Tuesday, 5 May 2020

"தேவதாசி" , "தேவரடியார்" என்போா் யாா்?

"தேவதாசி" , "தேவரடியார்" ஆகிய சொற்களுக்கு இடையே தமிழர்களுக்கும் திராவிடவாதிகள் , நாத்திகவாதிகள் , கிறிஸ்தவ இஸ்ஸாமிய வாதிகள் லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்களுக்கும் இடையே பண்பாட்டு வேறுபாடு உள்ளது. 

தேவதாசிகள் என்ற இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள்படும் .

கோவில்   திருப்பணிக்காகவும் , சேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்துக் கொண்டவர்கள் தான் தேவதாசிகள் என அழைக்கப்படும்.கோயிலை தூய்மை செய்தல், நீர் இறைத்தல், பூ கட்டுதல், மடபள்ளக்கு உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர். இந்த பெண்கள்  பரத நாட்டியத்திலும் இசையிலும் நல்லதேர்ச்சிபெற்றவர்கள்  இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. தமிழர்களின் ஆலயங்களில் தமிழரின் மதிப்பு மிக்கவர்களே  "தேவதாசி" , "தேவரடியார்" எனப்படுவோர் இவர்களை பெண்டிர் என்றும் கூறுவர்  தமிழரின் மதிப்பு மிக்கவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் .  தேவரடியார் எனப்பட்டோர் பரத நாட்டியத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி  பெற்றவர்கள் கோயில்களில் தொண்டுகள் செய்வதற்காக  தாமே முன்வந்த பெண்கள் ஆவர்  இவர்கள் கருவறைவரை சென்று வந்தனர். தமிழரின் கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே  தேவரடியார் முறை ஆகும்.பெண்களை தெய்வமாகவும், மதிப்பும் மரியாதையும் கொடுத்த இனம் தமிழ் இணம் சிலப்பதிகாரத்தில் மாதவியின் நேர்மைத்திறம், அவளுடைய மகள் மணிமேகலையின் துறவறம் , ஆண்டாள் திருவரங்கனுக்கு   
செய்த  தொண்டு துறவறம் போன்றவை சிறப்பு மிகுந்தவை.

தமிழ் இணத்தில் பெண்கள் இருவகையாகயனவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கடவுளையே தனது கணவனாக ஏற்று கொண்டவர்கள்   முதல் பிாிவினர் மற்றொரு பிரிவினர் திருமணம் செய்து  செய்து கொண்டு  இறைவனுக்கு  தொண்டு செய்தவர்கள். 

திருநாவுக்கரசரின் மனைவியின் பெயர் பரவை நாச்சியார் இவர் ஒரு தேவரடியார் இவர் திருமணம் செய்து கொண்டு இறைவனுக்கு தொண்டு செய்தவர். சுந்தரமூர்த்தி நாயனாரின் காதல் மனைவி பறவை நாச்சியார் ஒரு தேவதாசி  இவர்கள் இருவரின் காதலுக்கு சிவபெருமான் தூது சென்றதாக புராணங்கள் கூறுகின்றன. தேவதாசிகளின் உயர்வான நிலைக்கு இதுவே சான்று .

மதுரை ஆண்ட  வேந்தர் வீரபாண்டியன் ஆவார். இவர் திருவானைக்காவில் சாந்தி கூத்து ஆடும் சொக்கத்தாண்டாள் என்ற தேவரடியாளை மணந்தார். வேந்தனை மணந்ததால் அவள் உலகமுழுதுடையாள் எனப்பட்டாள். 

கி.பி 11ம் நூற்றாண்டில் திருவாவூர் ஆலயத்தில் தேவரடியாராக இருந்த பறவைநாச்சியார்  இராசராசன் ஆட்சியின் போது தஞ்சைப் பெருவுடையார் கோவிலின் உள்ளே மாடித் தளத்தில் தேவரடியார்க்கு என்றே இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தேவரடியாருக்கு தனி வீடுகள் கட்டித்தரப்பட்டன. இவர்கள் ஆடல், பாடல், கல்வி, கேள்விகளில் சிறந்தோராக இருந்ததால் வேந்தர் முதல் பொதுமக்கள் வரை அனைவராலும் நன்கு மதிக்கப் பட்டனர்.  இவர்கள் சிறந்த கொடையாளிகளாகவும் இருந்துள்ளனர். கோவில்களுக்கு பல நிவந்தங்கள், கொடைகள் வழங்கி உள்ளனர். இவர்களின் சிறந்த குணங்களுக்காக வேந்தரும், மன்னவரும் மணந்தனர். இதில் குறிப்பிடத்த தக்கவர் 

சைவ சமய குறவர்கள் என்று போற்றபடுகின்ற மூவரில் முதன்மையானவரான திருநாவுக்கரசர்
"அருமணித்தடம் பூண்முலை யரம்பையரொ டருளிப் பாடியர்
உரிமையிற் றொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடைவிர திகளந்தணர் சைவர்பாசு பதர்க பாலிகள்
தெருவினிற் பொலியுந் திருவாரூ ரம்மானே."

ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூடமாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும். அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும். சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும். உடலின் அழகை விலைகூறி விற்கும் விலை மகள்ளாக அவர்கள் வாழ்ந்திருந்தால் இத்தகைய மரியாதை அவர்களுக்கு எப்படி கிடைக்கும்? அல்லது இந்த மரியாதையை வழங்குவதற்கு பொதுமக்கள் எப்படி அனுமதிப்பார்கள்? என்பதை சிந்தித்து பார்த்தால் தேவதாசிகளின் சமூக அந்தஸ்து எத்தகையது என்பது புரியும். "தேவதாசி" , "தேவரடியார்" என்போா் பாலியல் பதுமைகள் அல்லர்.

ஒழுக்க கெட்ட வாழ்க்கை வாழ்வதை இன்றைய சமுதாயம் கூட ஏற்றுக்கொள்ள மறுக்கும் போது அக்காலத்திய சமுதாயம் தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் ஏற்று இருக்குமா? தேவதாசிகள் ஒழுக்க கெட்டவர்களாக இருந்திருந்தால் இத்தகைய சிறப்பை அவர்களுக்கு கொடுத்து இருக்குமா?  

 உன்னதமாக தெய்வீக மரபு என்பதுதமிழர் விரோதிகளான திராவிடவாதிகள் , நாத்திகவாதிகள் , கிறிஸ்தவ இஸ்ஸாமிய லெனினிய, மார்க்சிய, சோசலிச, கம்யூனிச முகாங்களின்வக்கிர புத்தியால் சீரழிந்து சமுதாய அவமானமாக ஆகிப்போன நிலையில் அதை முற்றிலும் ஒழித்து கட்டப்பட்டது மிக நீண்டகாலமாக தெய்வீகத்திற்கும் ஆடல் கலைக்கும் அருந்தொண்டாற்றிய ஒரு மரபு தனது கீழ்மையை தானே தாங்காமல் தன் கதையை முடித்து கொண்டது என்றே சொல்லலாம்  இறைபக்திக்காகவும்,  கலைசேவைக்காகவும் தங்களை முழுமையாக அர்பணித்த பெண்ணினம் தமிழ் இணம் என்றால் போற்றப்பட வேண்டியதே.  .  

அவதூறு பரப்புவதன் ஊடாக தமிழ்க்  கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிப்பதன் மூலம் ஆலயங்களை இழிவுபடுத்தி அழிப்பதற்காக என்பதனை தமிழர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் கிறிஸ்தவர்களின் கன்னியாஸ்திாிகள் என்போா் பாலியல் பதுமைகளா?  .

அருளகம்








No comments:

Post a Comment