பிரிட்டனில் அதுவும் லண்டன் மற்றும் பிரிஸ்டல் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களில் உள்ள பல சிலைகளை அகற்ற மாநகர கவுன்சில்கள் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. இவை அனைத்துக்கும் காரணம் அமெரிக்காவில் கொல்லப்பட்ட ஜோர்ஜ் என்ற கறுப்பின நபரும். அதனை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களும் தான்.
பிரித்தானியாவின் தெருக்களில் பல நூறு சிலைகள் உள்ளது. அதில் பெரும்பான்மையானவை பிரபுக்களின் சிலைகளே. இவர்கள் தான் பிரித்தானிய பேரசின் தூண்களாக அந்த காலத்தில் செயல்பட்டவர்கள். சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் இருந்தே இவர்கள் தான், கொத்தடிமைகளை வைத்திருந்தார்கள். மேலும் ஏஜன்சி போல செயல்பட்டு, கொத்தடிமைகளை பிரிட்டன் கொண்டு வருவது. அவர்களை தேடிப் பிடிப்பது என்பது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள்.
இவர்களில்… சர் தொமஸ், றொபேட் விஸ்கவுண்ட், எட்வாட், பிரான்சிஸ் ட்ரேக், டியூக் ஆப் வெலிங்டன், என்று பல பிரபுக்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆங்காங்கே சிலைகளும் உள்ளது. தற்போது இந்த சிலைகள் அகற்றப்பட்டுக் கொண்டு வருகிறது. மேலும் 2ம் உலகப் போர் காலத்தில் திறமை மிக்க பிரதமராக விளங்கிய வின்சன் சர்சிலும் ஒரு இனவாதியே.

அதிர்வுக்காக கண்ணன்

No comments:
Post a Comment