உலகம் என்ற உடலுக்குள் கடவுள் என்கிற ஆன்மா உறைந்திருக்கிறார். உலகம் இயங்குவதைப் பார்த்து, அதன் இயக்குநரை உணர்வோம். பாலில் நெய் பரவியிருப்பது போல் எங்கும் பரவி இருக்கும் சக்தியே இறைவன் சிவனாகும்.
ஒரு துளி பாலிலும் நெய்யின் அம்சம் இருக்கும். இடைவெளி எங்கெல்லாம் இருக்கிறதோ, அங்கேல்லாம் நிறைந்திருப்பவர் இறைவன். அவர், பிரபஞ்சம் முழுவதும் பரவியிருப்பார். இப்படியும் சொல்லலாம்... அவர்தான் பிரபஞ்ச வடிவில் தோற்றமளிக்கிறார். இந்த பிரபஞ்சத்தில், ஓர் ஊசி குத்தும் இடம்கூட அவர் இல்லாமல் இல்லை. கடவுளுக்குப் பணிவிடை செய்து மகிழ, நமது விருப்பத்தைப் பெற அவருக்கு உருவம் வேண்டும்.
அவர் விக்கிரகத்திலும் இருக்கிறார்; நம் மனத்திலும் இருக்கிறார். மனத்தில் இருப்பவரை விக்கிரகத்தில் இருத்துகிறோம். ஆண்டனை உணர்ந்தால், விக்கிரகத்தை மறந்துவிடலாம்.அவர் விக்கிரகத்திலும் இருக்கிறார்; நம் மனத்திலும் இருக்கிறார். மனத்தில் இருப்பவரை விக்கிரகத்தில் இருத்துகிறோம். ஆண்டனை உணர்ந்தால், விக்கிரகத்தை மறந்துவிடலாம்.ஒவ்வொரு நாளும், மனதில் இருக்கும் கடவுளை இறக்கி வைத்து அவரை வழிபட, ஓர் உருவம் வேண்டும். அதுதான் விக்கிரகம்.உருவம் இல்லாத நிலையில் பணிவிடைகள் செய்ய இயலாது.ஆகவே விக்கிரக வழிபாடு அவசியமானதே.
No comments:
Post a Comment