Wednesday, 6 May 2020

சுமத்திரனின் தமிழ் இன அழிப்பின் படத்தொகுப்பு..

தமிழரசு கட்சியினதும் , தமிழ் தேசிய கூட்டமைப்பினதும் அரசியல் ஆலோசகர்களாகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டவரும் இலங்கையின் Bishop of Methodist Church இன் Deputy தலைவரும்Bishop ஏபிரகாம் சுமத்திரன் குழுவினரால் தமிழ் இண அழிப்பு செய்யப்பட்டு உள்ளது. 

 விவிலியத்தில் சொல்லியவாறு: உயிர்த்து எழுந்த பின் இயேசுபிரான் சொல்கிறார்: அனைத்து நாடுகளுக்கும் செல்க. சீடர்களை உருவாக்குக. ஞான நீராட்டுக. தந்தையின் பெயரால் மகனின் பேரால் தூய ஆவியின் பெயரால் கிறித்தவராக்குக. 

 கலிலேயா மலையில் இயேசுபிரான் சொன்ன கட்டளையை ஏற்று, 54 மத மதமாற்றிகளுக்குச் சம்பளமும் கொடுத்து மெதடிசுத்த திருச்சபை எண்ணிக்கை இலக்கும் கொடுத்திருக்கிறது. ஒவ்வொருவரும் ஓராண்டு காலத்தில் இத்தனை பேரை மதம் மாற்றிக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்கைக் கொடுத்திருக்கிறது இதன்படியே இவர்கள் வேலை செய்கின்றாா்கள்.

மன்னார் மாவட்டம் முருங்கனில் சீவோதயம் பண்ணை. இலங்கை மெதடிசுத்த Church  க்கு சொந்தமான பண்ணை இந்தப் பண்ணையில் இருக்கும் மெதடிசுத்த மத மாற்றிகள் சுற்றியுள்ள ஊர்களில் மதமாற்ற முயற்சிகளில் கடுமையாக ஈடுபடுகிறார்கள்.

சைவ ஊராக இருந்த முருங்கன்பிட்டி இன்று கிறித்தவ ஊர். இந்த ஊர் சார்ந்த முருங்கன் நிலதாரிப் பிரிவில் 310 சைவக் குடும்பங்கள் இருந்தன. இன்று 60 குடும்பங்களே சைவமாக எஞ்சியுள்ளன.

சீவோதயம் பண்ணை அமைந்திருக்கும் பரியாரிகண்டல் நிலதாரிப் பிரிவில் 300 சைவக் குடும்பங்கள். அங்கும் 60 குடும்பங்களே சைவக் குடும்பங்களாக இன்று உள்ளன.

செட்டியார் கட்டையடம்பன் நிலதாரிப் பிரிவில் 92 சைவ குடும்பங்கள். இன்று 42 குடும்பங்களே சைவக் குடும்பங்களாகத் தொடர்கின்றன.

மெதடிசுத்த Church இன் முழுநேர ஊழியர் 144. போதகர் 95, மத மாற்றிகள் 54, உதவியாளர் 20.மதம் மாற்றுவதற்காகச் சம்பளம் பெறும் ஊழியர் 54 பேர் வியப்பாக இருக்கிறதா? சைவ சமயம் சார்ந்த வழிபாட்டு முறைகளை, கிறித்தவ வழிபாட்டு முறைகளாக மாற்றி, கிறித்தவத்துக்கு மதம் மாற்றுகிறார்கள்.

தமிழர்களின் நிலமை தங்களின் தொண்மைவாய்ந்த வரலாற்று அடையாளங்களை தொலைத்து நின்று தலையில் குத்தி புலம்புகின்றாா்கள் அவர்களின் நிலமை கவலைக்கிடமே உங்களின் பதில் என்ன?

இறுதியில் பல படங்கள் இனைப்பில் உள்ளது
 

 https://jaffnaviews.blogspot.com/2020/05/n.html

மேலும் சுமத்திரனை பற்றி அறிந்து கொள்ள

https://jaffnaviews.blogspot.com/2020/04/blog-post_1.html









No comments:

Post a Comment