மார்கழி பீடை மாதமல்ல பீடு அதாவது பெருமை சேர்க்கும் மாதமே மார்கழி இதன் காரணாகவே நான் மார்கழி என்றார் கீதையில் கிருஷ்ணர் மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார் மகாபாரத யுத்தம் நடந்ததும் கீதை பிறந்ததும் இம்மாதத்தில்தான் ஆகவே மார்கழி பீடை மாதமல்ல பீடு அதாவது பெருமை சேர்க்கும் மாதமே.
சிவனுக்கு உகந்த திருவாதிரை விரதமும் சிவபெருமானின் ஆருத்ரா தரிசனமும் மார்கழி சிறப்பை காண்பிக்கின்ற திருநாளும் மார்கழியே மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், "போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்' - என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி - ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானை நினைத்து நோன்பிருந்து, பாமாலைகளால் - திருப்பாவை சூடியது மார்கழி மாதத்தில், மார்கழியின் பெருமையை "மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்ற பாடலில் விளக்குகிறார்.
63 நாயன்மார்களில் ஒருவரான வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் இவர்களுடைய குருபூஜையும் மார்கழி மாதத்திலே தான். 12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுவது மார்கழி மாதம்.
அருளகம்
No comments:
Post a Comment