Tuesday, 12 May 2020

சிவாஜிலிங்கம் (Mahalingam Kanagalingam Shivajilingam)

2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார். 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சிவாஜிலிங்கம் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு 9,662 வாக்குகளைப் பெற்று (0.09%) ஒன்பதாவதாக வந்து தோல்வியடைந்தார்.

2010 தேர்தலில் இவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வேட்பாளர் பட்டியலில் இணைக்கவில்லை. இதனை அடுத்து இவர் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இலிருந்தும் விலகி, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தார்.

இக்கூட்டமைப்பின் சார்பில் இவர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 2011 சூன் மாதத்தில் தனது கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் டெலோ, மற்றும் ததேகூ இல் இணைந்தார்.

சிவாஜிலிங்கம் 2011 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக வல்வெட்டித்துறை நகரசபைக்குப் போட்டியிட்டு நகரசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2013 மாகாணசபைத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வட மாகாண சபை உறுப்பினரானார்.

மாகாண சபை உறுப்பினருக்கான பதவிப் பிரமானத்தை முள்ளிவாய்க்கால் கிராமத்தில் சமாதான நீதவான் ஒருவரின் முன்னிலையில் எடுத்துக் கொண்டார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிலிங்கம் சுயேட்சைக் குழு ஒன்றில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டார். இவரது குழு எந்த நாடாளுமன்ற இடங்களையும் பெறவில்லை.

சிவாஜிலிங்கம் 2019 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு யாழ் மாவட்டத்தில் 100 வாக்குகளை பெற்று மண்கவ்வியவர்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அமைப்பில் இருந்து பல முறை வெளியேறி பல கட்சிகளை அமைத்தவர் தன் சுக போக வாழ்வுக்காக பாராளமன்றம் செல்வதற்காக மீண்டும் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அமைப்பில் இணைந்து கொண்டவர் இல் மீண்டும் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்து உள்ளாா்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை உருவாக்கியவர் பின்பு அதை கலைத்து  மீண்டு்ம் 2019 தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) இலிருந்தும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) இலிருந்தும் விலகி புதிய கட்சியை ஏனைய தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ)  உறுப்பினர்களுடன் சேர்ந்து ஆரம்பித்துள்ளாா்.

முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தில் பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர் , திருகோணமலை கண்ணியா  வெந்நீரூற்றில் வளாகத்தில் பெளத்த மதத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்தவர் மன்னாரில் கத்தோலிக்கம் மேற்கொண்ட சைவ ஆலயங்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து கத்தோலிக்கத்திற்கு எதிராக சைவ மீட்பு போர் செய்ய மறுத்தது ஏன்.?


No comments:

Post a Comment