Saturday, 13 June 2020

கத்தோலிக்க பாவமண்ணிப்பு என்பது ஒரு மோசடி வியாபாரம்.

பைபிளை இலத்தீன் மொழியில் தான் படிக்க வேண்டும் , பைபிளானது தேவாலயத்தில் மாத்திரம் இருக்க வேண்டும், அதனை பாதிரியார்கள் மாத்திரமே வாசிக்கலாம், மக்களின் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யக்கூடாது , மன்னர்களின் அதிகாரத்தை விடவும் போப் பாண்டவர்கள் அதிகாரம் படைத்தவர்கள் என்ற தத்துவங்கங்களே கத்தோலிக்க தலைமை அரசான வற்றிக்கானின் உத்தரவு ஆகும்.இந்த உத்தரவுக்கு எதிராக எழுந்தவர்களும் அவர்களது குடும்பங்களும்  எரித்துக் கொள்ளப்பட்டார்கள்

  ரோமன் கத்தோலிக்கத் தலைமையகமான வத்திகானை பளிங்கு கற்களை கொண்டு கட்டியெழுப்புவதற்காக. அதற்காக நிதி திரட்ட  வழிமுறை யொன்றை தெரிவு செய்தார்கள் கத்தோலிக்கர்கள் ஆம் கத்தோலிக்க  வரலாற்றில் படிச்சீட்டாக படிந்துள்ள பாவமன்னிப்பு தான் அது.

நீங்கள் செய்த பாவங்கள் , செய்துக் கொண்டிருக்கும் பாவங்கள் , மேலும் உங்களது முன்னோர் செய்த பாவங்கள் யாவற்றையும் மன்னித்து , சொர்க்கத்துக்கு செல்வதற்கான அறிவிப்பை நாங்கள் தருகின்றோம் என்ற ஒரு அறிவிப்பை போப் லியோ விடுத்தார். ஒரு சில நிமிடங்களில் ஐரோப்பாவில் இந்த அறிவிப்பு சகல Church களிலும் காட்டுத்தீ போல பரவியது.

பாவிகளே உங்களது பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமா ? இதோ இந்த சீட்டை வாங்கிச் செல்லுங்கள் என்று முழக்கமிட்டு சீட்டுக்களை லியோ விற்றார். இந்த விற்பனை மிக விரைவாக Church களில் பரவ ஆரம்பித்தது.

போப் லியோவின் வாக்கே , தேவ வாக்கு என்று பிழைக்க தெரிந்த பாதிரியார்களும் இந்த திட்டத்துக்காக முன்னின்று ஆதரவு கொடுத்து செயற்பட்டார்கள். கத்தோலிக்க பாதிரியார் போப்பின் அறிவிப்பால் மிகப்பெரிய மகிழ்ச்ச அடைந்தாா்கள் இவர்களில் பலர் கோடீஸ்வராகவும் எழுந்தாா்கள்.ஆகவே கத்தோலிக்க பாவமண்ணிப்பு என்பது ஒரு மோசடி வியாபாரம்.ஆகும்.
https://jaffnaviews.blogspot.com/2020/06/blog-post_94.html
அருளகம்

No comments:

Post a Comment