Wednesday, 13 May 2020
ரெலோ ஏபிரகாம் சுமத்திரன் மோதல்.சுமந்திரன்
2006 ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்கபட்டபோது, ரெலோ அமைப்பு உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. ரெலோ வின் உபதலைவர்களில் ஒருவரான இந்திரகுமார் பிரசன்னா சார்பில் அந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் நீதிபதிகளிற்கு பயந்து, வழக்காளிகள் ஆகிய ரெலோ வை கேட்காமல் அந்த மனுவை மீளப் பெற்றுக்கொண்டவர்தான் இந்த சுமந்திரன், வழக்கு விசாரணையில் முன்னிலையான சட்டத்தரணி சுமந்திரன், வழக்காளிற்கு தெரியாமல் மனுவை வாபஸ் பெற்று கொண்டது ஏன்?இதை சுமத்திரன் மறுக்க முடியுமா?
ஒரு சட்டத்தரணிக்கு சிரமங்கள் வரலாம், வழக்காளிகள் ஆகிய ரெலோ விடம் அவர் கூறிஇருக்க வேண்டும், எனக்கு சிரமங்கள் உள்ளது, நீங்கள் இன்னொரு சட்டத்தரணியை வையுங்கள் என,நீதிமன்றத்திலும் அதனை சொல்லி இருக்க வேண்டும், அல்லது வழக்கில் அவருக்கு பட்ட நியாயங்களை, வழக்காளிகள் ஆகிய ரெலோ விடம் கூறியிருக்க வேண்டும். ரெலோ விடம் கேட்காமல் வழக்கை வாபஸ் பெற்றார்.யாருடைய நிகழ்ச்சி நிரலில் இதனை செய்து கொண்டு இருக்கிறார்?
ஒக்ரோபர் அரசியல் புரட்சியில் இலங்கை ஜனநாயகத்தை காப்பாற்ற வழக்காடிய சுமந்திரன் இதுவரை வடக்கு கிழக்கு மாகாணங்கள் பிரிக்பட்டதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய தயங்குவது ஏன்?
https://jaffnaviews.blogspot.com/2020/05/blog-post_81.html
No comments:
Post a Comment