Saturday, 3 July 2021

செல்வம் அடைக்கலநாதன்.

 தன்மானத் தலைவன் செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் ரெலோ இயக்கம் தமிழரசு கட்சியின் தயவிலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனும் இயங்குவது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்’ முன்னோடிகளான தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் சிறிசபாரத்தினம் போன்றவர்களுக்கு அவமாணத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையாகும்.

வெக்கம், மானம், சூடு, சொரணை அற்ற ரெலோவை விற்று தமிழரசு கட்சியின் வேட்பாளராக நின்று வெற்றி பெற்று பாராளமன்றம் சென்றவர் தன்மானத் தலைவன் செல்வம் அடைக்கலநாதன். தமிழரசு கட்சியில் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தனித்துவமாக செயல்படுவோம் என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக கூறிவருகின்றாா்.

ஆகவே வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ள ரெலோவின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உடனடியாக தமிழரசு கட்சியில் இருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வெளியேறி தன்மானத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ள ரெலோ இயக்கமும் இனிவரும் காலங்களில் நடைபெறுகின்ற சகல தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியிடம் மடிப்பிச்சை கேட்டு வாக்குகளை பெறாமல் தன்மாணத்துடன் செயல்படல் வேண்டும்.

திகதி: 15 Jan, 2021.

தன்மானத் தலைவன் செல்வம் அடைக்கலநாதன். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ இயக்கம் வெளியேறித் தனித்துச் செயற்படவுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளன.

கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பாக அதன் தலைவர் இரா. சும்பந்தனுக்குக் கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. தமிழரசுக் கட்சியை மையப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சமீபகாலச் செயற்பாடுகளில் அதிருப்பதியடைந்தவொரு நிலையிலேயே, ரெலோ இயக்கம் இந்த முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிருப்பதி பல காலமாக நீடித்திருந்தது எனவும், ஆனாலும் ஒரு சில தினங்களுக்கு முன்னரே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதென்றும் கூறப்படுகின்றது. குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விவகாரத்தைக் கையாளவது குறித்து நடத்தப்பட்ட கலந்துரையாடல்களில் ரெலோ இயக்கம் அழைக்கப்படவில்லை. தமிழரசுக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனீவா விவகாரம் தொடர்பாகக் கலந்துரையாடாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்தாக ரெலோ இயக்கத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தன. அதேவேளை, சிவில் சமூக அமைப்புகளோடு இடம்பெற்ற கலந்துரையாடல்களில் ரெலோ இயக்கத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் மனித உரிமைச் சபையின் ஆணையாளர், மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்குக் கையளிப்பதற்காகத் தயாரிக்கப்பட்ட வரைபில், ரெலோ இய்க்கம் கையொப்பமிட அனுமதிக்கப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது. தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அல்லது குறித்த கட்சிகளினால் அதிகாரமளிக்கப்பட்ட பிரதிநிதியொருவர் கையொப்பமிட்டால் போதுமெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் குறித்த வரைபில், இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்ற அடிப்படையில் ரெலோ இய்க்கத்துக்குக் குறித்த வரைபில் கையொப்பமிட அனுமதிக்கப்பட வேண்டுமெனச் செல்வம் அடைக்கலாநாதன் கோரியுள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஆலோசனையின் பிரகாரம் மேற்படி குறித்த மூன்று கட்சிகளின் தலைவர்களும் கையொப்பமிடடால் போதுமெனச் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கூறியதாகவும் ஆனால் ரெலோ இயக்கம் அதனை எற்றுக்கொள்ளவில்லை என்றும் ரெலோ இயக்கத்துக்கு நெருக்கமான ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்த ரெலோ இயக்கம், வன்னித் தேர்தல் மாவட்டத்தின் மன்னார் தொகுதியில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பிர்களைப் பெற்றிருந்தது.


No comments:

Post a Comment