இலங்கையில் முல்லைத்தீவில் கிறிஸ்தவ தேசிய வளர்ச்சிக்கு நிதிரட்டும் முகமாக உப்புமாவெளி பகுதியில் அரச காணியை சட்ட விரோதமான முறையில் கைப்பற்றி ஆயர் இல்லத்து காணியாக மாற்றியமைத்து அரச அனுமதியற்ற மணல் அகழ்வில் ஈடுபட்டு இருந்தார்கள் ஆயர் இல்லத்தை சேர்ந்த பங்கு தந்தையர்கள். இவர்களுக்கு பெரும் உதவியாக செயல்பட்டவர்கள் பங்கு தந்தையர்களின் பங்கு பிள்ளைகளான கிறிஸ்தவர்கள்.
உப்புமாவெளி இடத்திற்கு கடந்த 15.06.2021 அன்று நேரில் சென்ற முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட காணி உத்தியோகத்தர்கள், கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், குறித்த பகுதி கிராம அலுவலர், புவிச்சரிதவியல் சுரங்கங்கள் அளவைகள் பணியகம், சுற்றச்சூழல் திணைக்களம், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர், பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் என அனைத்து திணைக்கள அதிகாரிகளும் குறித்த மணல் அகழ்வு நிலமைகளை பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது குறித்த பகுதியில் மணல் அகழ்வு செய்து குவிக்கப்பட்டுள்ள விடயம் எந்த அனுமதிகளுமின்றி சட்டவிரோதமாக இடம்பெற்றுள்ளது என்பதை அனைவரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் முல்லைத்தீவு பொலிஸார் இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்தாலும் கடந்த ஒரு மாதகாலமாக எவரையும் கைது செய்யாத நிலையில் உப்புமாவெளி பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வு இடம்பெற்ற காலத்தில் முல்லைத்தீவில் ஆயர் இல்லத்திற்கு பொறுப்பாக இருந்து கிறிஸ்தவ மக்களின் பங்கு தந்தையர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட பங்கு தந்தை 15-07-2021 அன்று கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்றம் கிறிஸ்தவ மக்களின் பங்கு தந்தையை 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் வழக்கினை திகதியிட்டும் விடுவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் பங்கு தந்தைகளின் கூடாரம் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றிய காணியை உடனடியாக பறிமுதல் செய்து தண்டனை வழங்க வேண்டும்.
அத்துடன் சிவபூமியில் சட்டவிரோதமான முறையில் கள்ளத்தோணியில் கரையேறிய கிறிஸ்தவ மதம் நூற்றுக்கு மேற்பட்ட ஏக்கர்கள் காணிகள் கொள்ளையடித்து யாழ். ஆயர் இல்லத்திற்கு சொந்தமானது கூறிவருகின்ற அந்த காணிகள் எவ்வாறு பெறப்பட்டன என்ற விபரத்தை வெளியிடல் வேண்டும்.
No comments:
Post a Comment