Tuesday 23 June 2020

தரப்படுத்தலின் ஊடாக தமிழர்களின் கல்வி வளத்தை அழித்த டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத்

1970 ஆம் நடைப்பெற்ற பொது தேர்தலில் திருமதி பண்டாரநாயக்க அவர்கள் தலைமை தாங்கிய ஐக்கிய முண்ணனி அமோக வெற்றி பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை   கம்யூனீட் கட்சி ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டனி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி 91 ஆசனங்களையும் லங்கா சமசமாஜ கட்சி 19 ஆசனங்களையும் இலங்கை கொமினியுஸ்ட் கட்சி 06 ஆசனங்களையும் பெற்றது. இதன் மூலம் திருமதி பண்டாரநாயக்க அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சி செய்ய வழி பிறந்தது.

இந்த கூட்டனி அரசில் தமிழர்களின் கல்வி அறிவை அழிப்பதற்காக 1971 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசில் கல்வி அமைச்சர்  டாக்டர் அல்ஹாஜ் பதியுதீன் மஹ்மூத் தமிழர்களின் கல்வி வளத்தை சிதைத்து அழித்து தமிழர்களை அழிக்கும் நோக்குடன்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, லங்கா சமசமாஜ கட்சி மற்றும் இலங்கை   கம்யூனீட் கட்சி ஆகிய கட்சிகளின் மிகப்பலம்  பொருந்திய ஆதரவுடன் கொண்டுவரப்பட்டதே  ''தரப்படுத்தல்' ஆகும்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_80.html

அருளகம்


No comments:

Post a Comment