Monday, 11 May 2020

"சிவம் "

பல ஆயிரம் நாமங்களும் ஆயிரம் வடிவங்கள் கொண்டதும் உருவமற்ற, ஆதி அந்தமற்று, எங்கும் பரந்து, நீக்கமற நிறைந்தது "சிவம்"  சைவ சித்தாந்தம் போற்றியதும் , சங்ககாலம் கலந்த இலக்கியங்கள் போற்றியதும், தமிழ் முழுமுதலாகக் கொண்டதும் , தமிழர்கள் முழுமுதலாகக் கொண்டதும் , தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் , தமிழர்களின் வாழ்வியல்களுடன் இரண்டற கலந்து நிற்பது "சிவம் " ஆகவே தமிழர்களே சிவ வழிபாடுகள் ஓங்கிய காலமெல்லாம் தமிழர்களின் பொற்காலங்களே சிவ வழிபாடுகள் அற்ற காலங்கள் தமிழர்களின் அழிந்த இருண்ட காலங்களே ஆகும்.

"உமையும் உமையொரு பாகனும் ஏக உருவில் வந்து இங்கு எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் " என்று சிவனையும் அம்பாளையும் சேர்த்துபாடித்தான் அபிராமிபட்டர் தன் மரணத்தை வென்றாா் .

ஆகவே தமிழர்களே சிவனையும் அம்மனையும் அதாவது சிவனையும் அவரின் சத்தியையும் சேர்த்து வணங்குங்கள் உங்கள் வாழ்வு என்றும் அழியா வண்ணம் சிவத்துடன் இரண்டறகலந்து நிற்கும். 

சிவனை பரிவார மூா்த்தியாகவும் தெய்வங்களை மூல மூா்த்தியாகவும் வைத்து வழிபட்டால் தெய்வ குற்றங்களுக்கு ஆளாக வேண்டிவரும் தங்களின் கருத்துக்களை எதிா்பாா்க்கின்றேன்.
அன்பேசிவம்
அருளகம்.

No comments:

Post a Comment