இலங்கை தீவு முழுவதும் குறிப்பாக சகல அரச உயர் பதவிகளையும் வகித்தவர்கள் தமிழர்கள். அவர்களிடம் அந்த காலப்பகுதியில் தனித் தமிழ் தேசம் என்று எதாவது பேசினால் அவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை "FOOL MAN" ஏன்என்றால் அன்று அவர்கள் முழு இலங்கையையுமே தமது கல்வியால் ஆக்கிரமித்திருந்தார்கள் அத்துடன் தமிழர்கள் ஆண்ட சிவபூமி பிளக்கபட முடியாததொன்று என்ற ஆழ்ந்த சிவஞான சிந்தனையின் வெளிப்பாட்டின் அடிப்படையில்தான் தங்கள் கருத்துக்களை கூறியிருந்தாா்கள்..
இதை ஆழமாக பார்த்தோமானால் இப்படி கூறலாம். அதாவது சமஷ்டி அறிமுகப்படுத்தப்பட்டு வடக்குகிழக்கு தனிமாநிலமாக பிரிக்கப்பட்டிருந்தால் அன்று நாடுமுழுவதும் அதிகாரமையங்களில் உயர்பதவிகளை அனுபவித்து வந்த பல்லாயிரக்கணக்கானவர்கள் வடக்குகிழக்கு என்ற ஒரு குறுகிய பரப்பிற்குள் முடக்கப்பட்டிருப்பார்கள். பலருக்கு வேளை செய்யமுடியாத நிலமைகள்தோன்றியிருக்கும். இதைதவிர்த்துக் கொண்டு முழு இலங்கையிலும் தமது அறிவு புலத்தை பயன்படுத்தி ஆதிக்கம் செலுத்தலாம் என்ற நிலைப்பாட்டினாலேயே அப்போது சமஷ்டி வேண்டாம் என்று முழங்கினர்.
இதை ஆழமாக பார்த்தோமானால் முள்ளிவாய்கால் சிறு பகுதிக்குல் பல இலட்சம் தமிழர்கள் முடக்கப்பட்டிருந்தபடியினால் மூன்று இலட்சம் தமிழர்கள் குறுகிய நேரத்தில் கொல்லப்பட்டாா்கள் என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.
சிவவழிபாடுகள் ஓங்கிய காலங்கள் எல்லாம் தமிழர்கள் தரணி ஆண்டகாலங்கள் ஆகும் சிவம்பற்றி எழுந்த காலங்கள் தமிழர்களின் பொற்காலங்கள் வரலாற்று சாதனைகள் படைத்த காலங்ள் இதன் காரணமாகவே பல ஆயிரம் சிவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு தமிழர்களிடம் இருந்து சிவம் பிரிக்கப்பட்டதாகும் இதன் தொடர்ச்சியே கிறிஸ்தவர்களின் திருக்கேதீஸ்வர சிவாலயதாக்குதல்கள் ஆகும்.
அருளகம்.
No comments:
Post a Comment