இலங்கையில் தமிழ் மக்களின் பூர்வீகங்களை அழிப்பதற்கு ஏராளமான கிறிஸ்தவ மிசனறிகள் இயங்கி கொண்டு இருக்கின்றன. இதில் வத்திகனை தலைமையாகக் கொண்டு இயங்குகின்ற கத்தோலிக்க மிசனறிகளும் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏபிரகாம் சுமத்திரனின் தலைமையில் இயங்குகின்ற மெதடிஸ்த கிறிஸ்தவ அமைப்பும் முன்னிலையில் உள்ளன.
ஏற்கனவே அரையும் குறையுமாக கிறிஸ்தவ மிசனறிகளின் கையில் வீழ்ந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முற்று முழுவதுமாக கிறிஸ்தவ மிசனறிகளின் கைகளில் விழக்கூடிய சாத்தியக் கூறுகளே அதிகம் உள்ளன. உண்மையான தமிழ்த் தேசியம் மத மாற்று இயக்கங்களின் கைகளில் சிக்குண்டுள்ளதால் தமிழர்களுக்கு மிகவும் ஆபத்தான காலம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள எவருக்கும் தமிழ் மக்களை ஆழக்கூடிய எந்த தகுதியும் இல்லை. இலங்கையிலும் இந்தியாவிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், எமது சைவத் தமிழ் அரசர்களால் மக்களின் உணவுக்காக இலட்சக்கணக்கான குளங்களும் ஆறுகளும் கட்டப்பட்டன. அவர்கள் கட்டிய ஒரு குளத்திற்கோ அல்லது ஒரு ஆற்றுக்கோ ஒரு பக்க அணையைக் கூடக் கட்ட தகுதியற்றவர்கள்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.
சேனாதிராசா அவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்து கொண்டார். 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவிக் கொண்ட பின்னர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் உள் நுளைந்தார். சேனாதிராசா 2019 ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து தமிழ் மக்களுக்கு ஒரு வேளைபசியைக் கூடத் தீர்க்க முடியாதவராக இருந்தார். இவரால் தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி சிங்கள மக்களுக்கும் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
ஊழல், லஞ்சம், மோசடி, போதைப் பொருள், கசிப்பு உற்பத்தி போன்ற சமூக விரோதச் செயல்களை ஊக்கப்படுத்தி வருபவர்கள் சேனாதிராஜா தலைமையிலான தமிழரசு கட்சியினர். தமிழ் மக்களின் கலாச்சார சீரழிவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணமாகும்.
மாவை சேனாதிராஜா தன்னுடைய குடும்ப அரசியலை நிலை நிறுத்துவதற்காக தன் மகனை தமிழரசுக் கட்சியில் இணைத்துள்ளார். சைவத் தமிழரசை வீழ்த்துவதில் முக்கிய பங்காற்றிய கத்தோலிக்க மதப்போதகர்கள் மிக உற்சாகத்துடன் தமிழரசுக் கட்சியுடன் இணைத்துள்ளார்கள். மாவையின் மகனின் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அழிவுளை ஏற்படுத்துவதில் கத்தோலிக்க மிசனறிகள் திரைமறைவில் செயல்பட்டு வருகிறார்கள்.
கத்தோலிக்க இயக்கத்தின் மற்றொரு பிாிவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிறிஸ்தவ அணியுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வருகிறார்கள். இவ்வாறுதான் கிட்லரின் நாசிப்படை கத்தோலிக்க மிசனறிகளால் இயக்கப்பட்டது அனைவரும் அறிந்த உண்மை. இறுதியில் ஐந்து கோடிக்கு மேல் அப்பாவி மக்கள் யுத்தத்தில் மாண்டு போனார்கள்.
தமிழும் சைவமும் கலந்ததே தமிழ்த் தேசியம் என்ற உண்மையை மறுதலித்து தமிழ் மக்களின் இருப்புகளையும் பூர்வீகங்களையும் அழித்தொழிக்கும் கிறிஸ்தவ இஸ்ஸாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கைக் கூலிகளே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்இதன் காரணமாகவே இவர்களுக்கான பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்தும் , பினை எடுத்தும் , ஆதரவும் கொடுத்து இயங்குகின்றாா்கள் எந்தவொரு சந்தர்பத்திலும் கண்டித்ததும் இல்லை போராட்டங்கள் செய்ததும் இல்லை என்பதனை தமிழர்கள் நினைவு கூறல்வேண்டும். .பல படங்கள் இனைப்பில் உள்ளது. https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_22.html
அருளகம்
மாவையின் மகனும் பாதிாியாரும்
No comments:
Post a Comment