Saturday, 30 May 2020

சிறில் மத்யூ Cyril Mathew

1981 யாழ். நூலக எரிப்பு மற்றும், 1983 ‘கறுப்பு ஜூலை’யின் முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவராகக் கருதப்படும் சிறில் மத்ய( Caluadewage Cyril Mathew ) ஓர் கிறிஸ்தவர்

 கிறிஸ்தவ ஜனாதிபதி ஜே.ஆர் அரசில் கைத்தொழில் அமைச்சராக இருந்தவர்.தமிழர்களின் பொருளாதாரத் தளத்தை இல்லாதொழித்தால், அவர்களைக் கொழும்பிலிருந்து அகற்றுவதற்காக பல இன படுகொலைகளை உருவாக்கியவர். இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண, இந்தியா அழுத்தம் கொடுத்த போதெல்லாம், என்னுடைய அமைச்சரவை இதற்கு ஒத்துக்கொள்ளாது என்று ஜே.ஆர் காரணம் சொல்வதற்குக் காரணமாக இருந்த முதன் முக்கிய அமைச்சரும் இந்தச் சிறில் மத்யூதான்.

இதே சிறில் மத்யூதான், சர்வகட்சி மாநாட்டில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக, ஜே.ஆர் முன்மொழிந்திருந்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறைக்கு, கடுமையாக எதிர்ப்பை வௌியிட்டிருந்தார். இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியொன்றுக்கு, சிறில் மத்யூ எதிர்ப்புத் தெரிவிக்கும் முதல்முறை இதுவல்ல. டட்லி-செல்வா ஒப்பந்தத்தையே கட்சிக்குள் எதிர்த்ததில், சிறில் மத்யூ குறிப்பிடத்தக்கவர்.

ஜே.ஆரின் அமைச்சரவை, குறித்த ஐந்தடுக்கு நிர்வாகப் பொறிமுறை தொடர்பான முன்மொழிவை, சர்வகட்சி மாநாட்டில் சமர்ப்பிக்க முடிவெடுத்திருந்தது.சிறில் மத்யூ தன்னுடைய எதிர்ப்பை, அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிப்படுத்தியது இங்கு தவறல்ல; ஆனால், அமைச்சரவைக்கு வௌியில், துண்டுப்பிரசுரம் மூலமாக, அவருடைய எதிர்ப்புக் குரல் வௌிவந்தது, அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கு முரணாக அமைகிறது.இதைக் காரணம் காட்டித்தான் 1984 டிசெம்பர் மாதத்தின் இறுதிப்பகுதியில், ஜே.ஆர் ஜெயவர்தன, அமைச்சர் பதிவியிலிருந்து சிறில் மத்யூவை நீக்கியதுடன், தொடர்ந்து கட்சியிலிருந்து விலக்கினார்.இந்த நடவடிக்கைக்கு, ஜே.ஆர் குறிப்பிட்ட காரணம், “சிறில் மத்யூ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்” என்பதாகும்..

No comments:

Post a Comment