காற்றுப் புக முடியாத இடமெல்லாம் நாம் புகுந்து கொல்வோம். கொலைதான் எங்கள் ஈழப்போராட்டம் என்று நடாத்தி முடித்தவர்கள் சகோதரங்கள் சகோதரங்களையும் , சகோதரங்கள் தாய் தந்தையர்களையும் ,உறவுகள் ,உறவுகளையும் , நண்பர்கள் நண்பர்களையும் கிராமங்கள் தோறும் , நகரங்கள் தோறும் தெரு தெருவாக தமிழர் தேசம் எங்கும் இரத்த ஆற்றை ஓடவைத்தவர்கள் தமிழர்களின் ஒற்றுமையை குலைத்தாா்கள், குடும்பங்களுக்குள் பகையை மூட்டினாா்கள் தமிழினத்தை நாசப்படுத்தினாா்கள்.
அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுக் குழுக்களின் கைக்கூலி, அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள், பாலஸ்தீன முன்னாள் ஜனாதிபதி யசீர் அரபாத்தின் கைக் கூலிகள், கத்தோலிக்க மதத்தின் கைக் கூலிகள் என பட்டியல் தயாாித்து கொலைகளை செய்து முடித்தாா்கள்.
மேலும் அவன் அந்த இயக்கத்தை சேர்ந்தவன், இவன் இந்த இயக்கத்தை சேர்ந்தவன் என்று கூறி கூறி பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி அதிபர்கள் ,கல்லூரி மாணவர்கள் நீதிபதிகள்,அரசாங்க அதிபர்கள், மேயர்கள், அரச உத்தியோகஸ்தர்கள், சமூக சேவகர்கள் , அரச ஆதரவாளர்கள், அரசியல்வாதிகள் , மாற்றுக் கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஊடகவியலாளர்கள், தங்களாள் சிறைப்பிடிக்கப்பட்டு தங்கள் சித்திரவதை முகாம்களில் இருந்தவர்களையெல்லாம் கொலை செய்தாா்கள்.
அத்துடன் தங்களை கேள்வி கேட்டவர்களையும் கொலை செய்தாா்கள் , வரி கப்பம் கொடுக்க மறுத்தவர்களையும் கொலை கொலை செய்தாா்கள் , தங்களிடம் இருந்து பிரிந்து சென்றவர்களை நித்திரைப் பாயில் வைத்துக் கொலை செய்தாா்கள் , சாப்பாட்டிற்குள் விஷம் வைத்துக் கொலை செய்தாா்கள் , தங்களுக்கு ஆதரவளிக்காதவர்களையும் கொலை செய்தாா்கள் ,விமான நிலையம்,வங்கிகள், ரயில் நிலையங்கள், ரயில்கள், பஸ்நிலையங்கள் ,சந்தைகள், மக்கள் கூடுமிடமெல்லாம் அப்பாவிகளை கொலை செய்தாா்கள் , குழந்தைகள் ,பெண்கள் , கர்ப்பிணிகள் ,முதியவர்கள் ,கிராமங்களில் வாழும் தமிழர்களை இராணுவம் போல் வேடமிட்டுக் கொலை செய்தாா்கள் இவ்வாறான முறையில் கல்விமான்களை கொண்ட பல இலட்சம் சைவக் குடிகளை கொண்ட கல்வி அறிவு கொண்ட தமிழர் சமுதாயம் அழிக்கப்பட்டடு தமிழர்களின் ஒற்றுமையை குலைக்கப்பட்டது.
சோசலீச தமிழ் ஈழத்தை நோக்கிய பயணங்களின் வடிவமைப்பில் மாவோயிஸ்ட்கள் ஸ்ரைல் (style) சோஷலிஸ்ட்கள் ஸ்ரைல் (style) இடதுசாாிகள் ஸ்ரைல் (style) வலதுசாாிகள் ஸ்ரைல் (style) கடும் போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு வலதுசாாிகள் ஸ்ரைல் (style) முற்போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு சிந்தனையாளா்கள் ஸ்ரைல் (style) முற்போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) மிதவாத போக்கு எழுத்தாளர்கள் ஸ்ரைல் (style) என பல ஸ்ரைல் (style) வடிவங்கள் வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்ட வடிவமாக மிகவும் அழகாக காணப்பட்டது.
மிகவும் அழகாக காணப்பட்ட தங்களின் வர்க்கப் போராட்டத்தை நிறுவுவதற்காக துப்பாக்கி குழாய் முனையில் அதிகாரம்பிறக்கின்றது என்று கூறிக் கொண்டு இடதுசாாிகளும் வலதுசாாிகளும் அவன் தமிழ்துரோகி, இலங்கை அரசின் கைக்கூலி, ஒட்டுக் குழுக்களின்கைக்கூலி, அமெரிக்க கைக்கூலி, இந்திய கைக்கூலி, லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச கைக்கூலிகள் என தங்கள் தங்கள் இயக்கங்களுக்குள் பல ஸ்ரைல் (style) வடிவங்களில் பல களையெடுப்புகளை உட்கட்சிப் படுகொலைகள் மூலம் நிகழ்த்தி ஆயிரக்கணக்கான தமிழர்களை கொலை செய்து தமிழர்களின் ஒற்றுமையை ஒற்றுமையை அழித்தாா்கள்.
No comments:
Post a Comment