Tuesday, 12 May 2020

புலிகளையும் இந்தியாவையும் கையாள்வதில் வெற்றிகண்டவர் ஜெயவர்த்தனா.

கிறிஸ்தவ ஜூனியஸ் ரிச்சட்  ஜெயவர்த்தனவின் (ஜயவர்தனாவின்) அரசியல் ஏட்டில் இந்தியாவும், ஈழத் தமிழரும் அவரது பாரம்பரிய எதிரிகள் அதேபோன்று இந்து பெளத்த சிங்கள அரசியல் தலைவர்களும்  அவரது பாரம்பரிய எதிரிகளே ஏதிரியை பழிவாங்குவதிலும், அவர்களைத் தலையெடுக்க முடியாதவாறு வீழ்த்துவதிலும் ஜெயவர்த்தன தனிச்சிறப்பு வாய்ந்த திறமையுள்ளவர்
.
இந்தியாவால் புலிகளைக் கையாள்வது , புலிகளால் இந்தியாவைக் கையாள்வது என்ற அடிப்படையில் தனது இரண்டு பாரம்பரிய எதிரிகளையும் மோதவிட்டு இறுதியில் இருதரப்பையும் வீழ்த்துவதில் ஜெயவர்த்தன வெற்றிகண்டவர் .இந்தியாவையும் – புலிகளையும் மோதவிட்டு மலை உச்சியில் அமர்ந்திருந்து ரசித்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா என்ற கிறிஸ்தவர்.

சிறிபெரும்பூத்தூரிலும், முள்ளிவாய்க்காலிலும் ஜே.ஆரின் இலக்குகள் வெற்றி பெற்றன. ஜெவர்த்தன நகர்த்திய அரசியல் வியூகங்களின் இறுதி விளைவாக இந்தியாவும், ஈழத்தமிழரும் மேற்படி இருபுள்ளிகளின் சுழற்சியில் அதல பாதாளமான தோல்விகளைச் சந்தித்தனர்.

அருளகம்






No comments:

Post a Comment