Friday, 19 June 2020

உங்களின் மரணவாசல் எதுவென்று அறிந்து கொள்ளுங்கள்

சைவசமய நெறியில் கர்மம் அல்லது வினைப்பயன் என்பது  ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அவரவர் நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீய செயல்களை செய்தால்  தீவினையாக நின்று துன்பம் தருகின்ற பலன்களை கொடுக்கும். இதனையே ஊழ் அல்லது ஊழ்வினை என்று தமிழ் இலக்கியம்,  திருக்குறள் பல இடங்களில் குறிப்பிடப்படுகின்றது. நீங்கள் விதைத்த வினை வழியில் உங்களின் மரணம் நடக்கும் விதி வகுத்த வழியில் உங்களின் ஆண்மா பலனை பெற்றுக் கொள்ளுகின்றது.

தர்ம நெறியை கடைபிடித்து வாழ்ந்தால் உங்களின் ஆண்மா  உத்தராயண காலத்தில் பெற்றுக் கொள்வது என்ன? 

`உத்தராயணம்' என்பது சூரியன் வடக்கு நோக்கி நகரும் தை மாதம் முதல் ஆனி வரை இருக்கும் ஆறு மாத  காலங்கள் மங்கள கரமான காரியங்களைச் செய்யவதற்கு சிறந்த காலம்.

உத்தராயணப் புண்ணிய காலத்தில் இறந்து போவர்களின் ஆண்மா  மோட்சத்தை பெற இயலும்.தவநெறியுடன் கூடிய பற்றற்ற வாழ்வை யார் வாழ்கிறார்களோ அவர்களின் ஆண்மா மோட்சத்தை பெற இயலும்.
சாதாரண மனிதர்கள் அக்காலத்தில் இறந்து போனால் அடுத்த பிறவியில் நல்ல பிறப்பு வாய்க்கும் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.  அது அவர்களின் கர்மவினை பயனாக அமைந்து கொள்வதாக அமையும். 

தர்மத்தை மீறி செய்யும் அனைத்து பாவங்களையும்  உங்களின் ஆண்மாபற்றிக் கொண்டதன் பயனாக  தட்சாயண காலத்தில்   மரணம் நிகழுமானால்  பெற்றுக் கொள்வது என்ன?


`தட்சாயணம்' என்பது  ஆடி முதல் மார்கழி வரை  சூரியன் தெற்கு நோக்கி நகரும் மாதங்கள் தட்சிணாயனம் என அழைக்கப்படுகின்றது.
இந்த காலங்களில் இறப்பவர்களின் ஆண்மா அவர்களின் கர்மவினை பயனாக நரகத்தை அடைவாா்கள் அதாவது மீண்டும் பிறவி எடுப்பதற்காக செல்வார்கள். 

தட்சாயண காலத்தில் ஏகாதசி தியன்று உயிர் துறப்பவர்களின்  வருகைக்காக பாற்கடலில் பெருமாள் வீற்றிருக்கும் வைகுண்ட வாசல்
திறந்து கொள்ளும் அது அவரவர்  புண்ணிய பலன்களை பொறுத்தே அமைந்து கொள்ளும்.12 ஆழ்வார்களில் ஒருவரான தொண்டரடிப் பொடியாழ்வார் ஜெயந்தி கொண்டாடப்படுவது மார்கழி மாதம்.

வாயில நாயனார், சடைய நாயனார், இயற்பகை நாயனார், மானக்கஞ்சாற நாயனார், சாக்கிய நாயனார் இவர்களுடைய குருபூஜையும் மார்கழி மாதத்திலே தான். 

மார்க்கண்டேய புராணம், தட்சாயண காலமான மார்கழியை 'மரணத்தை வெல்லும் மார்கழி' என்று போற்றுகின்றது.தட்சாயண காலத்திலும் விசேடமான காலம் மார்கழி.

ஆகவே நீங்கள் அறநெறியை மீறி செய்த பாவசெயல்களை ஒரு தடவை மீளாய்வு செய்து தர்மத்தால் அந்த பாவ செயல்களுக்கு புணணியத்தை தேடிகொள்ளுங்கள்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_95.html

அருளகம்.

No comments:

Post a Comment