Friday 26 June 2020

சாதியத்தை வளர்த்த தமிழரசு கட்சியின் அரசியல் தோல்வி--

1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் ஒரு விசித்திரமான அறிக்கையை விடுத்தார். அதில் அவர், “தமிழ் மக்களைக் கடவுள்தான் இன்மேல் காப்பாற்ற வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

தமிழ் மக்களைக் காப்பாற்றும் பரமாத்மாக்களாக இருந்த தமிழரசுக் கட்சியினர் அந்தராத்மாக்களாக மாறி கடவுளின் மேல் பழியைப் போட்டது எதற்காக என்று விளங்காத சில தமிழ் தேசிய அறிவு சூன்யங்கள் இன்றும் எடுத்ததெற்கெல்லாம் செல்வநாயகம் சொன்ன வார்த்தைகளை மேற்கோள் காட்டி வருகின்றனர்.ஆனால் “தந்தை” என அழைக்கப்பட்டு வந்த செல்வநாயகம் ஏன் அன்று அப்படிச் சொன்னார்?

1970 பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ‘தளபதி’ என அழைக்கப்பட்டு வந்த அ.அமிர்தலிங்கம் வட்டுக்கோட்டைத் தொகுதியிலும், ‘விண்ணன்’ என அழைக்கப்பட்டு வந்த ஜீ.ஜீ.பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலும், ‘இரும்பு மனிதன்’ என அழைக்கப்பட்டு வந்த கிறிஸ்தவ டாக்டர் ஈ.எம்.வி.நாகநாதன் நல்லூர் தொகுதியிலும், ‘உடுப்பிட்டி சிங்கம்’ என அழைக்கப்பட்டு வந்த மு.சிவசிதம்பரம் உடுப்பிட்டித் தொகுதியிலும், ‘அடலேறு’ என அழைக்கப்பட்டு வந்த மு.ஆலாலசுந்தரம் கிளிநொச்சித் தொகுதியிலும் மக்களால் தோற்கடிக்கப்பட்டனர்.

தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் இந்தத் தலைவர்களுக்கு மக்கள் கொடுத்த தண்டனையைக் கண்டு பொறுத்துக் கொள்ளாத நிலையிலேயே செல்வநாயகம் கடவுளை நோக்கி அலறினார்.தமிழ் மக்கள் இந்த தலைவர்களுக்கு இத்தகைய தண்டனையைக் கொடுத்ததிற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று,

சிங்கள பெரும்பான்மை கட்சிகளுடன் பேரம் பேசி தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவது என்று தாமே வகுத்துக்கொண்ட கொள்கையைப் பிரயோகிக்க 1965இல் சந்தர்ப்பம் கிடைத்தும் அதைப் பயன்படுத்தாமல் தமது வர்க்க மற்றும் அரசியல் விசுவாசம் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்தமை.

இரண்டாவது காரணம்,

சைவசமயத்தில் சாதியம் உண்டு என்று கூறி தமிழர்களை பிரித்து மோதவைத்து அதன் ஊடாக கிறிஸ்தவ மதத்தை வளர்க்க வேண்டும் என்ற  நோக்கத்தின் அடிப்படையில்  கிறிஸ்தவ நிறுவனங்கள் மறைமுகமாக செல்வநாயகத்தின் ஆசியுடன்1966 – 70 ஆண்டு காலகட்டத்தில் வட பகுதியெங்கும் தீண்டாமைக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச – தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டங்களை தீவிரபடுத்தினாா்கள்
கிறிஸ்தவ நிறுவனங்கள்.தமிழரசு கட்சியை வழிநடாத்திய உங்களின் கிறிஸ்தவ லைவரான தந்தை செல்வா சொன்னாா் சமூகத்தில் இருந்து  சமய பிரச்சனையாக அடையாளப்படுத்தினாா் ஏன்?

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி  ஏறெடுத்தும் பார்க்காது மெளனம் காத்தாா்கள், சமரசம் செய்ய மறுத்தாா்கள், தங்களின் கடமையை செய்ய மறுத்தாா்கள் ஒதுக்கப்பட்டோம் என்று உணர்ந்த மக்களுக்கு தோள்கொடுக்க மறுத்தாா்கள் ,தங்களை தமிழ் தலைவர்கள் என்று அடையாளப்படுத்தியவர்கள் தங்கள் பொறுப்பில் இருந்து தவறினாா்கள்.
அன்று அவர்கள் கூறிய காரணம் தமிழரசு கட்சியுடன்  முரண்படத் தயாரில்லைஇல்லை என்பதாகும் இந்தக் கூற்றில் இருந்து வெளிப்படையாக தெரியவருவது தமிழரசு கட்சியின் தொழில்பாடாகும்.

அனைத்து தமிழர்களும் சாதியத்தை கடந்து 1970 தேர்தலின் போது தமிழ் தலைவர்களுக்கு தண்டனை வழங்கினர். எனவே மக்கள் வெறும் மந்தைக் கூட்டம் அல்லர், வேண்டிய போது சரியாகச் செயற்படவும் கூடியவர்கள் என்பதுதான் உண்மை.

 கிறிஸ்தவ மதத்தின் சாதிய வெறி என்ன?

ஒரு பைபில் , ஒரு சிலுவை ஆயீரம் பிாிவுகள்அதில் கத்தோலிக்கத்தில் வத்திக்கானில் போப்பாண்டவராக வெள்ளை நிறத்தோலை கொண்ட ஆண்கள் மட்டுமே வர முடியும். இவ்வாறு பெண்கள் வர முடியாது. நிறவெறி கொண்டதும், பெண்களுக்கான சமத்துவம் மறுக்கப்பட்டதுமான மதமே கிறிஸ்தவம். வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக, கொழும்பு பேராயராக சிங்கள மொழி பேசுகின்ற கத்தோலிக்கரே வரமுடியும்.  கிறிஸ்தவம் என்று பொங்குகின்ற தமிழர் என்றுமே வத்திக்கானின் இலங்கை பிரதிநிதியாக வரமுடியாது. தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப் ஆக தமிழ் பேசுகின்ற பெண்கள் என்றுமே வரமுடியாது.தமிழ் பேசுகின்ற கத்தோலிக்க விசப்பாக  உயர்சாதி வேளாளரே வரமுடியும். ஒவ்வொன்றும் சாதியின் அடிபடையிலே உருவாக்கப்பட்டவை ஒருவர் மற்றவரின்Church  க்குள் போக அனுமதிக்கப்படமாட்டாா்கள்.. இதனை தமிழரசு கட்சியினர் மறைத்தது ஏன்?
https://jaffnaviews.blogspot.com/2020/06/04.html



No comments:

Post a Comment