Saturday, 3 July 2021

கனடாவில் Church களுக்கு எதிராக போா்கொடி .வீடியோ இனைப்பில் உள்ளது.

 இற்றைக்கு 100 வருடங்களுக்கு முன்பு கனடாவின் பூர்வீகக் குடிகளின் குழந்தைகளை கத்தோலிக்க மத நிறுவனங்கள் 'குடியிருப்பு கல்வி நிலையங்கள் (Canadian Indian residential school )' என்று அமைத்து அங்கே இந்த பூர்வீக குடிகளின் குழந்தைகளை அவர்களின் பெற்றோர், உற்றார், உறவினரிடம் இருந்து பறித்தெடுத்து குழந்தைகளை விட்டிற்கு செல்ல அனுமதிக்காது  இழுத்து வந்து அங்கு அடைத்து கற்பிக்கின்றோம், இருப்பிடம் தருகின்றோம், உணவும் தருக்கின்றோம், என்று கூறி மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு, உணவு, உறவு என எல்லாவற்றையும் 'கொன்று" கனடாவின் பூர்வ குடிமக்களான சிவப்பிந்திய குழந்தைகளை சர்ச்சு பாதிரிகளும், ஆங்கிலேய அரசும் கொன்று குவித்த ஆதாரங்கள் தோண்டத் தோண்ட எச்சங்கள் வெளியே வரும் அவலங்கள் வெளிவந்துக் கொண்டு இருக்கின்றன.

கனடா முழுதும் மக்கள் தற்போது சிவப்பு இந்தியர்களுக்கு எதிராக நடந்த கலாச்சார இனஒழிப்பு கொடுமைகளை எதிர்த்து பெரும் போராட்டத்தில் இறங்கி வருகிறார்கள். விக்டொரியா, எலிசபெத் என சிலைகள் தரைமட்டமாக்கப்படுகின்றன.

1980 ம் ஆண்டுக்கு பிற்பாடு கணடாவில் குடியேறிய நம்மவர்கள் கனடாவின் பூர்வீகக் சிவப்பு இந்தியர்களின் வரலாறுகளை தெரியாதவர்கள் அங்குவாழுகின்ற அனைத்து இன மக்களும் இங்கு குடியேறியவர்கள் என்றும் கனடாவுக்கு சொந்த இன மக்கள் இல்லையென்றும் தாங்களே பூா்வீக குடிள் என்றும் பெருமைபட பேசுகின்றாா்கள்.

தமிழர்கள் மட்டும் இன்னும் நம்மை அடிமைப்படுத்திய ரிப்பனின் பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள் தெரியவில்லை ?
பதை பதைத்து போன மக்கள் Church (சர்ச்சுகளுக்கு) எதிராகவும், இங்கிலாந்து மகாராணிக்கு எதிராகவும் போர்கொடி தூக்கி துவங்கியுள்ளனர். விக்டோரியா மகாராணி சிலை தகர்க்கப்படும் காட்சி .


No comments:

Post a Comment