Sunday 14 June 2020

சிவபூமி-.

ஈழநாடு தமிழர்களின் பூர்வீக பூமி என்பதனை நீருபிக்க பல இலக்கியங்களே ஆதாரங்களாக உண்டு அதே போன்று " தென்னாடு" என்பது ஈழநாட்டையே குறிப்பிடுகின்றது என்பதனை "சிவயோக சித்தாந்தம் " மூலமாகவும், புவியல் திசைகளின் ஊடாகவும், சங்க இலக்கியங்கள் ஊடாகவும் அறிந்து கொள்ள முடியும்.

இலங்கையில்  நகுலேஸ்வரம் வடக்கு யாழ்ப்பாணம், திருக்கேதீச்சரம் வடமேற்கு,மன்னார், திருக்கோணேச்சரம் கிழக்கு திருக்கோணமலை, முன்னேசுவரம் மேற்கு புத்தளம்,  தொண்டீசுவரம் தெற்கு மாத்தறை  இந்த பஞ்ச ஈஸ்வரங்கள் என்பன சிவபெருமானுக்காக இலங்கையில் கட்டப்பட்டுள்ள கோவில்களாகும். இவ்வீஸ்வரங்கள் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஒவ்வொரு திசையிலும் அமைந்திருக்கின்றன.இலங்கையில் பஞ்ச ஈச்சரங்களை கொண்டதும் சைவமே இலங்கையின் சிவபூமிக்குரிய தமிழ் தேசிய அடையாளங்கள் ஆகும்.இலங்கை சிவபூமி என அழைக்கப்படும் சிறப்புடையது.

சூரபதுமனின் மனையாளின் பேரனார் துவட்டா துவட்டா பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டதாக வரலாறுகள் உண்டு.

சேர,சோழ, பாண்டிய மன்னர்கள் பல திருப்பணிகளை செய்த சிவாலயங்கள் இதுவாகும்.கிபி ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயானாராலும், சுந்தர மூர்த்தி நாயனாராலும் போற்றிப் புகழ்ந்து திருப்பதிகம் பாடப் பெற்ற சிறப்புடைய தலமிதுவாகும்.

"மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை
கூடுமிவ் வானின் இலங்கைக் குறியுறுஞ்
சாருந் திலைவனத் தண்மா மலயத்தூ
டேறுஞ் சுழுனை இவைசிவ பூமியே."

இங்கு வான் வெளியில் நடுக்கோட்டின்நிலையினை இலங்கை என்கின்றார். இவ் இலங்கைக் கோட்டுடன் தில்லைசிற்றம்பலக்கோடு பொருந்திநிற்கின்றது. இதனால் தில்லைக்கும் பொதிகை மலைக்கும் ஊடாகச்செல்லும் கோடு நடுநாடியாகும். இதனையே தென்நாடு சிவபூமி என அழைக்க காரணமானது. இதனை சிறப்பு முறை என்பர். பொது முறையாக நோக்கும் போது இலங்கைக்கும் பொன்மலைக்கும் நடுவில் உள்ளது தில்லையம்பம். இவை இரண்டுக்கும் இடைப்பட்டது சிவபூமி.

மேரு நடுநாடி அண்டத்தில் அது நடுரேகை பிண்டத்தில் அது சுழுமுனை. அண்டத்தினுள் இதன் வட அயன் வரைகளும் பிண்டத்தினுள் இடகலை பின்கலை நாடியாகும். இலங்கைக் குறியும் என்னும் போது இலங்யையில் மேருவின் குறியைப்பார்க்கலாம். எனவே திருமூலர் காலத்தில் மேருமலை அழிவெய்தி விட்டது என்பதே பொருள். மேரு என்பது மேரு சுரமேரு குமேரு என மூன்றாகும். மேரு பூமத்திய ரேகையும் பூமியின் ஆச்சு ரேகையும் கூடுமிடமாகும். அதுதான் இலங்கை.

எனைய மேருக்கள் துருவங்கள் அவை சுரமேரு வடதுருவம் என்றும் குமேரு தென்துருவம் எனவும் கூறப்படுகின்றது. தில்லை வனம் நடுநாடியில் இருக்கின்றுது.அகத்துவத்தில் இடகலை பிங்களை உள்ளது. அதாவது எமது முள்ளந்தண்டின் வலப்புறமும் இடப்புறமும் நாடிகள் செல்லுகின்றது அவை சூரியநாடி சந்திர நாடிகளாகும். இவையே இடகலை பிங்கலை ஆகும். அவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லுகின்றது. இது எமது அல்பா கதிரின் அதிகரிப்பால் உருவாகுவது. இவை அனைத்தும் எமது உடல் உள் இருப்பவை அதாவது பிண்டத்தில் அதுபோன்று அண்டத்தில் உள்ளவை தொடர்பாக திருமந்திரத்தில் திருமூலர் குறிப்பிடுகையில்

'இடபிங் கலையிம வானோ டிலங்கை
நடுநின்ற மேரு நடுவாஞ் சுழுனை
கடவுந் திலைவனங் கைகண்ட மூலம்
படர்வொன்றி யென்னும் பரமாம் பரமாம் பரம்றே'

இங்கு இடபிங்கலையாக பொன்மலையம் இலங்கையும் கொள்ளப்படுகின்றது. நடுநாடியான சுழுனை தில்லைவனம். தில்லைவனம் எல்லாவற்றையும் இயக்குகின்றது. இதனாலேயே 'கடவும் தில்லைவனங் கைகண்ட மூலம்' என்று குறிப்பிடுகின்றார். எனவே வடக்கு எல்லை பொன்மலை தெற்கு எல்லை இலங்கை  எனவே தென்நாடும் இலங்கையே இதனாலேயே 'தென்நாடுடைய சிவனே போற்றி' என்றாகிவிட்டது.

 ஆகவே " தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. " என்பதானது " தென்னாடு" என்ற பொருள் சிவபூமியான ஈழவளநாடு ஆகும்.  இந்தியாவில் இருந்து நோக்குகின்ற பொழுது  ஈழவளநாடு " தென்னாடு" என்று  அறிந்து கொள்ள முடியும்.

விசயனின் வருகைக்கு முன்பே  சிவ வழிபாடுகள் கொண்டுள்ள பஞ்ச ஈஸ்வரங்கள் காணப்பட்டன" தென்நாடு என்று அழைக்கப்பட்டது இலங்கையே இதனாலேயே 'தென்நாடுடைய சிவனே போற்றி' என்றாகிவிட்டது ஆகவே இலங்கை சிவபூமியே ஆகும்.

"குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம் நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடலெனக் குருகு மாலோ என் செய்கேன் உலகத்தீரே."

பொருள்:
கடல் போல கரிய நிறம் கொண்ட ரங்கநாதனின் அழகை எப்படி சொல்லுவேன்? மேற்கில் தலையும், கிழக்கில் திருவடியும் நீட்டியபடி, வடக்கில் முதுகை காட்டி துயில்கிறான். தெற்கிலுள்ள இலங்கையைப் பார்த்தபடி இருக்கும் அவனது அழகு உருவம் கண்டு உள்ளமும், உடலும் உருகி விட்டது. செய்வதறியாமல் திகைத்து நிற்கிறேன்.



"தென்நாடுடைய சிவனே போற்றி "என்று அழைக்கப்பட்ட காரணத்தால்  இலங்கை சிவபூமி  இலங்கை என்கிற தமிழ்ப் பெயரின் சமஸ்கிருத மொழி வடிவமே ஶ்ரீலங்கா ஆகும். சிங்கள சொல் அல்ல.சிவயோக சித்தாந்தம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இப்பதிவு விளக்கத்தை கொடுக்கும்.

https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_14.html

அருளகம்







No comments:

Post a Comment