான்மா மோட்சம்  அடையமாட்டாது என்பதனை நினைவில் கொள்ளுங்கள். 

நான் அழிகின்றேன் பாா் என்று மாா்தட்டி சொல்பவர்கள் அழிவதை யாராலும் தடுக்க முடியாது அது அவர்களின் வினைப்பயன்.

No comments:

Post a Comment