ஆதியாகமம் 19 தந்தையும் குமாரத்திகளும் ?
பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து சோவாரை விட்டுப் போய் அவனும் அவனோடு கூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம் பண்ணினார்கள். அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே இருந்தார்கள். அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்ந்த பவயதானால் பூமியெங்கும் ஒரு புருஷனுமில்லை. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாக்கும் படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து அவரோடு சயனிப்போம் வா என்றாள். அப்படியே அன்று இரவிலே தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். மறு நாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம். நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள். அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்து அவனோடே சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான் இவ்விதாமய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலேயே கர்ப்பவதியானார்கள்.
மூத்தவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவள் அவனுக்கு மோவாப் என்று பெயர் வைத்தாள். அவன் மோவாபியருக்கெல்லாம் தந்தையானான். இளையவளும் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு அவள் பென்னம்மி என்று பெயரிட்டாள். அவன் அம்மோன் ஜனங்களுக்குத் தந்தை ஆனான்.மூத்தவளின் பிள்ளைக்கும், இளையவளின் பிள்ளைக்கும் அவர்களின் தந்தையே அவர்களது பிள்ளைகளுக்கும் தந்தை.
(ஆதியாகமம் 19:31-37)
அண்ணனும் தங்கையும்….?
தாவீதின் குமாரன் அப்சலோமுக்கு அழகுள்ள ஒரு சகோதரி இருந்தாள். அவள் பெயர்தாமார். தாவீதின் குமாரன் அம்னோன் அவள் மேல் மோகங்கொண்டான். தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங் கொண்டு வியாதிப்பட்டான். அவள் கன்னிகையாயிருந்தாள். அவளுக்கு ஏதேனும் செய்வது அம்னோனுக்கு அசாத்தியமாய்த் தோன்றிற்று. அம்னோனுக்கு யோனதாப் என்னும் ஒரு சிநேகிதன் இருந்தான்; இவன் தாவீதினுடைய சிமியாவின் குமாரன்; அந்த யோனதாப் மகா புத்திசாலி. இவன் அம்னோனைப் பார்த்து ராஜ குமாரனாகிய நீ காலைதோறும் இப்படி நோய் கொண்டவன் போல் காணப்படுகின்றாயே, காரணமென்ன? எனக்குச் சொல்ல மாட்டாயா? என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின் மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன் என்றான். அப்பொழுது யோனதாப் அவனைப் பார்த்து: நீ வியாதிக்காரனைப் போல் உன் படுக்கையின் மேல் படுத்துக் கொள்; உன்னைப் பார்க்க உன் தகப்பனார்வரும் போது,நீ, என் சகோதரியாகிய தாமார்வந்து, நான் பார்க்க என் கண்களுக்கு முன்பாகச் சமைத்து தன் கையினாலேயே எனக்குப் போஜனம் தரும்படி, நீர்அவளைத் தயவு செய்து அனுப்ப வேண்டும் என்று சொல் என்றான். அப்படியே அம்னோன் வியாதிக்காரனைப் போல் படுத்துக் கொண்டான்; ராஜா அவனைப் பார்க்க வந்த போது அவன் ராஜாவினிடம், என் சகோதரியாகிய தாமார்வந்து என் கண்களுக்கு முன்பாகவே இரண்டு மூன்று பணியாரங்களைச் செய்து, தன் கையினாலேயே எனக்குச் சாப்பிடக் கொடுப்பதற்கு நீர்சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அப்பொழுது தாவீது வீட்டுக்குள் தாமாரிடம் ஆளனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய் அவனுக்குச் சமையல் செய்து கொடு என்று சொல்லச் சொன்னான். அப்படியே தாமார்தன் சகோதரனாகிய அம்னோன் படுத்திருந்த வீட்டுக்குப் போய், மாவெடுத்து, அவன் கண்களுக்கு முன்பாகப் பிசைந்து பணியாரங்களைச் சுட்டாள். சட்டியைக் கொண்டு வந்து பணியாரங்களைக் கொட்டி,அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; அவனோ சாப்பிட மாட்டேன் என்றான்;பின்பு அம்னோன், எல்லாரும் என்னை விட்டு வெளியே போகட்டும் என்று சொல்ல,அவனை விட்டு எல்லோரும் வெளியே போய் விட்டார்கள். அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படி அந்தப் பணியாரங்களை உள்ளறைக்குக் கொண்டு வா என்றான். அப்படியே தாமார்தான் செய்த பணியாரங்களை உள்ளறைக்குத் தன் சகோதரனாகிய அம்னோனிடம் கொண்டு போனாள். அவன் சாப்பிடும்படி அவள் அவைகளை கிட்டக் கொண்டு வருகையில்,அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து, என் சகோதரியே, நீ வந்து என்னோடு சயனி என்றான். அதற்கு அவள், வேண்டாம் என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே. இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்ய வேண்டாம். நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்; நீயும் இஸ்ரவேலர்களில் மதிகேடரில் ஒருவனைப் போல் ஆவாய். நீ ராஜாவோடு பேசு. அவர்என்னை உனக்குத் தர மறுக்க மாட்டார்என்றாள். அவனோ அவள் சொல்லைக் கேளாமல் பலவந்தம் செய்து அவளோடு சயனித்து அவளைக் கற்பழித்தான். பிற்பாடு அவளை அம்னோன் மிகவும் அதிகமாய் வெறுத்தான்; முன் அவளை விரும்பின விருப்பத்திலும் பின் அவளை வெறுத்த வெறுப்பு அதிகம். ஆகவே, அவன் அவளிடம்: நீ எழுந்து போய்விடு என்று சொன்னான்.
(இரண்டாம் சாமுவேல் 13:1-15)
No comments:
Post a Comment