👊 ராஜீவ் காந்தி , ஜேஆரோடு சேர்ந்து 13வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தார். வடக்கு - கிழக்குக்கு சுயநிர்ணய உரிமை வரையிலான மாகாண ஆட்சியை பெற்றுக் கொடுத்தார்கள் . அதை புலிகள் எதிர்த்து இல்லாமலாக்கிக் கொண்டார்கள். ராஜீவ் காந்தியையும் படுகொலை செய்தார்கள்.
👊 பிரேமதாச , இது அண்ணன் - தம்பி சண்டை என இந்திய படைகளுக்கு எதிராக போராட புலிகளுக்கு பணமும் ஆயுதமும் வழங்கினார். இந்தியா வெளியேறியதும் தனிநாட்டைத் தவிர பிரபாகரன் எதைக் கேட்டாலும் தருகிறேன் என்றார். அதையும் எதிர்த்தார்கள். பிரபாகரனுக்கு இலங்கை இராணுவத்தில் பெரிய பதவி ஒன்றைக் கூட தான் தயாராக இருப்பதாக ஒருமுறை சொன்னார். அதையும் கண்டு கொள்ளவில்லை. இறுதியில் பிரேமதாசவையும் படுகொலை செய்தார்கள்.
👊 சந்திரிகா ஒரு நல்ல தீர்வை கொண்டு வர முயன்றார். அதுவே சிறந்த தீர்வு என பலர் இப்போதும் பேசுகிறார்கள். சந்திரிகாவை கொல்ல முயற்சி செய்தார்கள். கண் போனது. உயிர் போகவில்லை. அந்த தீர்வை வரைந்த நீலன் திருச் செல்வத்தை படுகொலை செய்து அதையும் இல்லாமல் செய்து கொண்டார்கள்.
👊 ரணில் , பிரபாவோடு ஒரு ஒப்பந்தத்தை செய்தார். அதில் தமிழ் பகுதிகளுக்குள் போலீசார் போக தடை விதித்தார். இராணுவத்தை முகாமுக்குள் முடங்கச் சொன்னார். ஆனால் புலிகளுக்கு நாட்டில் எந்த பகுதிக்கும் சென்று வர அனுமதியளித்தார். கொழும்பில் காரியாலயம் ஒன்று அமைக்க புலிகளுக்கு அனுமதி வழங்கினார். வடக்கில் பலமான வானோலி நிலையம் ஒன்றை உருவாக்க நோர்வேயிலிருந்து உபகரணங்களை கொண்டு வர அனுமதியளித்தார். ஆனால் புலிகள் தென் பகுதியில் இருந்த புலி எதிர்ப்பாளர்களை வேட்டையாடுவதற்கே அதை பாவித்தார்கள். அதற்கு மேல் எதற்கும் முனையவில்லை. இறுதியில் ரணிலின் ஆட்சியை சந்திரிகா இல்லாமல் செய்தார். ரணிலின் ஆட்சி கவிழ்ந்தது.
👊 மகிந்தவோடு ரகசிய உடன்பாடு ஒன்றுக்கு புலிகள் வந்து பல மிலியன்கள் பணமும் உதவிகளும் பெற்று ரணிலுக்கு தமிழர் வாக்குகள் கிடைக்காமல் பண்ணிய புலிகள் , ரணிலை தோற்கடித்தார்கள். மகிந்த வென்றார். மகிந்த போரை நிறுத்துங்கள். நாம் பேசித் தீர்க்கலாம் என்றார். பிரபாகரனோடு தானே நேரடியாக பேச விரும்புவதாகவும் சொன்னார். பிரபாகரனால் வர முடியாவிட்டால் தானே வந்து சந்திப்பதாகக் கூட பகிரங்கமாக சொன்னார். அதையும் தட்டிக் கழித்து மாவிலாறு அணையை மூடி அடிபட்டார்கள். கடைசியில் மகிந்த புலிகளை கூண்டோடு அழித்தார். புலிகளோடு அப்பாவி மக்களும் அழிந்தார்கள்.
👊 இப்ப சொல்லுங்க இத்தனை அழிவுக்கும் தோல்விக்கும் யார் காரணம்?
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_31.html
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_31.html
http://srilankamuslims.lk/test-author-7770/
No comments:
Post a Comment