கவுதம புத்தர் கபிலவஸ்து அருகிலுள்ள லும்பினி என்ற ஊரில் கிமு 566 இல் சாக்கிய குலத்தில் பிறந்தார். கபிலவஸ்து நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ளது. புத்தர் பிறப்பிடம் அசோக மௌரியர் எழுப்பிய நினைவுத் தூண் சின்னத்தால் புகழ் பெற்று விளங்குகிறது.பெற்றோர் அவருக்கு சித்தார்த்தர் என்று பெயரிட்டு அழைத்தனர். அவருடைய தந்தை சுத்தோதனர், தாயார் மாயாதேவி. சாக்கிய குலத்தைச் சேர்ந்த சுத்தோதனர், கபிலவஸ்துவைத் தலைநகரமாகக் கொண்ட சாக்கிய நாட்டின் மன்னராவார்.
ஞானம் பெற்ற புத்தர், வாரனாசியின் அருகாமையிலுள்ள சாரநாத் "மான் பூங்கா" என்னுமிடத்தில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் அயோத்தி, பீகார், அதையடுத்த பகுதிகளின் மக்களுக்கும், மன்னருக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை நடத்தி வெற்றிகண்டார்.
கபிலவஸ்துவில் இராகுல், மகா பிரஜாபதி ஆகியோரைத் தன் சமயத்தில் சேர்த்துக் கொண்டார். மகத மன்னர்களான பிம்பிசாரர், அஜாதசத்துரு ஆகியோர்களை பவுத்த சமயத்தை தழுவும்படி செய்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பவுத்தத்தை தழுவிட வழிகோலினார்.
இந்த இடங்களிலெல்லாம் அவரது நான்கு உண்மைகளையும், "நான்கு அதிசய சத்தியங்களையும்", "எண் வகை வழிகளையும்" கூறினார். பிறகு தனது 80 ஆவது அகவையில், குசி நகரத்தில் கிமு 483 பரி நிருவாணம் அடைந்தார்.
இயக்கர்களை பயமுறுத்தி அகற்றியது போல் புத்தரால் நாகர்களை அகற்ற முடியவில்லை. நாக வழிபாடும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் பெயர்களும் இலங்கையின் வட புலம் நாகதீபம் என அழைக்கப்பட்டதும் தென்மேற்கு கல்யாணி என அழைக்கப்பட்டதும் இலங்கைத் தீவின் பழைய வரலாற்று உண்மைகளைப் பேரளவு மகாவம்சம் உறுதிசெய்கிறது.
(1) கல்லாடநாகன் (கிமு 50 - 44)
(2) சோரநாகன் (கிமு 3 - 9)
(3) இளநாகன் (கிபி 96 - 103)
(4) மாகலக்க நாகன் (கி.பி 196 - 203)
(5) குஜ்ஜநாகன் (கிபி 246 - 248)
(6) குட்டநாகன் (கிபி 248 - 249)
(7) ஸ்ரீநாகன் I (கிபி 249 - 269)
(8) அபயநாகன் (291 - 300)
(9) ஸ்ரீநாகன் II (கிபி 300 - 302)
(10) மகாநாகன் (கிபி 556 -568)
எனப் பல நாக அரசர்கள் இலங்கையை 6 ஆம் நூற்றாண்டு வரை அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே ஆகும். எடுத்துக் காட்டாக ஸ்ரீநாகன் II தந்தை பெயர் வீர தீசன்.
(The Early History of Ceylon by G.C.Mendis -pages 83-85)
துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் இருசாராருக்கும் இடையிலான போரல்ல. அது பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த சமயப் போர். இரண்டு அரசர்களது படைகளிலும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் கூறுகிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 -40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பதும் இலங்கை சிங்கள தேசம் என்பதும் திரிபுவாதமாகும்.
வங்கம், கலிங்கம் போன்ற நாடுகளில் இருந்து இலங்கையில் காலத்துக்குக் காலம் குடியேறிய வந்தேறுகுடிகள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், வேடர், பவுத்த தமிழர் ஆகியவர்களோடு கலந்து சிங்களவர் எனத் தோற்றம் பெற்றனர்.
மகாவம்சம் புனைந்துள்ள கதையில் சில உண்மைகள் மறைந்து காணப்படுகின்றன. மகாவம்சம் இலங்கையின் ஆதிக்குடிகள் என இயக்கர், நாகர், தரச்சர், லம்புக்காணர் (முயல் அல்லது ஆடு), பாலிபோஜகர் (காகம்), மோரியர் (மயில்), புலிங்தர் (வேடர்) இவர்களைக் குறிப்பிடுகிறது. இலங்கையை இயக்கர்குல மன்னனான இராவணன் ஆண்டான் என்ற இராமாயண இதிகாசக் கதை இயக்கர்கள் இலங்கையில் வாழ்ந்ததைக் காட்டுகிறது. மகாவம்ச ஆசிரியர் ஆதிக் குடிகளைக் குறிப்பிடும் போது தமிழர்களை வேண்டும் என்றே விட்டுவிட்டார்.
மகாவம்சத்தின் ஆறாவது அத்தியாயம் விஜயன் முடிசூட்டிக் கொண்டதைக் கூறுகிறது. ஏழாவது அத்தியாயம் விஜயன் புனிதனாக்கப்படுவது பற்றிக் கூறுகிறது. விஜயனின் வருகையோடுதான் இலங்கையின் வரலாறு தொடங்குவதாக மகாவம்ச மனோபாவம் படைத்தவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எடுகோள் தவறானது.
இலங்கையில் பண்டு தொட்டு தமிழர் எவரும் வாழவில்லை என்றும் சிங்கள அரசுகள் மீது படையெடுத்து வந்த சோழ, பாண்டியர் படைகளோடே தமிழ் மக்கள் ஈழத்தில் வந்து குடியேறினர் என சில சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் துட்ட கைமுனு காலத்தில் மாகா கங்கைக்கு அப்பால் தமிழர்கள் வாழ்ந்தார்கள் எனச் சொல்லப்பட்டுள்ளது.
இராமாயணத்தில் (கிமு 800) இலங்கைத் தீவு லங்கா என அழைக்கப்பட்டது. கிபி 4 – 5 ஆம் நூற்றண்டுகளில் சிங்களமொழி இல்லாததால் தீபவம்சம், மகாவம்சம் என்ற பவுத்த புராணங்களை பாளிமொழியில் எழுதினார்கள். இலங்கையைச் சுட்ட சிங்களத்தில் சொல் இல்லை. லங்கா என்பது சமற்கிருதச் சொல்லாகும்.
பவுத்தத்தின் வருகையோடு இணைந்து வந்த வட இந்திய பேச்சு மொழியாகிய பாளிப் பிராகிருதம் இலங்கையில் நாகர், இயக்கர், வேடர் போன்றோரால் பேசப்பட்ட எலு மொழியுடன் இணைந்து பவுத்த மதத்தினைப் பின்பற்றுவோருக்கு மொழி அடிப்படையில் ஒரு அடையாளத்தை வழங்க 8 ஆம் நூற்றாண்டில் சிங்கள மொழி ஒன்றைப் பவுத்த தேரர்கள் உருவாக்கினார்கள்.
தமிழில் உள்ள உறவுப் பெயர்கள் சிங்களத்தில் புகுந்துள்ளன. தாத்தா, தாத்தி, அப்பாச்சி - அப்பா, அம்மே (மலையாளத்திலும் அம்மேதான்!)) - அம்மா ஆச்சி - அம்மம்மா அல்லது அப்பம்மா, சீயா - அப்பப்பா அல்லது அம்மப்பா, அய்யா - அண்ணா, அக்கா - அக்கா, மல்லி - தம்பி, நங்கி - தங்கை, சகோதரயா - சகோதரன், புத்தா - மகன் துவ - மகள், பேனா - மருமகன், மல்லி கே புத்தா - தம்பியின் மகன், அக்கா கே துவ - அக்காவின் மகள், லொக்கு அம்மா - பெரியம்மா, லொக்கு தாத்தா - பெரியப்பா, மாமா - மாமா மசினா - மச்சான்,
பவுத்த மதத்தினைப் பின்பற்றுகின்ற மக்கள் அதனோடு இணைந்த மொழி வடிவத்தினைப் பின்பற்ற பவுத்த மதத்தினைச் சாராத ஏனையோர் திராவிட மொழி வடிவத்தினைப் பின்பற்றினர். அதனால் பவுத்த மதத்துடன் இணைந்து கொண்ட மொழி உருவாக்கமானது பவுத்தர் - பவுத்தர் அல்லாதோர் ஆகியோரை மொழி அடிப்படையிலும் வேறு படுத்தியது.
பல்லவர் காலத்தில் (கிபி 6 - 7 ஆம் நூற்றாண்டளவில்) தமிழ்நாட்டில் ஏற்பட்ட இந்து சமய எழுச்சியின் தாக்கம் காரணமாக அங்கு வாழ்ந்த தமிழ் பவுத்தர்கள் இலங்கைக்கு இடம் பெயர்ந்தார்கள். இதனால் இலங்கையில் பவுத்தர் - பவுத்தரல்லாதோர் ஆகியோருக்கிடையே இருந்து வந்த இடைவெளி மேலும் அதிகரித்தது.
இந்தப் புனைந்துரை பின்னர் எழுதப்பட்ட மதசார்பு சிங்கள வரலாற்று நூல்களிலும் இலக்கியங்களிலும் பவுத்த சடங்குகளிலும் (சூளவம்சம், புஜவாலியா, தூபவம்சா, இராஜவாலியா....) மீண்டும் மீண்டும் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்டு வருகின்றன. இதனால் அவை இன்றைய சிங்கள - பவுத்த மக்களது நம்பிக்கைகளில் ஒரு தெய்வீக இடத்தைப் பிடித்துள்ளன. சிங்கள அறிஞர்கள் இந்தக் கட்டுக்கதைகளையும் கற்பனைகளையும் இலங்கையின் தொன்மை வரலாறாகச் சித்திரிதுள்ளனர்.
மகாவம்சத்தின் முதலாவது அத்தியாயத்தை சற்று விரிவாக ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியவரும்.
முன்னர் குறிப்பிட்ட நாகர், இயக்கர், அரக்கர், புலிந்தர் (வேடர்) ஆகியோர் இனத்தால் திராவிடர்களே. சமயத்தால் சைவர்களே. இதேபோல் கலிங்கத்திலிருந்து இலங்கை வந்த விஜயனும் அவனோடு வந்தவர்களும் சமயத்தால் சிவவழிபாட்டினரே.
நாகர், இயக்கரை மனிதரல்லாதோர் அல்லது அரைமனிதர்களாக மகாவம்சம் சித்தரிப்பதன் நோக்கம் அன்றைய நாக, இயக்க பவுத்தர்களே இலங்கையின் ஆதிக்குடியென்ற மாயையைத் தோற்றுவிப்பதற்கேயாகும்.
விஜயன் இலங்கையில் தரையிறங்கியபோது இன்றுள்ள அய்ந்து ஈசுவரங்களான திருக்கேதீசுவரம், நகுலேசுவரம், திருக்கோணேசுவரம், இலங்கையின் தென்பகுதியில தொண்டீசுவரமும் இருந்தன என யாழ்ப்பாண வைபமாலை குறிப்பிடுகிறது. தொண்டீசுவரம் இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட போத்துக்கீசியரால் சிதைக்கப்பட்டது. சிதைக்கப்பட்ட கோயிலை அவ்விடத்தைச் (மாத்தறை) சேர்ந்த சிங்கள பவுத்த மக்கள் விஷ்ணு ஆலயமாக மாற்றி வழிபடுகின்றனர்.
திருக்கேதீசுவரமும் திருக்கோணேசுவரமும் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞனசம்பந்த நாயனார், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய இருவராலும் தேவாரப் பாடல்பெற்ற திருக்கோயில்களாகும்.
மேல்குறிப்பிட்ட அய்ந்து ஈசுவரங்களைவிட தென்னிலங்கையில் புகழ்பெற்ற கதிர்காமம், தேவேந்திரமுனையில் சந்திரமௌலீசுவரர் போன்ற சைவசமய கோயில்களும் நடுவில் சிவனொளிபாத மலையும் இருந்தன.
பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசன் தேவநம்பிய தீசனே. இவனுக்கு முன்னர் அனுராதபுரத்தை ஆண்ட அரசர்கள் வைதீக மதத்தவரே. தேவநம்பிய தீசனின் தந்தை பெயர் மூத்த சிவன் (கிமு 307 – 247) ஆவான். இவர்கள் நாக வம்சத்தைச் சேர்ந்தவர்கள். மகாநாகன் இவனது உடன்பிறப்பு ஆவான். இவன் துட்ட கைமுனுவின் பாட்டனுக்குப் பாட்டன் (ஒட்டன்) ஆவன்.
சிகல (பாளி மொழியில் சிங்கம்) என்ற சொல் முதன் முதலாக தீபவம்சம் என்ற நூலிலேயே (4–5 ஆம் நூற்றாண்டு) அதுவும் ஒரே ஒரு முறை குறிப்பிடப்படுகிறது. இலங்கைத் தீவைக் குறிக்கவே இந்த சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மகாவம்சத்தில் இந்தச் சொல் இரண்டு முறை குறிக்கப்படுகிறது.
மகாநாகனே தேவநம்பிய தீசனின் பின் ஆட்சிக் கட்டில் ஏறியிருக்க வேண்டும். ஆனால் அவன் தேவநம்பிய தீசனின் மகனைக் கொல்லச் சதிசெய்தான் என அய்யத்துக்கு உள்ளானதால் அவன் தனது மனைவி அனுலா தேவியோடு உருகுணவுக்குத் தப்பியோடி அங்கு ஒரு அரசை (மாகம) அமைத்துக் கொண்டான். அவனுக்குப் பின் அவனது மகன் யாதல தீசன் ஆட்சிக்கு வந்தான். யாதல தீசனை அடுத்து அவனது மகன் கோத்தபாயவும் அதன் பின்னர் அவனது மகன் காகவண்ண தீசன் (மகாவம்சம் இவனது பெயரை காவன் திச என மாற்றிவிட்டது) ஆட்சி பீடம் ஏறினான். இவன் களனியை ஆண்ட நாக அரசனின் மகளான விகாரமாதேவியை மணம் செய்து கொண்டான். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளே துட்ட கைமுனுவும் சாத்த தீசனும் ஆவர். தந்தை சொல் தட்டியதன் காரணமாகவே ‘துட்ட’ என்ற அடை மொழி கொடுக்கப்பட்டது.
எனவே மகாவம்சத்தின் கதைநாயகனான துட்ட கைமுனு தந்தை வழியிலும் தாய்வழியிலும் நாகர் இனத்தைச் சேர்ந்தவன் ஆவான். எனவே அவனும் எல்லாளனும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எல்லாளன் வைதீக சமயத்தவன், துட்ட கைமுனு பவுத்த சமயத்தவன்.
தமிழ்மன்னன் எல்லாளன் அனுராதபுரத்தில் நீதி தவறாத செங்கோலாட்சியை நடாத்தினாலும் அவன் "புன்னெறி" (false beliefs) கொண்டவன் என்ற காரணத்தாலேயே அவன் மீது துட்டகைமுனு படையெடுத்தான் என மகாவம்சம் தெரிவிக்கிறது. அதுமட்டுமல்லாது எல்லாளன் - கைமுனு யுத்தத்தத்தை தமிழர்களுக்கு எதிராக துட்ட கைமுனு நடாத்திய புனிதயுத்தம் எனக் காட்ட மகாவம்சம் முயன்றுள்ளது. ஆனால் எல்லாளன் - துட்டகைம்முனு யுத்தத்தின்போது எல்லாளன் தரப்பில் மட்டுமல்ல துட்டகைமுனுவின் படையிலும் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
கைமுனுவின் படைத்தளபதிகளில் ஒருவனானக நந்தமித்தன் இருந்திருக்கிறான். இவனது நெருங்கிய உறவினன் எல்லாளன் படையின் சேனாதிபதியாக இருந்திருக்கிறான். அது மட்டும் அல்லாது உருகுணையிலிருந்து அனுராதபுரத்துக்கு படையெடுத்து வந்த கைமுனு இடையில் சிற்றரசர்களாக இருந்த 32 தமிழரசர்களைப் போரில் வென்றான் என்று மகாவம்சம் குறிப்பிடுகிறது. இது கிமு இரண்டாம் நூற்றாண்டில் இலங்கையில் தமிழர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது.
மகாவம்ச ஆசிரியர் மகாநாம தேரோ எல்லாளன் - துட்ட கைமுனுக்கு இடையிலான போரைத் தமிழர் – தமிழர் அல்லாதா பவுத்தர் இடையிலான போராக சித்திரித்து இருக்கிறார். துட்ட கைமுனு பவுத்தனாக இருந்தும் அவன் முருக வழிபாடு செய்பவனாக இருந்தான். எல்லாளன் மீது படையெடுத்துப் புறப்படு முன்னர் கதிர்காமக் கடவுளின் அருள் வேண்டி அவரை வழிபட்டான் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. மேலும் மகியங்கனை தொடங்கி அனராதபுரம் வரை ஆண்ட 32 தமிழ்ச் சிற்றரசர்களைக் கைமுனு போரிட்டு வென்றான் என மகாவம்சம் கூறுகிறது.
இந்த வெற்றிகளுக்குப் பின்னர் கைமுனு 'இராச்சியங்களைப் பிடிக்க அல்ல நான் போர் தொடுத்தது. புத்தரின் தர்மத்தை நிலைநாட்டவே நான் போர் செய்தேன். இதுவே உண்மை என்பதை எண்பிக்க எனது படையினரின் மேனி தீயின் நிறத்தை எடுக்கட்டும்' என சூளுரைத்ததாக மகாவம்சம் தெரிவிக்கிறது. (மகாவம்சம் - அதிகாரம் 25)
துட்டகைமுனு சிங்கள அரசன்என்பது முற்றிலும் தவரான பார்வை.
மகாவம்சத்தில் அப்படியொரு குறிப்பு எதுவும் இல்லை. துட்ட கைமுனு தாய் வழியிலும் தந்தை வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். அவனது தாயார் விகாரமாதேவி கல்யாணி (களனி) இராச்சியத்தை ஆண்ட நாக மன்னன் மகளாவாள். துட்டகைம்முனுவின் தந்தை காக்கைவண்ணதீசன். அவனது தந்தை பெயர் கோத்தபாய. பாட்டன் பெயர் மகா நாகன். மகாநாகன் தேவநம்பிய தீசனின் சகோதரன் ஆவான். மகாநாகன் அநுராதபுரத்தை விட்டு மனைவியோடு ஓடி ரோகணாவுக்குச் (தென்னிலங்கையை) சென்று தனக்கென நாக மகா விகலம் என்ற நகரை உருவாக்கினான். மகாவம்சம் எந்த இடத்திலும் துட்டகைமுனுவை சிங்களவன் என்று சொல்லவில்லை. துட்ட கைமுனுவுக்குப் பின்னர் அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னர்கள் நாகவம்சத்தவரே.
கோரநாகன், மகாநாகன், குஜநாகன், சிறீநாகன், குஞ்சநாகன், இள நாகன் என எண்ணற்ற அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே. துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் அரசனுக்கு இடையிலான போரல்ல. பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த போர். இரண்டு அரசர்கள் பக்கம் இந்து தமிழர்கள் மற்றும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள்.
அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் சொல்கிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 -40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது திரிபுவாதமாகும். அவர்களது முன்னோர்களில் சிலர் வந்தேறுகுடிகள். அவர்கள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், பவுத்த தமிழர் இவர்களோடு கலந்து சிங்களவர்களாக தோற்றம் பெற்றனர்.
சிங்களவர் என்ற இனமோ, சிங்களம் என்ற மொழியோ 8 ஆம் நூற்றாண்டுவரை உருவாகவில்லை. தென்னிந்திய பவுத்த தேரர்களே, சிறப்பாக அமராவதியை ( இன்றைய ஆந்திரா) சேர்ந்த பவுத்த தேரர்களே இலங்கையின் பூர்வீக குடிமக்கள் பேசிய எலு மொழியோடு பாலி, தமிழ், சமற்கிருதத்தைக் கலந்து சிங்கள மொழியை உருவாக்கினார்கள். அவர்களே சிங்கள மொழியின் வரிவடிவம் வரைந்தவர்கள் ஆவர். அந்த எழுத்துக்கள் பெரிதும் தெலுங்கு மொழி எழுத்துக்களை ஒத்ததாக உள்ளன.
விஜயனுக்குப் பின்னர் ஈழத்தின் பூர்வீககுடிகளில் (இயக்கர், இராட்சதர், நாகர், தமிழர்) ஒன்றான நாக அரசர்கள் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளார்கள். மகாவம்சம் என்ற பாலி நூல் துட்ட கைமுனு - எல்லாளன் போரை சிங்களவர் - தமிழர் போராகச் சித்தரிக்கவில்லை. அப்படிச் சித்தரிப்பது தவறு. எல்லாளன் - துட்டகைமுனு யுத்தம் பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாளனுக்கும் இடையிலான யுத்தமாகும்.
துட்டகைமுனுவை சிங்களவன் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுவது தவறு. அவன் பவுத்த மதத்தைத் தழுவிய நாக இனத்தவன். தாய் வழியிலும் தந்தை வழியிலும் நாக வம்சத்தவன் ஆவான். அவனது தாயார் விகாரமாதேவி கல்யாணி (கலனி) இராச்சியத்தை ஆண்ட நாக மன்னன் மகளாவாள். துட்டகைம்முனுவின் தந்தை காக்கைவண்ணதீசன். அவனது தந்தை பெயர் கோத்தபாய. பாட்டன் பெயர் மகா நாகன். மகாநாகன் தேவநம்பிய தீசனின் சகோதரன் ஆவான். தேவநம்பிய தீசனே பவுத்த மதத்தைத் தழுவிய முதல் அரசனாவான். மகாநாகன் அநுராதபுரத்தை விட்டு மனைவியோடு ஓடி ரோகணாவுக்குச் (இன்றைய மாத்தறை, அம்பாந்தோட்டை, கதிர்காமம்) சென்று தனக்கென நாக மகா விகலம் என்ற நகரை உருவாக்கினான். மகாவம்சம் எந்த இடத்திலும் துட்டகைமுனுவை சிங்களவன் என்று சொல்லவில்லை. மகாவம்சத்தின் படி மகாவலி கங்கைக்கு வடக்கே தமிழர்கள் வாழ்ந்தார்கள். இந்துக்களான தமிழர்களுக்கும் பவுத்தர்களான நாகர்களுக்கும் சமய அடிப்படையில் பகை இருந்தது.
மகாவம்சம் சிங்கத்தைக் குறிக்கும் சிகல என்ற சொல்லை இருமுறைதான் பயன்படுத்தியுள்ளது. எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனு அநுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டான். அவனுக்குப் பின்னர் ஆட்சிசெய்த மன்னர்கள் எல்லோரும் நாகவம்சத்தவரே. கோரநாகன், மகாநாகன், குஜநாகன், சிறீநாகன், குஞ்சநாகன், இள நாகன் என எண்ணற்ற அரசர்கள் நாக பின் ஒட்டோடு இலங்கையை ஆண்டுள்ளார்கள். தீசன் என்ற சொல்லும் நாக வம்சத்தவருக்கு உரிய சொல்லே.
துட்ட கைமுனு - எல்லாளன் போர் சிங்கள - தமிழ் அரசனுக்கு இடையிலான போரல்ல. பவுத்த நாக அரசனுக்கும் இந்து எல்லாள மன்னனுக்கும் இடையில் நடந்த போர். இரண்டு அரசர்கள் பக்கம் இந்து தமிழர்கள் மற்றும் பவுத்த தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். அனுராதபுரத்தின் மீது படையெடுத்துச் சென்ற துட்ட கைமுனு இடையில் 32 தமிழ் சிற்றரசர்களை போரில் வென்றதாக மகாவம்சம் சொல்கிறது. இந்தக் கால கட்டத்தில் மகாவலி கங்கைக்கு வடக்கில் உள்ள பிரதேசத்தைத் தமிழ் அரசர்களே ஆண்டனர். விஜயன் வழிவந்த இளநாகனுக்குப் (கிபி 34 - 40) பின்னர் இலம்புக்கானர் என்ற இன்னொரு வம்சம் அடுத்த ஆயிரம் ஆண்டுகள் இலங்கையை ஆண்டனர். எனவே சிங்களவர்கள் தாங்கள்தான் இலங்கையின் பூர்வீக குடிகள் என்பது திரிபுவாதமாகும். அவர்களது முன்னோர்களில் சிலர் வந்தேறுகுடிகள். அவர்கள் பூர்வகுடிகளான நாகர், இயக்கர், இராட்சதர், புலிந்தர், பவுத்த தமிழர் இவர்களோடு கலந்து சிங்களவர்களாகத் தோற்றம் பெற்றனர்.
No comments:
Post a Comment