“ஈழத்து முஜிபுர் ரஹ்மான்” உருவான வரலாறு
1971இல் இந்திய உதவியுடன் கிழக்கு பாகிஸ்தான் ‘பங்களாதேஸ்’ என்ற புதிய நாடாக உருவாகியிருந்தது. இதை உதாரணம் காட்டிய தமிழரசுக் கட்சியினர் இலங்கையிலும் தமிழர்களுக்கென்று ஒரு தனிநாடு உருவாக இந்தியா உதவ வேண்டும், உதவும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் ஊட்டத் தொடங்கினர். இதற்காக யாழ்.முற்றவெளியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்தி பங்களாதேசின் வெற்றியைக் கொண்டாடியதுடன், அதுவரை காலமும் “ஈழத்துக் காந்தி” என அழைத்து வந்த உங்களின் தேசபிதா செல்வநாயகத்துக்கு “ஈழத்து முஜிபுர் ரஹ்மான்” (பங்களதேசின் தேசபிதா) என புதிய நாமம் சூட்டினர்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/03.html
No comments:
Post a Comment