Thursday, 28 May 2020

கிறிஸ்தவ இனம்-.

"கிறிஸ்தவ இனத்தவர்கள்" என்று ஓா் இனத்தை அடையாளப்படுத்தி உருவாக்கி கொண்டிருக்கும் முன்னால் தமிழா்கள்"-

ஆங்கிலேய காலனிய காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து கொழும்பில் குடியேறியவர்கள். போர்த்துக்கேயர் காலத்தில் இருந்து பரம்பரை கிறிஸ்தவர்கள். அதனால் அவர்கள் தம்மை கிறிஸ்தவ இனம் என்று அழைப்பதையே விரும்புகின்றனர் அதனை நோக்கியே அவா்களது நகா்வுகளும் மிகவும் நூட்பமான முறையில் நகா்ந்து கொண்டு இருக்கின்றது. அதாவது, இலங்கையில் முஸ்லிம்கள் தனியான இனமாக அடையாளப்படுத்த முடியுமானால் கிறிஸ்தவ இனமும் சாத்தியமே என்பது அவா்களின் மறுக்கவும் , மறைக்கவும் முடியாத கோட்பாட்டு சிந்தனை இதுவும் சாத்தியமானதே.இதன் முதல் கட்ட நகா்வாகவே சைவசமய வழிபாட்டு முறமையை தங்களின் வழிபாட்டு இடங்களில் அறிமுகம் செய்து கொண்டு இருக்கின்றாா்கள்.தங்களின் மாற்றங்களின் ஊடாக தாங்கள் ஒரு கிறிஸ்தவ தேசிய இனமாக அடையாளப்படுத்தும் நோக்குடன் மிகவும் நுனுக்கமான பொறிமுறை அமைப்பின் ஊடாக நகா்ந்து கொண்டு இருக்கின்றனா்.

இலங்கையில் தீர்வு திட்டம் புதிய அரசியல் யாப்பு என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சார மத இருப்பை அழிப்பதில் முழு மூச்சுடன் செயற்படுகிறது.இதற்குரிய காரணம் கிறிஸ்தவ இன நோக்கிய நகர்வே ஆகும்.

ஒல்லாந்தா்-போத்துக்கீசா்-ஆங்கிலேயா் தொடா்ச்சியாக இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் கிறிஸ்தவ மிசனரிகள்  அரசியலின் ஊடாக தங்களின் உன்னத இலட்சியமான கிறிஸ்தவ தேசிய இனத்திற்கான  நகா்வினை மிகவும் தெளிந்த நோக்குடன் நோ்த்தியாக நகா்ந்து கொண்டுதான் இருக்கின்றாா்கள். பல வருடங்களில் பூரண நிலதன்மையை அடைந்து தேசிய இனமாக மலரும் இதற்கு பல கிறிஸ்தவ நாடுகள் உடனடியாக அங்கீகாரம் வழங்கும் என்பதனை யாரும் இன்று வரை சிந்திக்கவில்லை.இது நடை முறமைக்கு சாத்தியமே
சைவதமிழா்களே சிந்தியுங்கள். 

இஸ்லாத்தை அடிப்படையாக கொண்டு ஒரு முஸ்ஸிம் இனம் எப்படி உருவானதோ, அதே போலவே கிறிஸ்தவ இனம் இலங்கையில் உருவாகும்.  இதற்காகவே கிறிஸ்த சிங்கள தமிழ் அரசியல் தலைவர்களும் அவர்களது ஆலோசகர்களும் பெளத்த பேரினவாதத்தை கடந்த எழுபது வருடங்களுக்கு மேலாக கட்டியெழுப்பினாா்கள்.

இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் வழிநடத்துகின்றன.
அருளகம்

No comments:

Post a Comment